அதிகம் பேசப்படாத இலங்கையின் நாயகன் டில்ஹார பெர்னாண்டோ

540
Image Courtesy – Espncricinfo

இலங்கை கிரிக்கெட் அணி இப்போது பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், நம்பமுடியாத வெற்றிகளை தருவதில் இலங்கை அணிக்கு நிகர் இலங்கை அணியேதான். இதனை யாராலும் மறுக்க முடியாது. இலகுவாக வெற்றிபெற வேண்டிய போட்டியை மிகவும் விறுவிறுப்பாக்குவதும், கடினமான போட்டிகளில் இறுதிவரை போராடுவதும் இலங்கை கிரிக்கெட்டின் பொதுவான பண்பு.

வேகப் பந்துவீச்சில் மிரட்டி சாதித்துக் காட்டிய சமிந்த வாஸ்

உலகக் கிண்ண அரங்கில் தனது வேகப் பந்துவீச்சு மந்திரத்தால் எதிரணிகளை திணறடித்தவர் தான் இலங்கை அணியின்

காலங்களிலோ அல்லது வீரர்களிலோ மாற்றங்கள் ஏற்பட்டாலும் செய்ய முடியாத ஒன்றை செய்துக்காட்டுவதை இலங்கை கிரிக்கெட் அணி வாடிக்கையாக வைத்திருக்கின்றது. இல்லை! குமார் சங்க்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் காலத்துக்கு முன்னரே இலங்கை அணியின் போராட்ட குணம் போய்விட்டது என்ற நினைப்பு நமக்குள் எழலாம்.

ஆனால், இறுதியாக இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஷ் கிண்ணத் தொடரில் சங்கக்கார மற்றும் மஹேல இல்லாத இலங்கை அணி, பலமான இந்திய அணியை 300 இற்கும் அதிகமான ஓட்டங்களை துரத்தியடித்து வெற்றிக்கண்டமையும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்தப் போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெற்றும் இறுதிவரை போராடியமையும் இலங்கை அணி மீதான நம்பிக்கையை இன்றும் எடுத்துக்காட்டுகிறது.

இப்படி பல சுவாரஷ்யமான போட்டிகளை தந்த இலங்கை அணியின், 2007ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் இரசிகர்களுக்கு அதீத சுவாரஷ்யம் தரக்கூடிய தொடராக அமைந்திருந்தது. பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தமை, லசித் மாலிங்கவின் நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகள் மற்றும் சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லாத போட்டிகள் என அனைவரின் கவனமும் இலங்கை அணியின் மீதுதான் திரும்பியிருந்தது.

Image Courtesy – Espncricinfo

குறித்த உலகக் கிண்ணத்தில் B குழுவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி, இந்தியா, பேர்முடா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தி தோல்வியில்லாத அணியாக சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. சுப்பர் 8 சுற்றுவரை இலகுவாக முன்னேறிய இலங்கை அணி, தங்களுடைய மாயாஜாலத்தை காட்டிய போட்டிதான் இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 8 போட்டி.

சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியிடம் தோல்வியடைந்திருந்தாலும், மாலிங்கவின் மிரட்டல் பந்துவீச்சு இலங்கை அணியின் பலத்தை தெளிவாக எதிரணிகளுக்கு காட்டியிருந்தது. அடுத்தப் போட்டியில், மேற்கிந்திய தீவுகளை 113 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியை இலங்கை பதிவுசெய்தது.

மூன்றாவது போட்டி, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி. இலங்கை கிரிக்கெட் இரசிகர்களால் இன்றும் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்தப் போட்டிதான், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டில்ஹார பெர்னாண்டோவை இலங்கை இரசிகர்கள் கொண்டாட வைத்த போட்டியாக மாறியிருந்தது. இலங்கை அணியின் போராட்ட குணத்தையும், வெற்றிப் பசியினையும் உலக இரசிகர்களுக்கு எடுத்துக்காட்டிய இந்தப் போட்டியானது இலங்கை இரசிகர்களை கொண்டாட்டத்திலும், இங்கிலாந்து இரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது.

Image Courtesy – ABC

மேற்கிந்திய தீவுகளின் சேர் விவ்யன் ரிச்சட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகிய இலங்கை அணியின் மூன்றாவது சுப்பர் 8 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட்டது.

