LPL தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Lanka Premier League 2021

1165

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் டிசம்பர் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டி உட்பட லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு R.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் கொழும்பு மற்றும் ஜப்னா அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி இரவு 07.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. அதேநேரம், போட்டி தொடருக்கான முழு அட்டவணையையும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

மீண்டும் கிரிக்கெட் ஆட தயாராக உள்ள அஞ்செலோ மெதிவ்ஸ்

லீக் போட்டிகளில் 20 போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என்பன ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. டிசம்பர் 23ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதுடன், 24ஆம் திகதி இறுதிப்போட்டிக்கான மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதற்தர லீக் தொடரான LPL தொடரில், மொத்தமாக 24 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், உள்ளூர் மற்றும் சர்வதேசத்தை சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

முதல் சுற்றில் அதிக புள்ளிகளை பெற்று, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், குவாலிபையர் போட்டியில் (தகுதிப்)  விளையாடும் என்பதுடன், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் (விலகல்) போட்டியில் விளையாடும்.

குவாலிபையர் போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதுடன், எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணி, முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் மோதவேண்டும். குறித்த போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் .

லங்கா பிரீமியர் லீக், டிசம்பர் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், வீரர்கள் வரைவு இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

திகதி பி.ப. 03.00 மணிக்கான போட்டி இரவு 07.30 இற்கான போட்டி மைதானம்
டிசம்பர் 3, 2021 பயிற்சி
டிசம்பர் 4, 2021 பயிற்சி
டிசம்பர் 5, 2021 ஆரம்ப நிகழ்வு காலி ஜப்னா கொழும்பு
டிசம்பர் 6, 2021 தம்புள்ள கண்டி கொழும்பு காலி கொழும்பு
டிசம்பர் 7, 2021 ஜப்னா தம்புள்ள கண்டி காலி கொழும்பு
டிசம்பர் 8, 2021 கொழும்பு தம்புள்ள கண்டி ஜப்னா கொழும்பு
டிசம்பர் 9, 2021 ஓய்வு மற்றும் பயிற்சி
டிசம்பர் 10, 2021 தம்புள்ள காலி ஜப்னா கொழும்பு கொழும்பு
டிசம்பர் 11, 2021 காலி கண்டி கொழும்பு தம்புள்ள கொழும்பு
டிசம்பர் 12, 2021 ஜப்னா கண்டி காலி கொழும்பு கொழும்பு
டிசம்பர் 13, 2021 காலி தம்புள்ள கொழும்பு
டிசம்பர் 14, 2021 கண்டி கொழும்பு தம்புள்ள ஜப்னா கொழும்பு
டிசம்பர் 15, 2021 ஓய்வு மற்றும் பயிற்சி
டிசம்பர் 16, 2021 கொழும்பு ஜப்னா கண்டி தம்புள்ள கொழும்பு
டிசம்பர் 17, 2021 ஜப்னா காலி கொழும்பு கண்டி கொழும்பு
டிசம்பர் 18, 2021 ஹம்பாந்தோட்டைக்கு பயணம்
டிசம்பர் 19, 2021 ஓய்வு மற்றும் பயிற்சி
டிசம்பர் 20, 2021 எலிமினேட்டர் (3 vs 4) குவாலிபையர் 1 (1 vs 2) ஹம்பாந்தோட்டை
டிசம்பர் 21, 2021 குவாலிபையர் 2 ஹம்பாந்தோட்டை
டிசம்பர் 22, 2021 ஓய்வு மற்றும் பயிற்சி
டிசம்பர் 23, 2021 இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை
டிசம்பர் 24, 2021 மேலதிக நாள் ஹம்பாந்தோட்டை

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<