இரசிகர்கள் மூலம் சாதனை படைத்த 2019ஆம் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்

98

நடைபெற்று முடிந்த 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரே, இதுவரையில் அதிக இரசிகர்கள் மூலம் பார்வையிடப்பட்ட ஐ.சி.சி. இன் கிரிக்கெட் தொடராக புதிய சாதனையினை நிலை நாட்டியுள்ளது. 

பாக். வீரர்களுக்கு பிரியாணி, பர்கர் சாப்பிடத் தடை

உள்நாட்டு தொடரில் விளையாடும் பாகிஸ்தான் ………

நேரடி அஞ்சல் செய்யப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரினை 160 கோடி இரசிகர்கள் பார்வையிட்டதே இந்த புதிய சாதனைக்கு பிரதான காரணமாகும். 

நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரை 2015ஆம் ஆண்டு  உலகக் கிண்ணத் தொடரை கண்டுகளித்த இரசிகர்களை விட 38% அதிகமான இரசிகர்கள் கண்டு களித்திருக்கின்றமையும் புதிய சாதனைக்கு ஏனைய காரணமாகும்.  

அதோடு, 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர், 2015ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரை விட 42% அதிக மணிநேரங்கள் இரசிகர்கள் மூலம் பார்வையிடப்பட்ட கிரிக்கெட் தொடராகவும் அமைகின்றது.  

இன்னும் 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரினை பூகோள ரீதியில் 13.7 பில்லியன் மணித்தியாலயங்கள் வரை இரசிகர்கள் பார்வையிட்டிருக்கின்றனர். இந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரினை விட 72% அதிகமாகும். 

நடைபெற்று முடிந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அதிக இரசிகர்கள் பார்வையிட்ட போட்டியாக, இந்திய – பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதல் அமைந்திருந்தது. இந்தப் போட்டியினை 273 மில்லியன் இரசிகர்கள் தொலைக்காட்சியில் பார்வையிட்டதோடு, 50 மில்லியன் இரசிகர்கள் டிஜிடல் ஊடகங்கள் மூலம் பார்வையிட்டிருந்தனர். 

இந்த உலகக் கிண்ணத் தொடரின் இரசிகர்கள் பட்டாளம் இந்திய மண்ணிலிருந்தே அதிகமாக வந்திருந்தது. அந்தவகையில், இந்திய நாட்டிலிருந்து கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை தொலைக்காட்சி மூலமும், ஏனைய டிஜிடல் ஊடகங்களின் மூலமும் 545 மில்லியன் இரசிகர்கள் கண்டு களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரினை இலங்கையில் இருந்து 100 மில்லியன் வரையிலான இரசிகர்கள் பார்வையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை விட 15% அதிகமாகும்.  

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேரடி ஒளிபரப்பு ஏனைய தொடர்களை விட தொழில்நுட்ப ரீதியில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<