16 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிந்த புஷ்பகுமார; CCC இலகு வெற்றி

154

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் ஐந்து போட்டிகள் இன்று (06) நிறைவடைந்ததோடு மேலும் ஒரு போட்டி ஆரம்பமானது.

SSC எதிர் BRC

பந்துவீச்சு, துடுப்பாட்டம் என சகல துறையிலும் சோபித்த SSC அணி BRC உடனான போட்டியை 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. BRC அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் BRC அணிக்கு 221 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

சச்சித்ர சேரசிங்கவின் சதத்தால் எழுச்சி பெற்ற தமிழ் யூனியன்

அனுபவ சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர சேனநாயக்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். SSC கழகம் ஏற்கனவே B குழுவில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 289 (66.4) – சம்மு அஷான் 125, சச்சித்ர சேனநாயக்க 32, துவிந்து திலகரத்ன 5/65, நிரஞ்சன வன்னியாரச்சி 2/36

BRC (முதல் இன்னிங்ஸ்) – 267 (79) – ருமேஷ் புத்திக்க 105*, பானுக்க ராஜபக்ஷ 44*, தரிந்து ரத்னாயக்க 5/83, கசுன் மதுஷங்க 2/50, சச்சித்ர சேனநாயக்க 2/47

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 198 (50.1) – கௌஷால் சில்வா 79, கிரிஷான் ஆரச்சிகே 33, துவிந்து திலகரத்ன 5/56, லசித் லக்ஷான் 2/25

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 186 (50.4) – ருமேஷ் புத்திக்க 76, சச்சித்ர சேனநாயக்க 5/81, தரிந்து ரத்னாயக்க 4/67

முடிவு – SSC அணி 34 ஓட்டங்களால் வெற்றி


CCC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

இலங்கை டெஸ்ட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் மலிந்த புஷ்பகுமார எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த சரசென்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவரது CCC அணி 235 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் CCC அணி எதிரணிக்கு 349 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தபோதும் சரசென்ஸ் அணி இரண்டாவது இன்னங்ஸில் 110 ஓட்டங்களுக்கே சுருண்டது. மலிந்த புஷ்பகுமார 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதோடு இந்த போட்டியில் அவர் மொத்தமாக 16 விக்கெட்டுகளை சாய்த்தமை குறிப்பிடத்தக்கது.

வெற்றியை நெருங்கியிருக்கும் இலங்கை A கிரிக்கெட் அணி

போட்டியின் சுருக்கம்   

CCC (முதல் இன்னிங்ஸ்) – 238 (62) – மாதவ வர்ணபுர 63, வனிந்து ஹசரங்க 32, ரொன் சந்திரகுப்தா 30, சாமிக்கர எதிரிசிங்க 9/87

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 169 (64.4) – சாமிக்கர எதிரிசிங்க 53, மலிந்த புஷ்பகுமார 6/73, லஹிரு கமகே 2/34, வனிந்து ஹசரங்க 2/27

CCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 279/5d (72.3) – ரொன் சந்திரகுப்தா 93, மாதவ வர்ணபுர 46, ரனித லியனாரச்சி 2/39

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 113 (36.4) – அஷேன் பண்டார 22, மலிந்த புஷ்பகுமார 10/37

முடிவு – CCC அணி 235 ஓட்டங்களால் வெற்றி


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்

சோனகர் விளையாட்டுக் கழகம் தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற இராணுவப்படை கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Photos : CCC vs Negombo CC | Major League Tier A Tournament 2018/19

 

முதல் இன்னிங்ஸில் தடுமாற்றம் கண்ட சோனகர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் இரோஷ் சமரசூரியவின் சதத்தின் உதவியோடு 280 ஓட்டங்களை பெற்றபோதும், நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கான 170 ஓட்டங்களை இராணுவப்படை அணி நெருக்கடி இன்றி எட்டியது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 110 (44.4) – அதீஷ திலஞ்சன 35, துஷான் விமுக்தி 5/35, தனுசிக்க பண்டார 2/16, நுவன் லியனபத்திரண 2/30

