இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு, யாழ்ப்பாண அணிகள்

224

52 ஆவது முறையாக நடைபெறும் சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் யாவும் இன்று (26) மட்டக்களப்பின் வெவ்வேறு கூடைப்பந்து அரங்குகளில் நிறைவுக்கு வந்திருக்கின்றன. 

இதில் ஆண்கள் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டிகள் மியானி கூடைப்பந்து அரங்கில் நடைபெற்றன. 

அரையிறுதியில் ஆடவுள்ள மட்டக்களப்பு, யாழ்ப்பாண அணிகள்

52 ஆவது முறையாக நடைபெறும்…..

இதில் முதல் அரையிறுதியில், மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணி, அனுராதபுர வீரர்களை எதிர்கொண்டிருந்தது. விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாது அமைந்த இந்த மோதலின் முதல் கால்பகுதியினை மைதான அணியான மட்டக்களப்பு, 11-15 என்ற புள்ளிகள் கணக்கில் தமக்கு சொந்தமாக்கியது. பின்னர், போட்டியின் அடுத்த இரண்டு கால்பகுதிகளிலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புச் செய்த மட்டக்களப்பு அணி, குறித்த கால்பகுதிகள் இரண்டினையும் 23-30 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து, போட்டியின் இறுதிக்கால்பகுதியில் அனுராதபுர அணி 09-10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்ற போதிலும், முன்னைய கால்பகுதிகளில் மட்டக்களப்பு அணி பெற்ற புள்ளிகள் அவர்கள் சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தெரிவாக போதுமாக இருந்தது. அதன்படி, மட்டக்களப்பு அணி அனுராதபுர வீரர்களை 54-44 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது.  

ஆண்கள் பிரிவுக்கான மற்றைய காலிறுதியில், யாழ்ப்பாண மாவட்ட ஆண்கள் அணி கண்டி வீரர்களை எதிர்கொண்டது. யாழ்ப்பாண வீரர்களுடனான மோதலில், கண்டி வீரர்கள் போராட்டம் காண்பித்த போதிலும் முதல் கால்பகுதி 13-11 என்ற புள்ளிகள் கணக்கில் யாழ். அணி வசமானது.

Photos: 52nd Senior National Level II Basketball Championship Day 03 – Semi Finals

தொடர்ந்து, போட்டியின் எஞ்சிய கால்பகுதிகளிலும் அசத்தல் காண்பித்த யாழ்ப்பாண அணி குறித்த கால்பகுதிகளினை 17-13, 18-17, 24-04 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி 73-46 என 27 புள்ளிகள் வித்தியாசத்தில் ஆண்கள் பிரிவுக்கான இரண்டாவது அரையிறுதியின் வெற்றியாளர்களாக மாறியது. 

அதேநேரம், கிழக்கு பல்கலைக்கழக கூடைப்பந்து அரங்கில் நடைபெற்ற பெண்கள் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டிகளில் முதல் அரையிறுதியில் கண்டி மாவட்ட அணி, பொலன்னறுவை அணியினை 30-10 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்ததோடு, இரண்டாவது அரையிறுதியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினை பல்கலைக்கழக இணைப்பபு பெண்கள் அணி 39-20 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. 

ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் அசத்திய கண்டி

சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய….

சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள், பெண்கள் பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிகளும், மூன்றாம் இடத்திற்கான போட்டிகளும் இன்று மாலை மியானி கூடைப்பந்து அரங்கிலும், மட்டக்களப்பு ஹேபர்ட்ட அரங்கிலும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் பற்றிய ஏனைய விபரங்களை அறிந்து கொள்ள ThePapare.com உடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<