ஜோசப் வாஸுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த குருகுல கல்லூரி

24
u19 cricket

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 19 வயதின் கீழான பாடசாலை அணிகளுக்கு இடையிலான (இரண்டு நாட்கள்  கொண்ட) கிரிக்கெட் தொடரில் இன்று (16) ஆறு போட்டிகள் நிறைவடைந்தன.

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி எதிர் தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை

பண்டாரகம பொது மைதானத்தில் முடிவடைந்த இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி தர்மாசோக கல்லூரியை வீழ்த்தி இலகு வெற்றியை பதிவுசெய்தது.

நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 210  ஓட்டங்களை முதல் இன்னிங்சில் பெற்ற பின்னர், தர்மாசோக கல்லூரியினால் அவர்களின் முதல் இன்னிங்சில் 92 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதனால், போட்டியின் முதல் நாளிலேயே பலோவ் ஒன் (Follow on) முறையில் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த தர்மாசோக கல்லூரி 7 ஓட்டங்களைக் குவித்து விக்கெட் இழப்பு ஏதுமின்றி காணப்பட்ட போது ஆட்டத்தின் முதல் நாள் முடிவடைந்தது.

ஐ.சி.சியின் விதிமுறைகளை மீறிய கோஹ்லிக்கு அபராதம்

தென்னாபிரிக்க அணியுடன் தற்போது நடைபெற்று வருகின்ற

போட்டியின் இரண்டாம் நாளில் நல்ல மொத்த ஓட்டங்களை எதிர்பார்த்து இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த தர்மாசோக வீரர்கள் 140 ஓட்டங்களையே பெற்றனர். முதித லக்ஷான் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி சார்பில் 5 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். தர்மாசோக கல்லுரியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து டி.எஸ். சேனநாயக்க கல்லூரி வீரர்களுக்கு 23 ஓட்டங்களே வெற்றி பெற தேவைப்பட்டிருந்தது. இரண்டு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் டி.எஸ். சேனநாயக்க வீரர்கள் வெற்றி இலக்கை அடைந்தனர்.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 210 (49.3) – விஹான் குணசேகர 49, முதித லக்ஷான் 49, வினுக்க தில்ஷான் 4/55

தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 92 (38.3) – நிமேஷ் மெண்டிஸ் 26, சசிந்த ஹெட்டிகே 3/25, மெதுஷன் திலின 2/10

தர்மாசோக கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 140 (49) – சச்சின் சங்கீத் 42, முதித லக்ஷான் 5/50, சசிந்த ஹெட்டிகே 3/36

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 24/2 (3)

முடிவு – டி.எஸ். சேனநாயக்க கல்லூரி 8 விக்கெட்டுக்களால் வெற்றி


ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ எதிர் குருகுல கல்லூரி, களனி

மஹர சிறைச்சாலை மைதானத்தில் முடிவடைந்த இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களால் ஜோசப் வாஸ் கல்லூரி குருகுல கல்லூரியிடம் தோல்வியைத் தழுவியது.

நேற்று தொடங்கிய போட்டியில் எதிரணியின் அபாரப் பந்துவீச்சினால் முதல் இன்னிங்சில் வெறும் 42 ஓட்டங்களுக்கு சுருண்ட ஜோசப் வாஸ் வீரர்கள் இரண்டாம் இன்னிங்சில் பலோவ் ஒன் முறையில் மீண்டும் துடுப்பாடியும் குருகுல கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை (145) தாண்டுவதற்கான போதிய ஓட்டங்களைப் பெற முடியாமல் 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர்.