இலங்கையின் உலகக் கிண்ண நாயகன் – சனத் ஜயசூரிய

மிக வேகமாக ஓட்டங்கள் குவிக்கப்படும் T20 போட்டிகளின் பிதா என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர

இவ்வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து, அந்த அணி சம்பியன் கிண்ணம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் மஹேல ஜயவர்தன. கிரிக்கெட்டின் நுட்பங்களை அணு அணுவாக அறிந்துவைத்திருந்த மஹேலதான் குறித்த வருடத்தில் இலங்கை அணியின் தலைவர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளில் அதிசிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த இலங்கை அணிக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. இம்முறை உலகக் கிண்ண குழாத்துக்குள் அழைக்கப்படாத உபுல் தரங்க மற்றும் மஹலே ஜயவர்தன ஆகியோர் அரைச்சதம் கடந்தும் அணியால் 235 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

பெறக்கூடிய வெற்றியிலக்காக இருந்த போதும், சமிந்த வாஸ் மற்றும் லசித் மாலிங்கவின் பந்து வீச்சு ஜோடி, இங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை பெவிலியன் நோக்கி அனுப்பினர். எனினும், இதற்கு பின்னர் வருகைத்தந்த இங்கிலாந்து அணியின் மத்தியவரிசை வீரர்கள் இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

Image Courtesy – Espncricinfo

ஆனால், வெற்றியை இலகுவாக விட்டுக்கொடுக்க தயாரில்லாத இலங்கை அணி அபார பந்து வீச்சை வெளிப்படுத்த, இங்கிலாந்து அணி 133 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், குறித்த காலப்பகுதியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர சகலதுறை வீரராக இருந்த ரவி பொப்பாரா மற்றும் விக்கெட் காப்பாளர் போல் நிக்ஸன் ஆகியோர் 7வது விக்கெட்டுக்காக சிறப்பான இணைப்பாட்டத்தை பகிர இலங்கை அணியின் வெற்றிக்கனவு கேள்விக்குறியானது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 3 பந்து ஓவர்களுக்கு 32 ஓட்டங்களை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அணியின் 48வது ஓவரை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வீச, போல் நிக்ஸன் குறித்த ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்ரியை விளாசி ஓட்ட வேகத்தை அதிகரித்ததுடன், குறித்த ஓவரில் 13 ஓட்டங்கள் பெறப்பட்டன.

இப்போது, 12 பந்துகளுக்கு 19 ஓட்டங்கள். பந்து வீசுவதற்காக மாலிங்க அழைக்கப்பட்டார். இதற்கு முன்னர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்து வீச்சில் பிரகாசித்திருந்த மாலிங்க மீது எதிர்பார்ப்பு அதிகமானது. எதிர்பார்த்ததை போன்று, சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போல் நிக்ஸனின் விக்கெட்டினை மாலிங்க வீழ்த்தியதுடன், 7 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்திருந்தார்.

உலகக் கிண்ண வரலாற்றை பேசும் ஹெட்ரிக்-விக்கெட்டுகள்!

சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும் சாதனைகள் கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியிலும், வீரர்கள் மத்தியிலும் அதிகம் உற்சாகத்தை ஏற்படுத்தும்

போட்டி சூடுபிடித்தது. இரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்ப்பு மேலோங்கியது. 6 பந்துகளுக்கு 12 ஓட்டங்கள். இப்போது அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவின் மூலமாக  எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸிற்கு 2 ஓவர்கள் எஞ்சியிருக்கும் போதும், இறுதி ஓவரை வீசுவதற்கு டில்ஹார பெர்னாண்டோ அழைக்கப்பட்டார்.

இலங்கை அணியில் அப்போது இருந்த ஒரு கம்பீரமான வேகப்பந்து வீச்சாளர். அவரது பந்துவீச்சு பாணியும், உடற்கட்டமைப்பும், பந்து வீச்சு வேகமும் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும். அவர் வீசும் பௌண்சர் பந்துகளும், மிதவேக பந்துகளும் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒரு சவால்தான். ஆனாலும், அவர் தொடர்ச்சியாக சிறந்த பந்துகளை வீசுவதில் சற்று தடுமாற்றமானவராகவே குறித்த காலப்பகுதியில் பார்க்கப்பட்டார்.

எனினும், மஹேலவின் நம்பிக்கையும், குறித்த போட்டியில் டில்ஹார பெர்னாண்டோ பந்து வீசியிருந்த விதமும் இரசிகர்களுக்கும், அணிக்கும் நம்பிக்கை அளித்திருந்தது. இறுதி ஓவரை வீசுவதற்கு டில்ஹார பெர்னாண்டோ தயாரானார். முதலாவது பந்தில் புதிய துடுப்பாட்ட வீரர் சஜீட் மஹமூட் ஒரு ஓட்டத்தை பெற்றார். 5 பந்துகளுக்கு 11 ஓட்டங்கள். இரண்டாவது பந்தில் ரவி பொப்பாரா அதிரடியாக பௌண்டரியை விளாச, 4 பந்துகளுக்கு 7 ஓட்டங்கள் என்ற நிலையில், போட்டி விறுவிப்பானது.

