இரண்டாவது முறையாகவும் இலங்கை ரக்பி சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலங்கை சூப்பர் 7s அணிக்கு 7 பேர் கொண்ட ரக்பி போட்டித் தொடரில் முதலாம் கட்ட போட்டிகள் இன்று கண்டி நித்தவெல மைதானத்தில் ஆரம்பமாகியது.
இலங்கை ரக்பி சம்மேளனம் மற்றும் போட்டியின் பிரதான அனுசரனையாளரான டயலொக் அக்சியாடா ஆகியன இணைந்து நடாத்தும் இப்போட்டியில் கடந்த வருடம் பங்குபற்றிய 8 அணிகளான எக்சஸ் கிங்ஸ், காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ், எடிசலாட் பந்தர்ஸ், EZY வூல்வ்ஸ், KBSL ட்ரகன்ஸ், சொப்ட்லொஜிக் வொரியர்ஸ், மொபிடெல் ஈகல்ஸ் மற்றும் வாக்கர்ஸ் வைப்பர்ஸ் ஆகிய அணிகள் இவ்வருடமும் போட்டியிட்டன. அது மட்டுமல்லாது 19 வயதிற்கு உட்பட்ட 8 பாடசாலைகள் அணிகளும் இன்று போட்டியில் பங்குபற்றின.
முதன் முறையாக கண்டி நகரில் சூப்பர் 7s போட்டிகள் நடைபெற்றதோடு, இம்முறை மிகவும் கோலாகலமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இம்முறை உள்நாட்டு வீரர்களுடன் பல வெளிநாட்டு வீரர்களும் இப்போட்டித் தொடரில் பங்குபற்றினர்.
அந்தவகையில் பீஜி நாட்டிலிருந்து 10 வீரர்களும், கென்ய நாட்டிலிருந்து 7 வீரர்களும், தென் ஆபிரிக்க வீரர்கள் 4 பேர், சமோஆ நாட்டிலிருந்து 3 வீரர்கள் மற்றும் அமெரிக்க வீரர் உள்ளடங்கலாக பல வீரர்கள் இன்று நடைபெற்ற போட்டியில் தமது திறமையை வெளிப்படுத்தியதால் போட்டிகள் விறுவிறுப்பாக அமைந்தன.
முதலாம் நாளான இன்று கழக அணிகள் மற்றும் பாடசாலை அணிகள் குழு மட்ட போட்டிகளில் பங்குபற்றியதுடன், பாடசாலை அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டிகளும் இன்று நடைபெற்றது. அவ்வகையில் கழக அணிகள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழு மட்ட போட்டிகள் நடைபெற்றதுடன், பாடசாலை அணிகளும் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழுமட்டப் போட்டிகள் நடைபெற்றன.
கழக மட்டம்
A | B |
வாக்கர்ஸ் வைப்பர்ஸ் | எக்சஸ் கிங்ஸ் |
காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் | KBSL ட்ரகன்ஸ் |
EZY வூல்வ்ஸ் | சொப்ட்லொஜிக் வொரியர்ஸ் |
எடிசலாட் பந்தர்ஸ் | மொபிடெல் ஈகல்ஸ் |
இலங்கை ரக்பியில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடிவு
பாடசாலை மட்டம்
A | B |
புனித ஜோசப் கல்லூரி | திரித்துவக் கல்லூரி |
புனித பேதுரு கல்லூரி | புனித அந்தோனியார் கல்லூரி |
இசிபதன கல்லூரி | கிங்ஸ்வூட் கல்லூரி |
தர்மராஜ கல்லூரி | கல்கிஸ்ஸ விஞ்ஞான கல்லூரி |
பாடசலை அணிகளுக்கிடையிலான போட்டிகளுடன் இன்றைய நாள் சிறப்பாக ஆரம்பித்தது. இடையிடையே மழை குறுக்கிட்டாலும் போட்டியின் வேகத்தை மழையினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பாடசலை அணிகளுக்கிடையிலான போட்டிகளில் குழு A இல் புனித ஜோசப் கல்லூரியும், குழு B இல் திரித்துவக் கல்லூரியும் ஆதிக்கம் செலுத்தின. அவ்வகையில் திரித்துவக் கல்லூரி குழு B இல் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று, குழு B இல் முதலாம் இடத்தை பிடித்தது. மறுமுனையில் புனித ஜோசப் கல்லூரியானது தர்மராஜ கல்லூரியுடனான போட்டியை சமநிலையில் முடித்தாலும், குழு A இல் முதலாம் இடத்தைப் பிடித்தது. இலங்கை ரக்பி மன்னர்கள் என அழைக்கப்படும் இசிபதன கல்லூரியானது அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்று ஏமாற்றம் அளித்தனர். குழு மட்ட போட்டிகளின் பின்னர் அணிகளின் தரவரிசை பின்வருமாறு,
A | B |
புனித ஜோசப் கல்லூரி | திரித்துவக் கல்லூரி |
புனித பேதுரு கல்லூரி | கல்கிஸ்ஸ விஞ்ஞான கல்லூரி |
தர்மராஜ கல்லூரி | புனித அந்தோனியார் கல்லூரி |
இசிபதன கல்லூரி | கிங்ஸ்வூட் கல்லூரி |
கழக மட்ட போட்டிகளில் கடந்த வருடம் சம்பியனான மொபிடெல் ஈகல்ஸ் அணியானது இம்முறையும் கிண்ணத்தைக் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியது. அதுபோலவே சிறப்பாக செயற்பட்டு இம்முறையும் தமது குழுவில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. குழு A இல் போட்டி சிறிது கடினமாக காணப்பட்டது. காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் மற்றும் எடிசலாட் பந்தர்ஸ் ஆகிய அணிகள் குழு A இல் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் அணியானது முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. சொப்ட்லொஜிக் வொரியர்ஸ் அணியினால் இன்றைய தினத்தில் எந்தவொரு வெற்றியையும் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.
