உஸ்பகிஸ்தானின் கோல் மழையை தடுத்த சுஜான்

1223
Sri Lanka’s Chamod Dilshan (L) & Uzbekistan’s captain Eldor Shomurodov (R) tussling for the ball in their AFC Asian Cup qualifiers 2023 – 3rd Round match

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசிய கிண்ண தகுதிகாண் மூன்றாம் சுற்றின் தமது முதல் போட்டியில் இலங்கை அணி உஸ்பகிஸ்தான் அணியிடம் 3-0 என தோல்வி கண்டுள்ளது.

இந்த தொடரில் C குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, தமது முதல் போட்டியை செவ்வாய்க்கிழமை (8) வரவேற்பு நாடான உஸ்பகிஸ்தானுடன் மர்கஸிய் அரங்கில் விளையாடியது.

இலங்கை முதல் பதினொருவர் 

போட்டி ஆரம்பமாகிய முதல் 10 நிமிடங்களில் உஸ்பகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து கோலுக்கு மேற்கொண்ட இரண்டு வாய்புக்களை சுஜான் சிறந்த முறையில் நிறுத்தினார்

இலங்கை அணிக்கு முதல் 15 நிமிடங்களில் முதலாவது பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. எதிரணியின் எல்லையில் ஒரு திசையில் இருந்து சபீர் ரசூனியா உள்ளனுப்பிய பந்தை இலங்கை வீரர்கள் எவரும் சிறந்த முறையில் ஹெடர் செய்ய முன்வராமையினால் பந்து கோல் காப்பாளருக்கு சென்றது. இதுவே இலங்கை அணிக்கு முதல் பாதியில் கிடைத்த ஒரே வாய்ப்பாக அமைந்தது.

மீண்டும் சில நிமிடங்களில் உஸ்பகிஸ்தான் சக வீரர்  சுகுரொவ் மத்திய களத்தில் இருந்து செலுத்திய பந்தை சய்பிய் ஹோடர் செய்யும்போது சுஜான் வேகமாக செயற்பட்டு அதனை தடுத்தார்.

போட்டியில் 30 நிமிடங்கள் கடந்த நிலையில் மீண்டும் உஸ்பகிஸ்தான் வீரர் உள்ளனுப்பிய பந்தை அணித் தலைவர் சுமொரடொவ் கோலுக்கும் செலுத்தும்போது அந்த வாய்ப்பையும் சுஜான் முறியடித்தார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் இலங்கை கோல் எல்லைக்கு வெளியில் இலங்கை வீரரின் கையில் பந்து பட்டமைக்காக உஸ்பகிஸ்தான் அணிக்கு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இலங்கையின் தடுப்பிற்கு ஆறு வீரர்கள் இருந்த நிலையில், கோலின் வலது பக்க கம்பத்தினால் பந்தை வேகமாக செலுத்திய மஷாரிபோவ் போட்டியின் முதல் கோலை உஸ்பகிஸ்தான் அணிக்கு பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து 45ஆவது நிமிடத்தில் உஸ்பகிஸ்தானின் அமெனொவ் கோல் எல்லையில் இருந்து பந்தைப் பெற்று கோலின் வலது கம்ப திசையூடாக கோல் நோக்கி உதைய அதனையும் சுஜான் பாய்ந்து வெளியே தட்டினார்.

எனவே, முதல் பாதியில் சுஜான் பெரேரா மேற்கொண்ட அபாரத் தடுப்புக்கள் காரணமாக உஸ்பகிஸ்தான் வீரர்களால் ஒரே ஒரு கோலை மாத்திரமே பெற முடிந்தது.

முதல் பாதி: உஸ்பகிஸ்தன் 1 – 0 இலங்கை

இரண்டாம் பாதி ஆரம்பமாகி ஒரு நிமிடம் கடந்த நிலையில் உஸ்பகிஸ்தானுக்கு கோல் எல்லைக்கு சற்று வெளியில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை கம்டமொவ் பெற்றார். அவர் உதைந்த பந்து தடுப்பு வீரர்களுக்கு மேலால் வந்து கம்பங்களுக்குள் சென்று கோலாக மாறியது.

மீண்டும் அடுத்த சில நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து சுகுரொவ் கோல் நோக்கி உதைந்த பந்தை சுஜான் தடுத்தார்.

போட்டியின் 60ஆவது நிமிடத்தில் இலங்கை கோல் எல்லையில் வைத்து உஸ்பகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து மேற்கொண்ட கோல் முயற்சிகளின்போது  சுஜான் இரண்டு தடவைகள் பந்தை தடுத்தார். எனினும், இறுதியில் சய்பீவ் கோலுக்குள் இடது பக்கத்தில் இருந்து பந்தை வேகமாக கம்பங்களுக்குள் செலுத்தி அணிக்கான மூன்றாவது கோலைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்ட சொந்த மைதான தரப்புக்காக 80ஆவது நிமிடத்தில் சுகுரொவ் மத்திய களத்தில் இருந்து நேராக கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தையும் சுஜான் தடுத்தார்.

எனவே, மிகவும் ஆக்ரோசமாகவும் நேர்த்தியாகவும் இருந்த அணித் தலைவர் சுஜான் பெரேராவின் தடுப்புக்கு மத்தியில் உஸ்பகிஸ்தான் அணிக்கு தமது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் இலங்கைக்கு எதிராக 3 கோல்களை மாத்திரமே பெற முடிந்தது.

முதல் போட்டியை 3-0 என தோல்வியுற்றுள்ள இலங்கை அணி எதிர்வரும் 11ஆம் திகதி தாய்லாந்தையும் 14ஆம் திகதி மாலைதீவுகளையும் எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: உஸ்பகிஸ்தன் 3 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

  • உஸ்பகிஸ்தன் – J. மஷாரிபோவ் 36‘,  கம்டமொவ் 47 , பர்ருக் சய்பீவ் 60‘

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

  • இலங்கை – சுஜான் பெரேரா 45+1’, அசிகுர் ரஹ்மான் 90+6’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<