விறுவிறுப்பான போட்டியில் வெற்றியை தவறவிட்ட யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி

489

காலி – ரத்கம பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற யாழ். சென். ஜோன்ஸ் மற்றும் அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்த கல்லூரிகளுக்கு இடையிலான சிங்கர் 19 வயதுக்குட்பட்ட பிரிவு 2 (டிவிஷன் 2) இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவுபெற்ற போதும், முதல் இன்னிங்ஸ் வெற்றியானது ஸ்ரீ தேவானந்த கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (28) ஆரம்பித்த இந்தப் போட்டியானது எமது ThePapare.com இன் நேரடி ஒளிபரப்பில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, தேவானந்த கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

சச்சினின் 28 ஆண்டுகால சாதனையை முறியடித்த நேபாள வீரர்

நேபாள நாட்டு கிரிக்கெட் வீரரான ரோஹித் பவுட்டெல் ஆகக் குறைந்த வயதில் அரைச்சதம் பெற்று

இதன்படி களமிறங்கிய தேவானந்த கல்லூரி ஆரம்பத்தில் ஓட்டங்களை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் புத்தி டி சில்வா 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பசிந்து தனன்ஜய வேகமாக 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் ஷெரோன் ஷெஹான் 47 ஓட்டங்களை விளாசினார். இவர்களின் இருவரினதும் விக்கெட்டுகளை செல்வதாஸ் சராண் வீழ்த்த, அடுத்தடுத்த விக்கெட்டுகள் குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

சென். ஜோன்ஸ் கல்லூரி சார்பில் செல்வதாஸ் சராண் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, தேவானந்த கல்லூரி 58 ஓவர்கள் நிறைவில் 211 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் எண்டன் சரோனையடுத்து சிறப்பாக பந்து வீசிய தெய்வேந்திரம் டினோஷனும் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் மிக வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர். இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அந்தோனிபுள்ளை சுகிதன் 32 பந்துகளுக்கு 47 ஓட்டங்களை விளாசி விக்கெட்டினை பறிகொடுக்க, மர்பின் அபினாஷ் 32 பந்துகளுக்கு 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரைத் தவிர ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஓவருக்கு சுமார் 5 ஓட்டங்கள் என்ற அடிப்படையில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் சமிந்து அனுஷ்க மற்றும் சாமிக பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஷெரோன் ஷெஹான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஸ்ரீ தேவானந்த கல்லூரி நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதன்படி, இன்றைய தினம் களமிறங்கி, 57 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்ரீ தேவானந்த கல்லூரிக்கு, சென். ஜோன்ஸ் கல்லூரி தங்களுடைய பந்து வீச்சின் மூலம் நெருக்கடியை கொடுத்தது. எனினும், முதல் இன்னிங்ஸை விட சற்று வேகமாக துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ தேவானந்த கல்லூரி விக்கெட்டுகள் சரிக்கப்பட்ட போதும், ஓட்ட எண்ணிக்கையை நகர்த்தி வந்தது.

அவுஸ்திரேலிய டெஸ்டில் லஹிரு குமாரவை இழக்கும் இலங்கை அணி

தொடைத்தசை உபாதையினால் இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான

இதனடிப்படையில், ஸ்ரீ தேவானந்த கல்லூரியின் சார்பில் சொஹான் டி லிவெரா 33 பந்துகளுக்கு 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க அந்த அணி சிறப்பான ஓட்ட எண்ணிக்கையை அடைந்தது. எவ்வாறாயினும் ஒரு கட்டத்தில் 156 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த தேவானந்த கல்லூரி கடைசி விக்கெட்டுக்காக பெறப்பட்ட 55 ஓட்ட இணைப்பாட்டத்தின் உதவியுடன் மீண்டும் 211 ஓட்டங்களை குவித்து, வெற்றி இலக்காக 263 ஓட்டங்களை நிர்ணயித்தது.

ஸ்ரீ தேவானந்த கல்லூரி கல்லூரி சார்பில் இறுதி விக்கெட்டுக்காக போராடி ஓட்டங்களை குவித்த சாமிக பெரேரா 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், ஹேசான் மிலக்ஷ 33 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில்  முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய செல்வதாஸ் சராண் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், எண்டன் அபிஷேக் மற்றும் மர்பின் அபினாஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினத்தின் பாதி நேரம் மாத்திரமே கைவசமிருந்த நிலையில், 263 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி விரைவாக ஓட்டங்களை குவித்து வெற்றியிலக்கை நெருங்கிய போதும் துரதிஷ்டவசமாக கடைசி நிமிடங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், இறுதி விக்கெட்டை தற்காத்துக்கொண்ட சென். ஜோன்ஸ் கல்லூரி போட்டியின் முழுமையான தோல்வியை தவிர்த்துக் கொண்டது.

சென். ஜோன்ஸ் கல்லூரி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய நாகேந்திரராஜன் சௌமியன் 44 ஓட்டங்களையும்,  அந்தோனிபுள்ளை சுகிதரன் 25 ஓட்டங்களையும் பெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க, அடுத்து களமிறங்கிய தெய்வேந்திரம் டினோஷன் எதிரணி பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தார். இவருடன் நேர்த்தியான இணைப்பாட்டத்தை வழங்கிய மர்பின் அபினாஷ் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, டினோஷன் அரைச்சதம் கடந்து 94 பந்துகளுக்கு 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

டினோஷன் களத்தில் இருக்கும் வரை சென். ஜோன்ஸ் அணி கைவசமிருந்த வெற்றி, அவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து ஸ்ரீ தேவானந்த கல்லூரி பக்கம் திரும்பியது. எனினும், இறுதி விக்கெட்டுக்காக இணைந்த செல்வதாஸ் சராண் மற்றும் எண்டன் அபிஷேக் ஆகியோர் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை முழுமையான போட்டித் தோல்வியிலிருந்து காப்பாற்றிக் கொண்டனர்.  இறுதியில் 47 ஓவர்கள் மாத்திரமே துடுப்பெடுத்தாடியிருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு, ஸ்ரீ தேவானந்த கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி வழங்கப்பட்டது. இந்தப் போட்டியை பொருத்தவரை சென். ஜோன்ஸ் அணி, 28 ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேஜர் பிரீமியர் லீக்கில் இரட்டைச் சதமடித்த கௌஷால் மற்றும் தரங்க

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல் தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர்

போட்டியின் சுருக்கம்

ஸ்ரீ தேவானந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 211 (58) – பசிந்து தனன்ஜய 65, ஷெரோன் ஷெஹான் 47, செல்வதாஸ் சராண் 37/4, தெய்வேந்திரம் டினோஷன் 43/4

யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி – 159 (33.2) – அந்தோனிபுள்ளை சுகிதரன் 45, மர்பின் அபினாஷ் 35, சமிந்து அனுஷ்க 36/3, சாமிக பெரேரா 44/3

ஸ்ரீ தேவானந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 211 (47.1) – சொஹான் டி லிவெரா 53, சாமிக பெரேரா 47, ஹேசான் மிலக்ஷ 33, செல்வதாஸ் சராண் 32/3, எண்டன் அபிஷேக் 32/3, மர்பின் அபினேஷ் 76/3

யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 235/9 (47), தெய்வேந்திரம் டினோஷன் 79, நாகேந்திரராஜன் சௌமியன் 44, மர்பின் அபினாஷ் 35, சமிந்து அனுஷ்க 62/3, சமிந்து பிரமோத் 45/2

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது (ஸ்ரீ தேவானந்த கல்லூரி முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களால் வெற்றி)

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க