பலம் மிக்க வெளிநாட்டு வீரர்களுடன் உள்நாட்டு நட்சத்திர வீரர்களும் மோதிக்கொண்ட இப்போட்டிகளில், வெறும் 19 வயதே நிரம்பிய புனித தோமியர் கல்லூரித் தலைவரான நவீன் ஹெனகங்கணமகே சிறப்பாக விளையாடி அதிகூடிய ட்ரை வைத்தவர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். எடிசலாட் பந்தர்ஸ் அணி சார்பாக விளையாடிய நவீன் அவ்வணி சார்பாக 5 ட்ரைகள் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நவீன் ஹெனக்கன்கனம்கேயின் அபார ஆட்டத்தினால் புனித தோமியர் கல்லூரி சம்பியன்
குழுமட்ட போட்டிகளின் பின்னர் தரவரிசை
A | B |
காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் | மொபிடெல் ஈகல்ஸ் |
எடிசலாட் பந்தர்ஸ் | KBSL ட்ரகன்ஸ் |
வாக்கர்ஸ் வைப்பர்ஸ் | எக்சஸ் கிங்ஸ் |
EZY வூல்வ்ஸ் | சொப்ட்லொஜிக் வொரியர்ஸ் |
பாடசாலை அணிகளுக்கிடையிலான காலிறுதி போட்டிகள்
இன்றைய தினத்தில் இறுதி அம்சமாக பாடசாலை அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள், கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதுடன், தோல்வியுற்ற அணிகள் ஷீல்ட் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
அவ்வகையில் முதலாவது காலிறுதிப் போட்டியே மிக அதிர்ச்சிகரமாக அமைந்தது. குழு மட்ட போட்டிகளில், A குழுவில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற புனித ஜோசப் கல்லூரியானது, B குழுவில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்ற கிங்ஸ்வூட் அணியிடம் தோல்வியுற்று கிண்ணத்திற்கான போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து விஞ்ஞான கல்லூரியானது தர்மராஜ கல்லூரியை இலகுவாக வெல்ல, புனித பேதுரு கல்லூரியானது அந்தோனியார் கல்லூரியை இலகுவாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இறுதி காலிறுதிப் போட்டியில் திரித்துவக் கல்லூரியானது இசிபதன கல்லூரியை இலகுவாக வென்றது.
இரண்டாம் நாளான நாளை 9ஆம் திகதி போட்டிகள் கழக காலிறுதிப் போட்டிகளுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பாடசாலை அணிகளுக்கு இடையிலான அரையிறுதியும் நடைபெறவுள்ளது. அத்தோடு பெண்களுக்கான ரக்பி போட்டிகளும் நடைபெறவுள்ளதுடன், 4 அணிகள் பெண்கள் பிரிவில் மோதவுள்ளன.