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 221 (80.1) – துஷான் விமுக்தி 35, அஷான் ரன்திக்க 32, டில்ஷான் டி சொய்சா 32, கேஷான் விஜேரத்ன 3/40, ரமேஷ் மெண்டிஸ் 2/25, தரிந்து கௌஷால் 2/31

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 280 (67.3) – இரோஷ் சமரசூரிய 109, பபசர வாதுகே 52, சாமர சில்வா 52, துஷான் விமுக்தி 5/91, தனுசிக்க பண்டார 5/87

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 171/5 (52.3) – டில்ஷான் சொய்சா 41*, லக்ஷித்த மதுஷான் 37, ரமேஷ் மெண்டிஸ் 3/47

முடிவு – இராணுவப்படை கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி  


இலங்கை துறைமுக அதிகாரசபை எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இரோஷ் பெர்னாண்டோவின் பொறுப்பான துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை துறைமுக அதிகாரசபை அணிக்கு எதிரான போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலாவது ஜப்னா கிரிக்கெட் லீக் சம்பியனான சென்றலைட்ஸ் கழகம்

கட்டுநாயக்கவில் நடைபெற்ற போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 210 ஓட்ட வெற்றி இலக்கை 9 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இரோஷ் பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களை பெற்று கைகொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை (முதல் இன்னிங்ஸ்) – 233 (68.5) – யொஹான் டி சில்வா 64, பிரமோஷ் பெரேரா 51, பிரகாஷ் விக்ரமசிங்க 46*, சாகர் பரேஷ் 6/70, காரிமுற்றத்து ராகேஷ் 2/41

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 203 (60.2) – ரிசித் உபமால் 54, ஓஷத பெர்னாண்டோ 50, அனுக் டி அல்விஸ் 4/53, சமிந்த பண்டார 3/54, சானக்க கோமசாரு 2/79

இலங்கை துறைமுக அதிகார சபை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 179 (67.1) – அதீஷ நாணயக்கார 64, பிரஷான் விக்ரமசிங்க 29, நிமேஷ் விமுக்தி 3/68, ரொமேஷ் ஜயதிஸ்ஸ 2/21

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 210/9 (61.1) – திக்ஷில டி சில்வா 52, இரோஷ் பெர்னாண்டோ 65*, சானக்க கோமசாரு 5/74, ரமேஷ் நிமன்த 3/42

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கழகம் 1 விக்கெட்டால் வெற்றி


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்

ராகம அணி முதல் இன்னிங்சுக்கு பெற்ற 433 ஓட்டங்களுக்கு பதிலாக தமிழ் யூனிய அணி முதல் இன்னிங்ஸில் 538 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

Photos: SLPA SC Vs. Chilaw MCC | Major League Tier A Tournament 2018/19

​NCC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ் யூனியன் அணி சார்பில் சச்சித்ர சேரசிங்க (152) மற்றும் தரங்க பரணவிதான (184) அபார சதங்களை பெற்றதோடு ரமித் ரம்புக்வெல்ல 91 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 433 (118.2) – சுபேஷல ஜயதிலக்க 100, ஜனித் லியனகே 52, இஷான் ஜயரத்ன 50, தினெத் திமோத்ய 49, ஷெஹான் பெர்னாண்டோ 41, ஜீவன் மெண்டிஸ் 4/125, தினுக் விக்ரமனாயக்க 3/44

தமிழ் யூனியன் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 544/8d (131.2) – சச்சித்ர சேரசிங்க 152, தரங்க பரணவிதான 184, ரமித் ரம்புக்வெல்ல 91, சத்துர பீரிஸ் 4/82

ராகம கிரக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 55/2 (15)

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

மக்கொன சரே விளேஜ் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் ஸ்திரமான நிலையில் உள்ளது. இதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது அந்த அணி 233 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பிரசன்ஸன ஜயமான்ன 73 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.   

பாகிஸ்தானை வேகத்தால் மிரட்டி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 233/6 (88) – பிரசன்ஸன ஜயமான்ன 73*, டிலசிறி லொகுபண்டார 51, அஞ்செலோ ஜயசிங்க 34, புத்திக்க சஞ்சீவ 3/52, லஹிரு சமரகோன் 2/60   

நாளை போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<