லிகஷன் சசங்க, மலிந்து விதுரங்க ஆகியோர் போட்டியில் தலா 6 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து குருகுல கல்லூரியை வெற்றியாளர்களாக மாற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 42 (23.2) – லிகஷன் சசங்க 4/03, மலிந்து விதுரங்க 4/18

குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 145 (48.2) – லிகஷன் சசங்க 37, ஆகாஷ் கனிஷ்க 4/43

ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 89 (38.5) – திலான் ப்ரதீப 34, ப்ரூத்வி ருசார 3/32, நுவன் சானக்க 2/07, லிகஷன் சசங்க 2/11, மலிந்து விதுரங்க 2/15

முடிவு – குருகுல கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களால் வெற்றி


ஜனாதிபதி கல்லூரி எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை

வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் கொழும்பு ஜனாதிபதி கல்லூரி ஆகிய அணிகள் மோதிய குழு B இற்கான இந்த ஆட்டம் சமநிலை அடைந்தது.

முக்கோணத் தொடரின் முதல் போட்டியில் புதிய மாற்றங்களுடன் இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு (2017)

பின்னர், 21 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த ஜனாதிபதி கல்லூரி 43.5 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் ஆட்டம் சமநிலையுற்றது.

ஜனாதிபதி கல்லூரியின் இந்த இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் றிபாஸ் மஹ்ரூப் அதிகபட்சமாக 78 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 343 (76.3) – கனிது தேவ்மின 94, ஹசிந்து ப்ரமுக 74, தனுல சமோத் 41, கவீஷ துலஞ்சன 4/88

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 322 (73.2) – எரங்க மதுஷான் 81, யசிந்து ஜயவீர 66, அவிஷ்க தரிந்து 43, ஹசிந்து ப்ரமுக்க 5/99

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 267/9 (43.5) – றிபாஸ் மஹ்ரூப் 78, அகில ரொஷான் 64*, ஹிருன சிகெரா 37, கவீஷ துலஞ்சன 4/125

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


வெஸ்லி கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

கொழும்பைச் சேர்ந்த இரண்டு பாடாசாலை அணிகளான வெஸ்லி கல்லூரியும், நாலந்த கல்லூரியும் மோதிய இந்த ஆட்டம் சமநிலை அடைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த வெஸ்லி கல்லூரி அதனது முதல் இன்னிங்சில் 173 ஓட்டங்களினைச் சேர்த்திருந்தது. பதிலுக்கு தங்களது முதல் இன்னிங்சில் ஆடிய நாலந்த வீரர்கள் எதிரணியை விட சற்று கூடுதலாக ஓட்டங்கள் பெற்று மொத்தமாக 191 ஓட்டங்களை குவித்தனர்.

பின்னர் 18 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய வெஸ்லி கல்லூரி 81 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தது. வெஸ்லி வீரர்களை இவ்வாறு கட்டுப்படுத்த உதவிய நாலந்த வீரர்  மிஹிம வீரக்கோன் 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 100 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட இலக்கை அடைய வேகமாக துடுப்பாடிய நாலந்த கல்லூரி சடுதியான முறையில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து 50 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது போட்டியின் நேரம் முடிவடைந்தது. இதனால் தோல்வியொன்றில் இருந்து நாலந்த வீரர்கள் தப்பியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 173 (60.5) – திசருக்க அக்மீமன 84, சுஹங்க விஜேவர்தன 5/18

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 191 (81) – சுஹங்க விஜேவர்தன 41, லகஷித ரசஞ்ச 38, செனால் தங்கல்ல 3/18, சகுந்த லியனகே 3/18

வெஸ்லி கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 81 (41) – மொவின் சுபசிங்க 31, மிஹிம வீரக்கோன் 4/24

நாலந்த கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 50/7 (8)

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


தர்ஸ்ட்டன் கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை

கொழும்பு தர்ஸ்ட்டன் கல்லூரி மற்றும் மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரி அணிகளுக்கு இடையிலான குழு A இற்கான இந்த ஆட்டம் சமநிலை அடைந்தது.  

நேற்று தர்ஸ்ட்டன் கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் முதல் இன்னிங்சுகளில் செபஸ்டியன் கல்லூரி 141 ஓட்டங்களையும் மைதானச் சொந்தக்காரர்கள் 164 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். 23 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த புனித செபஸ்டியன் கல்லூரி 201 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. செபஸ்டியன் கல்லூரியின் இரண்டாம் இன்னிங்சில் தருஷ பெர்னாந்து அரைச்சதம் கடந்திருந்தார். மறுமுனையில் சந்தரு டயஸ் 5 விக்கெட்டுக்களை தர்ஸ்ட்டன் கல்லூரிக்காக சுருட்டினார்.