முதலாம் நாள் போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு
No | Match | Team 1 | Score 1 | Score 2 | Team 2 |
---|---|---|---|---|---|
01 | SCH A-1 vs SCH A-4 | Isipathana College | 14 | 17 | St. Peter's College |
02 | SCH A-2 vs SCH A-3 | Dharmaraja College | 19 | 19 | St. Joseph's College |
03 | SCH B-1 vs SCH B-4 | St. Anthony's College | 12 | 7 | Kingswood College |
04 | SCH B-2 vs SCH B-3 | Trinity College | 22 | 17 | Science College |
05 | FA-1 vs FA-4 | Walkers CML Vipers | 12 | 19 | Cargills Gladiators |
06 | FA-2 vs FA-3 | EZY Wolves | 17 | 19 | Etisalat Panthers |
07 | FB-1 vs FB-4 | Access Kings | 12 | 26 | Mobitel Eagles |
08 | FB-2 vs FB-3 | KBSL Dragons | 22 | 19 | Softlogic Warriors |
09 | SCH A-1 vs SCH A-3 | Isipathana College | 10 | 14 | St. Joseph's College |
10 | SCH A-2 vs SCH A-4 | Dharmaraja College | 5 | 31 | St. Peter's College |
11 | SCH B-1 vs SCH B-3 | St. Anthony's College | 19 | 33 | Science College |
12 | SCH B-2 vs SCH B-4 | Trinity College | 17 | 10 | Kingswood College |
13 | FA-1 vs FA-3 | Walkers CML Vipers | 7 | 26 | Etisalat Panthers |
14 | FA-2 vs FA-4 | EZY Wolves | 26 | 05 | Cargills Gladiators |
15 | FB-1 vs FB-3 | Access Kings | 17 | 14 | Softlogic Warriors |
16 | FB-2 vs FB-4 | KBSL Dragons | 21 | 24 | Mobitel Eagles |
17 | SCH A-1 vs SCH A-2 | Isipathana College | 19 | 22 | Dharmaraja College |
18 | SCH A-3 vs SCH A-4 | St. Joseph's College | 26 | 0 | St. Peter's College |
19 | SCH B-1 vs SCH B-2 | St. Anthony's College | 15 | 24 | Trinity College |
20 | SCH B-3 vs SCH B-4 | Science College | 28 | 5 | Kingswood College |
21 | FA-1 vs FA-2 | Walkers CML Vipers | 17 | 14 | EZY Wolves |
22 | FA-3 vs FA-4 | Etisalat Panthers | 15 | 19 | Cargills Gladiators |
23 | FB-1 vs FB-2 | Access Kings | 15 | 26 | KBSL Dragons |
24 | FB-3 vs FB-4 | Softlogic Warriors | 5 | 14 | Mobitel Eagles |
25 | SCH/Cup Q/F-1 | St. Joseph's College | 12 | 17 | Kingswood College |
26 | SCH/Cup Q/F-2 | Dharmaraja College | 19 | 31 | Science College |
27 | SCH/Cup Q/F-3 | St. Peter's College | 24 | 07 | St. Anthony's College |
28 | SCH/Cup Q/F-4 | Isipathana College | 21 | 31 | Trinity College |
இரண்டாம் நாள் போட்டிகள் அட்டவணை
No | Match | Team 1 | Score 1 | Score 2 | Team 2 |
---|---|---|---|---|---|
29 | Womens-1 | Army SC | 53 | 00 | CR&FC |
30 | Womens-2 | Navy SC | 36 | 7 | Air Force SC |
31 | F/Cup Q/F-1 | Cargills Gladiators | 14 | 24 | Softlogic Warriors |
32 | F/Cup Q/F-2 | Walkers CML Vipers | 24 | 0 | K B S L Dragons |
33 | F/Cup Q/F-3 | Etisalat Panthers | 14 | 19 | Access Kings |
34 | F/Cup Q/F-4 | EZY Wolves | 5 | 7 | Mobitel Eagles |
35 | SCH Bowl/Shield SF1 | St. Joseph's College | 19 | 12 | Dharmaraja College |
36 | SCH Bowl/Shield SF2 | St. Anthonys College | 22 | 12 | Isipathana College |
37 | SCH Cup/Plate SF1 | Kingswood College | 07 | 33 | Science College |
38 | SCH Cup/Plate SF2 | St. Peter's College | 19 | 22 | Trinity College |
39 | Womens-3 | Army SC | 24 | 0 | Air Force SC |
40 | Womens-4 | Navy SC | 55 | 0 | CR&FC |
41 | F/ Bowl/Shield SF1 | Cargills Gladiators | 12 | 22 | K B S L Dragons |
42 | F/ Bowl/Shield SF2 | Etisalat Panthers | 14 | 17 | EZY Wolves |
43 | F/ Cup/Plate SF1 | Softlogic Warriors | 20 | 14 | Walkers CML Vipers |
44 | F/ Cup/Plate SF2 | Access Kings | 05 | 07 | Mobitel Eagles |
45 | SCH/Shield Final | Dharmaraja College | 15 | 12 | Isipathana College |
46 | F/Shield Final | Etisalat Panthers | 17 | 00 | Cargills Gladiators |
47 | SCH/Bowl Final | St. Joseph's College | 14 | 22 | St. Anthony's College |
48 | F/Bowl Final | K B S L Dragons | 14 | 19 | EZY Wolves |
49 | SCH/Plate Final | Kingswood College | 19 | 19 | St. Peters College |
50 | Womens-5 | Air Force SC | 35 | 05 | CR&FC |
51 | F/Plate Final | Walkers CML Vipers | 07 | 31 | Access Kings |
52 | SCH Finals | Science College | 19 | 05 | Trinity College |
53 | Womens-6 | Army SC | 24 | 00 | Navy SC |
54 | F/Cup Finals | Softlogic Warriors | 05 | 19 | Mobitel Eagles |