ஓவரின் மூன்றாவது பந்தில் ரவி பொப்பாரா 2 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், தனது அரைச்சதத்தையும் கடந்தார். இதற்கு அடுத்தப்பந்தில் ஒரு ஓட்டம் பெறப்பட 2 பந்துகளுக்கு 4 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டது. இப்போது புதிய துடுப்பாட்ட வீரர் சஜீட் மஹமூட் களத்தில், சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் ரவி பொப்பாரா மறுமுனையில், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் என கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. ஆனால் சஜீட் மஹமூட் இலகுவாக ஒரு ஓட்டத்தை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் சூடு மேலும் அதிகரித்தது. இறுதி பந்து, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவை, ரவி பொப்பாரா களத்தில், இரண்டு ஓட்டங்கள் பெற்றால் சமனிலை, மீண்டும் களத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. ஆலோசனைகள் முடிவடைய, டில்ஹார பெர்னாண்டோ பந்து வீச தயாரானார். இரசிகர்கள் அனைவரும் கதிரையின் நுணியில், மைதானத்தில் முழுமையாக அமைதி.

பந்தினை டில்ஹார பெர்னாண்டோ வீசினார்! ஆனால் ஆடுகளத்தில் ஒரு அசைவும் இல்லை. காரணம், டில்ஹார பெர்னாண்டோவின் கையிலிருந்து பந்து வெளிச் செல்லவில்லை. அவரது பந்து வீச்சு பாணி நிறைவடைந்தும் பந்து அவரது கையிலேயே இருந்தது. உடனடியாக நடுவர் குறித்த பந்தினை நிராகரிக்கப்பட்ட பந்து என அறிவித்தார். இரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமும், சிரிப்பும் கலந்து வந்துக்கொண்டிருந்தது. பின்னர் ஒரு வழியாக டில்ஹார பெர்னாண்டோ இறுதிப்பந்தினை வீசினார். பந்துநேரடியாக விக்கெட்டினை தாக்க, ரவி பொப்பாரா போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

Image Courtesy – Espncricinfo

ஆனால், இதனை போட்டி வர்னணையாளர்கள் பந்து விக்கெட்டில் பட்டு பௌண்டரி எல்லையை அடைந்தது என்பதை அறியாமல் பரபரப்பில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது என அறிவித்தனர். ஆனால், ஒரு கணத்தில் பொப்பாரா ஆட்டமிழந்ததை வர்னணையாளர்கள் அறிந்துக்கொண்டு, இலங்கை அணியின் வெற்றியை பாராட்ட தொடங்கினர்.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு கத்துக்குட்டியாகவே நுழைந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், கத்துக்குட்டியாக

இலங்கை அணி வீரர்கள் மற்றும் டில்ஹார பெர்னாண்டோ தங்களது வெற்றியினை கொண்டாடினர். இங்கிலாந்து வீரர்கள் சோர்வடைந்தனர். இலங்கை இரசிகர்கள் வெற்றிக்களிப்பில் இருக்க, இங்கிலாந்து இரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்தனர். அந்தவொரு நொடி, போட்டியை பார்த்த ஒவ்வொரு இலங்கை இரசிகர்களும் ஆகாயத்தில் பறந்திருப்பார்கள் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. காரணம், பெரிதும் பேசப்படாத வீரரால் நிகழ்த்தப்பட்ட அதிசயம் தான்.

இவ்வாறு, பெரிதாக பேசப்படாத பல வீரர்கள் இலங்கை அணிக்கு முக்கியமான தருணத்தில் வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றனர். அவர்கள், அவர்களின் பெருமையை எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். இந்த முக்கியமான போட்டியில் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த டில்ஹார பெர்னாண்டோ தொடர்பில் அதிகம் பேசப்படாவிட்டாலும், அவர் பெற்றுக்கொடுத்த வெற்றியை இலங்கை இரசிகர்கள் இன்றளவிலும் கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்த பேசப்படாத வீரர்கள் பிரபல்யம் ஆகாவிட்டாலும், ஒவ்வொரு இலங்கை அணி இரசிகர்கள் மனதிலும் ஒரு நாயகனாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் என்பது உள ரீதியான உண்மை.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க