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக தர்ஸ்ட்டன் கல்லூரிக்கு 225 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி இலக்கினை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தர்ஸ்ட்டன் வீரர்கள் 90 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதன் காரணமாக போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 141 (44) – தருஷ பெர்னாந்து 39, சந்தரு டயஸ் 5/43

தர்ஸ்ட்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 164 (57.1) – பன்சிலு தேஷான் 34, வினுஜ ரணசிங்க 5/47

புனித செபஸ்டியன் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 201/9d (54) – தருஷ பெர்னாந்து 53, சந்தரு டயஸ் 5/45

தர்ஸ்ட்டன் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 90/4 (33) – சவன் பிரபாஷ் 29*

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


புனித தோமியர் கல்லூரி, கல்சிசை எதிர் மஹிந்த கல்லூரி

மேல் மாகாணத்தைச் சேர்ந்த தோமியர் கல்லூரிக்கும் தென் மாகாணத்தைச் சேர்ந்த மஹிந்த கல்லூரிக்கும் இடையிலான இந்தப் போட்டியும் சமநிலை அடைந்தது.

700 விக்கெட்டுகள், 7,000 ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்த டில்ருவன் பெரேரா

இலங்கை டெஸ்ட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டில்ருவன் பெரேரா, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுக்களையும் 7,000 ஓட்டங்களையும் பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

நேற்று ஆரம்பித்திருந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தோமியர் கல்லூரி 278 ஓட்டங்களினை குவித்திருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது. இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய மஹிந்த கல்லூரி வீரர்கள் 113.1 ஓவர்களில் 223 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து காணப்பட்டிருந்தனர். இந்நிலையில் போட்டியின் ஆட்ட நேரமும் முடிவுக்கு வர போட்டி சமநிலையுற்றது.  

மஹிந்த கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் கவிந்து எதிரிவீர அதிகபட்சமாக 81 ஓட்டங்களினை குவித்திருந்தார். அதேபோன்று பந்துவீச்சில் ஷலின் டி மெல் 4 விக்கெட்டுக்களை தோமியர் கல்லூரிக்காக சுருட்டியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 278/9d (96.3) – கிரிஷான் முனசிங்க 110, சித்தார ஹப்புஹின்ன 61, டெலோன் பீரிஸ் 42*, சுபனு ராஜபக்ஷ 2/33

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 223 (113.1) – கவிந்து எதிரிவீர 81, ஷலின் டி மெல் 4/39

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

இன்று ஆரம்பமாகிய ஏனைய போட்டிகளின் சுருக்கம்…

புனித பேதுரு கல்லூரி எதிர் புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 138 (60.1) – பபசார ஹேரத் 36*, சன்ஹின் பெர்னாந்து 23, சஷிக்க துல்ஷான் 4/28

புனித செர்வதியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 66 (33.1) – மொஹமட் அமீன் 3/11, அஷென் சில்வா 3/14

லும்பினி கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 139 (38.1) – வினு ஹேமலங்கார 34, அசல் சிகெர 5/33, சமிக்க குணசேகர 2/25

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 221/6 (54) – அசெல் சிகெரா 70, லஹிரு ஹிரன்ய 54, விமுக்தி குலதுங்க 4/70

மஹாநாம கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை

மஹநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 236 (71.5) – பவன் ரத்னாயக்க 51, பிஷான் மெண்டிஸ் 48, சவிந்து பீரிஸ் 3/40

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 110/3 (30) – விஷ்வ பீரிஸ் 34, அவிந்து பெர்னாந்து 29*, லஹிரு விதான 2/10

இன்று ஆரம்பமாகிய போட்டிகள் அனைத்தினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்