புனித பேதுரு கல்லூரிக்காக சகல துறைகளிலும் அசத்திய சந்துஷ்

97

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ் பாடசாலை (டிவிஷன்–I) அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில், இன்று (13) நடைபெற்று முடிந்த கொழும்பு நாலந்த  மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரிகள் இடையிலான போட்டி சமநிலை அடைந்தது.

அதிரடி பந்துவீச்சால் ஜனாதிபதி கல்லூரியை வீழ்த்திய ஸாஹிரா கல்லூரி

கொழும்பு ஸாஹிரா கல்லூரி தனது அதிரடி பந்துவீச்சு மூலம் ஜனாதிபதி கல்லூரிக்கு எதிரான சிங்கர் அனுசரணையில் நடைபெறும்….

நேற்று (12) ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித பேதுரு கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நாலந்த கல்லூரி வீரர்களுக்கு வழங்கியது.

இதன்படி முதலில் துடுப்பாடிய நாலந்த அணி 85.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 241 ஓட்டங்களை குவித்தது. நாலந்த கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பாக லக்ஷித ரசஞ்சன அரைச்சதம் தாண்டி 78 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதேநேரம், புனித பேதுரு கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக சந்துஷ் குணத்திலக்க வெறும் 10 ஓட்டங்களை விட்டுத்தந்து 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

இதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய புனித பேதுரு கல்லூரி அணி 99.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 302 ஓட்டங்களைப் பெற்றது. பேதுரு கல்லூரி சார்பான துடுப்பாட்டத்தில் பானுக்க டி சில்வா 80 ஓட்டங்கள் பெற்றதோடு, ஏற்கனவே பந்துவீச்சில் ஜொலித்த சந்துஷ் குணத்திலக்க 79 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேநேரம் சிவான் பெரேராவும் அரைச்சதம் ஒன்றினை (69) பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காது நின்றது குறிப்பிடத்தக்கது.

தனது இடத்தை பெறும் பந்து வீச்சாளருக்கு அறிவுரை வழங்கிய ரங்கன ஹேரத்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஓய்வுபெற்ற பின்னர், டெஸ்ட் போட்டிகளில்……

மறுமுனையில், நாலந்த கல்லூரியின் பந்துவீச்சில் ரவீன் டி சில்வா 75 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், 61 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நாலந்த கல்லூரி அணி 41 ஓட்டங்களுக்கு விக்கெட் எதனையும் பறிகொடுக்காது காணப்பட்ட போது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், ஆட்டம் சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 241 (85.2) லக்ஷித ரசஞ்சன 78, சந்துஷ் குணத்திலக்க 3/10

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 302 (99.4) பானுக்க டி சில்வா 80, சந்துஷ் குணத்திலக்க 79, சிவான் பெரேரா 69*, ரவீன் டி சில்வா 6/75

நாலந்த கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 41/0 (7)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (புனித பேதுரு கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<