முதல் டெஸ்டிலிருந்து வெளியேறும் மெதிவ்ஸ்; புதிய வீரர் இணைப்பு

Australia tour of Sri Lanka 2022

110

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

அஞ்செலோ மெதிவ்ஸிற்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அணியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் புதிய தலைவராக ஜோஸ் பட்லர் நியமனம்!

மூன்றாவது நாள் ஆட்டத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 தொற்று பரிசோதனையில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இலங்கை அணியிலிருந்து அஞ்செலோ மெதிவ்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐசிசியின் புதிய விதிமுறையின்படி கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுக்கும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை அணியில் இணைக்கமுடியும்.

அதன்படி அஞ்செலோ மெதிவ்ஸிற்கு பதிலாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஓசத பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<