அஷ்வின் மீண்டும் அபாரம், மேற்கிந்திய அணி பாரிய நெருக்கடியில்

190
2nd Test - WI vs Ind Day 1
@ AFP

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நேற்று ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன் படி முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி அஷ்வின் சுழலில் தாக்குப்பிடிக்க முடியாமல் 196 ஓட்டங்களுக்கு சுருண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக  பிளாக்வுட் 62 ஓட்டங்களையும், செம்வல்ஸ் 37 ஓட்டங்களையும், கமின்ஸ் 24 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமழும் பெற்றனர்.

இந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 5 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். இஷாந்த், ஷமி தலா 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 126 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. இதில் லோகேஷ் ராஹுல் ஆட்டம் இழக்காமல் 75  ஓட்டங்களையும் புஜாரா ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்று இருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் 196/10

ப்ளாக்வூட் 62, சாமுவேல்ஸ 37 கமின்ஸ் 24*, ரவி அஷ்வின் 52/5, மொஹமத் ஷமி 23/2, இஷாந்த் சர்மா 53/2

இந்தியா 126/1

லோகேஷ் ராஹுல் 75* ,  புஜாரா 18*, தவான் 27, செஸ் 27/1

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்