இலங்கை உள்ளூர் T-20 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்

1142

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான T-20 தொடரின் காலிறுதிப் போட்டிகள் இன்று (04) நடைபெற்றன. இதன் ம் தமிழ் யூனியன், கொழும்பு கிரிக்கெட் கழகம், NCC மற்றும் இராணுவப்படை கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

ராகம் கிரிக்கெட் கிழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

தினுக்க விக்ரமனாயக்க மற்றும் ரமித் ரம்புக்வெல்ல ஆரம்ப விக்கெட்டுக்கு பெற்ற அதிரடி இணைப்பாட்டத்தின் மூலம் ராகம கிரிக்கெட் கழகத்தை 9 விக்கெட்டுகளால் வென்று தமிழ் யூனியன் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

கோல்ட்ஸ் அணி தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்று ஆதிக்கம்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் …

கொழும்பு, CCC மைதானத்தில் நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய லஹிரு திரிமான்ன தலைமையிலான ராகம கிரிக்கெட் கழகம் 20 ஓவர்களுக்கும் 149 ஓட்டங்களைப் பெற்றது.

எனினும் பதிலெடுத்தாட களமிறங்கிய தமிழ் யூனியன் அணியின் ஆரம்ப வீரர்களான விக்ரமனாயக்க மற்றும் ரம்புக்வெல்ல இணை, பந்துகளை பௌண்டரிக்கு விளாச 62 பந்துகளில் 113 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்றனர். விக்ரமனாயக்க 37 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றதோடு ரம்புக்வெல்ல 40 பந்துகளில் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் தமிழ் யூனியன் அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் – 149/6 (20) – ஜனித் லியனகே 34, சமீர டி சொய்சா 26, அக்சு பெர்னாண்டோ 22, பினுர பெர்னாண்டோ 2/21, திஸ்னக்க மனோஜ் 2/22

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 150/1 (14.4) – ரமித் ரம்புக்வெல்ல 68*, தினுக்க விக்ரமனாயக்க 61,

முடிவு – தமிழ் யூனியன் 9 விக்கெட்டுகளால் வெற்றி


பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC)

பதுரெலிய விளையாட்டுக் கழகத்தை 107 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய கொழும்பு கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றியீட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பில் லஹிரு மதுஷங்க 4 விக்கெட்டுகளை பதம்பார்த்து அணிக்கு வலுச்சேர்த்தார். இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி ஆடிய கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக ஆரம்ப வீரர் டில்ஷான் முனவீர 51 பந்துகளில் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களை விளாசினார்.

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 107/9 (20) – சஞ்சய சதுரங்க 21, ஹஷான் உபேந்திர 15, நதீர நாவல 15, லஹிரு மதுஷங்க 4/15, லஹிரு கமகே 2/26

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 108/2 (12.3) – டில்ஷான் முனவீர 70*, அஷான் பிரியன்ஜன் 34, சஞ்சய சதுரங்க 1/10

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி

இறுதி முடிவாக சுதந்திரக் கிண்ணத்திருந்து ஷகீப் அல் ஹஸன் நீக்கம்

இலங்கையில் நடைபெறும் சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரில் இருந்து…


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்

ஆரம்ப சுற்றில் தோல்வியுறாத அணியாக காலிறுதிக்கு முன்னேறிய சோனகர் விளையாட்டுக் கழகத்தை 34 ஓட்டங்களால் வீழ்த்திய இராணுவப்படை கிரிக்கெட் கழகம் அரையிறுதிக்கு முன்னேறியது.

கொழும்பு, CCC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இராணுவப்படை அணி 129 ஓட்டங்களுக்கு சுருண்டது. எனினும் எட்ட முடியுமான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழகம் 95 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன்போது இராணுவப்படை அணிக்காக ஜனித் சில்வா 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, சீக்குகே பிரசன்னவும் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 129 (18.4) – லியோ பிரான்சிஸ்கோ 31, ஜனித் சில்வா 27, தரிந்து ரத்னாயக்க 3/21, சஹன் அதீஷ 2/37, கோசல குலசேகர 2/22

சோனகர் விளையாட்டுக் கழகம் – 95 (18.4) – கோசல குலசேகர 40, சஞ்சிக்க ரித்ம 2/17, ஜனித் சில்வா 3/03, சீக்குகே பிரசன்ன 3/19

Embed – முடிவு – இராணுவப்படை கிரிக்கெட் கழகம் 34 ஓட்டங்களால் வெற்றி

கரீபியன் பிரீமியர் லீக்கில் முதற்தடவையாக திக்வெல்ல, தசுன் சானக

மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கரீபியன்…

NCC எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

லசித் மாலிங்கவின் அதிரடி பந்துவீச்சு மற்றும் சதுரங்க டி சில்வாவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் ஆரம்ப சுற்றில் தோல்வியுறாத கோல்ட்ஸ் அணியை வீழ்த்தி 6 ஓட்டங்களால் பரபரப்பு வெற்றியை பெற்ற NCC அணி நான்காவது அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட NCC அணிக்காக மத்திய வரிசையில் வந்த சதுரங்க டி சில்வா 26 பந்துகளில் 7 பௌண்டரிகள் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் அந்த அணி 165 ஓட்டங்களை பெற்றது.

பதிலேடுத்தாடிய கோல்ட்ஸ் அணி வெற்றி இலக்கை நோக்கி துரத்தியபோதும் லசித் மாலிங்க முக்கிய மூன்று விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு சதுரங்க டி சில்வாவும் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதனால் கோல்ட்ஸ் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. குறிப்பாக சதுரங்க டி சில்வா தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக 16 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் காணப்படுகிறார்.

போட்டியின் சுருக்கம்

NCC – 165/6 (20) – சதுரங்க டி சில்வா 46*, பர்வீஸ் மஹ்ரூப் 39, அஞ்செலோ பெரேரா 34, லஹிரு உதார 22, டில்ருவன் பெரேரா 2/23, பிரபாத் ஜயசூரிய 2/24

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 159/8 (20) – சதீர சமரவிக்ரம 35, சஹன் ஆரச்சிகே 33, பிரியமால் பெரேரா 28, லசித் மாலிங்க 3/14, சதுரங்க டி சில்வா 3/27

முடிவு – NCC அணி 6 ஓட்டங்களால் வெற்றி