இம்முறை வர்த்தக நிறுவன எழுவர் கால்பந்து தொடரில் 34 அணிகள் மோதல்

386

மூஸ் ஆடை நிறுவனத்தின் பிராதான அனுரணையில், வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 39வது வருடாந்த எழுவர் கால்பந்தாட்ட தொடர் எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அணிக்கு எழுவர் கொண்ட இந்த கால்பந்தாட்ட தொடர் கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் மைதானத்தில் 29ம் திகதி காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

FA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

இலங்கை கால்பந்து சம்மேளத்தின் (FFSL) ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த பருவத்திற்கான FA கிண்ண கால்பந்து…

இவ்வருடம் நடைபெறவுள்ள போட்டித் தொடரில், 8 குழுக்களாக (A,B,C,D,E,F,G,H)வகுக்கப்பட்டுள்ள 24 அணிகள் முறையே கிண்ணம், தட்டு (Plate)மற்றும் போவ்ல் (Bowl) ஆகியவற்றுக்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதேவேளை, இம்முறை புதிதாக இணைக்கப்பட்டுள்ள 10 அணிகள் கேடயத்துக்காகவும் போட்டியிடவுள்ளன.

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான இந்த போட்டித் தொடரில் மொத்தமாக 58 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 32 குழுநிலைப் போட்டிகளும், 26 நொக்அவுட் போட்டிகளும் அடங்கும். குழுநிலைப் போட்டிகளின் அடிப்படையில் A முதல் F வரையான குழுக்களில் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் சம்பியன் கிண்ணத்துக்கான அடுத்த சுற்றுப் போட்டிகளில் விளையாடும். இதில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிகள் தட்டுக்காகவும், மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிகள் போவ்லுக்காகவும் போட்டியிடும்.

இதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற இந்த போட்டித் தொடரில் எக்ஸ்போ லங்கா அணி சம்பியன் கிண்ணத்தை வென்றதுடன், எல்.பி.பினான்ஸ் அணி இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Photos: 39th Annual 7-a-side Mercantile Football Tournament

ThePapare.com | Dinushki Ranasinghe | 21/09/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be…

போட்டித் தொடருக்கான குழுக்களின் விபரம்

Group A Group B Group C Group D Group E Group F Group G Group H
Lake House Galadari Hotel DFCC Bank Commercial Credit Nations Trust Bank Ceylinco Insurance LB Finance Standard Chartered Bank
HSBC Seylan Bank Commercial Bank John Keells Dialog WNS Global HNB Commercial Leasing
Smart Shirts Virtusa Sampath Bank Akbar Brothers Expo Lanka Softlogic Sri Lanka Telecom Amana Bank

 

புதிய 10 அணிகளுக்கான குழுக்களின் விபரம்

Group K Group L Group M Group N
JAIC Hilton MAS Holdings AIA Insurance United Tobacco
CW Mackie Fair First Insurance PickMe NoLimit
Eskimo Fashions ITX 360

 

 >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<