இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார, பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்ற இலங்கை அணியை வழிநடாத்திய தினேஷ் சந்திமாலுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தை பாகிஸ்தான் தமது தாயகமாக தத்தெடுத்துக்கொண்ட பின்னர் டெஸ்ட் தொடரொன்றில் முதற்தடவையாக இலங்கை அணியினாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்த தொடர் வரை தமது சொந்த மண்ணில் நடைபெற்ற எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் தோல்வியடையாது காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரொன்றில் இலங்கை அணியை முதற்தடவையாக தலைமை தாங்கிய சந்திமால் அபுதாபியில் பாகிஸ்தானுடான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 21 ஓட்டங்களால் த்ரில்லர் வெற்றியொன்றை தனது அணி வீரர்கள் பெறுவதற்கு 155 ஓட்டங்களை விளாசி பாரிய பங்களிப்பொன்றினை வழங்கியிருந்தார். அத்தோடு இரண்டாவது போட்டியிலும் சந்திமால் அரைச்சதம் கடந்து சிறப்பாக செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியே. (இலங்கை) அணி மிகவும் ஒருங்கிணைந்து கடினமாக உழைத்திருந்தது. அதாவது சந்திமால் சிறந்த தலைமைத்துவத்தையும் ரங்கன ஹேரத் மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தையும் காட்டியிருந்தனர்என Cricbuzz செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்த சங்கக்கார முதல் டெஸ்ட் போட்டியின் அழுத்தங்களை (எதனையும் கருத்திற்கொள்ளாது) சந்திமால் உள்வாங்கிய விதம் பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்ததுஎனவும் குறிப்பிட்டிருந்தார். 

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஆறாம் இடத்துக்கு முன்னேறிய இலங்கை

தமது சொந்த மைதானத்தில் வைத்து இலங்கையுடனான டெஸ்ட் தொடரினை பறிகொடுத்திருக்கும்…

போட்டியைப் பார்க்கும் மக்கள் சந்திமால் மிகவும் மெதுவாக செயற்பட்டார் எனக் கூறுகின்றனர். இது டெஸ்ட் கிரிக்கெட். இப்படித்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். அவர் இலங்கை அணியை ஒரு உறுதியான நிலைக்கு அழைத்துச் சென்றதன் காரணமாகவே எதிரணியை வீழ்த்த நேரம் போதுமாக அமைந்திருந்தது.“

அவரது தலைமைத்துவம் மிகவும் சிறப்பானது. பாகிஸ்தான் வெற்றி இலக்கை அடைய துடுப்பாடிய வேளையில் களத்தடுப்பாளர்களை அவர் ஒருங்கமைத்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. இன்னும் துடுப்பாட்ட வீரராக அவர் எடுத்துக் கொண்ட பொறுப்பின் போது சந்திமால் பந்துகளை எதிர்கொண்ட விதமும் பார்ப்பதற்கு நேர்த்தியாக இருந்தது.“

என சங்கக்கார, சந்திமால் பற்றி மேலும் விபரித்திருந்தார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சங்கக்கார, சந்திமால் 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானதன் பின்னர் அவரை தனது ஆளுகைக்கு உட்படுத்தி அவருக்கு தன்னுடைய அனுபவங்களை கற்றுத்தந்திருந்தார்.

அப்போது இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்த ஜெப் மார்ஷ் இலங்கை வீரர்களை சிரேஷ்ட வீரர் – கனிஷ்ட வீரர் (Senior and Junior) என்றவாறு குழுக்களாக மாற்றி செயற்பட வைத்திருந்தார். இதில் மஹேல ஜயவர்தனவுக்கு லஹிரு திரிமான்னவும், திலகரத்ன தில்ஷானுக்கு திமுத் கருணாரத்னவும், குமார் சங்கக்காரவுக்கு தினேஷ் சந்திமாலும் பிரித்து வழங்கப்பட்டு குழுக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.

இன்னும் அப்போது வீரர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு சிரேஷ்ட வீரரும் தமக்கு பொறுப்பளிக்கப்பட்டிருக்கும் கனிஷ்ட வீரரை இராப்போசணத்திற்கும் தேநீர் விருந்துக்கும் அழைத்துச் செல்லவும் கட்டளையிடப்பட்டிருந்தனர். இதன்போது நடைபெறும் கலந்துரையாடல்களில் இளம் வீரர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் மிகவும் பிரயோசனமாக அமைந்திருக்கும். இதில் குறிப்பாக சந்திமால் சங்கக்காரவிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொண்டார்.

சந்திமாலிடம் நான் நிறையப் பேசுவதற்கு அவசியமிருக்கவில்லை. ஏனெனில் அவர் மிகவும் சிறந்து காணப்பட்டார். நான் அவருக்கு எவ்வாறு களத்தில் நீண்ட நேரம் நீடிப்பது? எப்போது விரைவாக துடுப்பாட வேண்டும்? எப்போது மெதுவாக ஆட வேண்டும்? 40 ஓட்டங்களை அடைந்தால் அதனை 100 ஓட்டங்களாக மாற்றுவது எப்படி? என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கியிருந்தேன்.“

முல்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சங்கா, பொல்லார்ட், மலிக்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படவுள்ள 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக்…

என சங்கக்கார தனது ஆளுகைக்கு கீழ் சந்திமால் இருந்த போது தான் கற்றுக்கொடுத்த விடயங்களை கூறியிருந்தார்.

சந்திமால் பிரம்மிக்க வைக்கும் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். துரதிஷ்டவசமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன் அவரது நம்பிக்கையும் சிதறடிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் மீதே அவர் சந்தேகம் கொள்ளத் தொடங்கினார். நான் அவரின் துடுப்பாட்டத்தை இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் பார்த்திருக்கின்றேன். மிகவும் பிரமாதமாக அவை அமைந்திருந்தன. த்தோடு சந்திமால் அங்கு வைத்திருக்கும் ஓட்டப் பதிவுகளும் நல்லவை. அவர் சிறந்த ஒரு நாள் வீரரும் கூட. தற்போது அவருக்கு பொறுப்புக்கள் அதிகரித்து வருகின்றது, எனினும் அவர் சிறப்பாக அனைத்தையும் கையாள்வார் என்பதை அபுதாபியில் அவரது துடுப்பாட்டம் வெளிப்படுத்தியிருந்தது.“

எனக் கூறிய சங்கக்கார, சந்திமால் வருங்காலத்தில் இன்னும் சாதனைகள் செய்யக்கூடிய ஒருவர் என்னும் நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்.

சந்திமால் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாது மூன்று வகைப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாட வேண்டும். த்தோடு அவர் மூன்றாம் இலக்க வீரராகவோ அல்லது நான்காம் இலக்க வீரராகவோ மாத்திரம் துடுப்பாட வேண்டும். அதுவே அவருக்கு பொருத்தமான இடம். சந்திமால் தான் நாம் தேடிவரும் நமக்கு நீண்ட காலத்திற்கு பிரகாசிக்கும் ஆற்றல் கொண்ட வீரர். துரதிஷ்டவசமாக அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களை இழந்திருக்கின்றார். ஆனால் அவரது சிறந்த விளையாட்டை நாம் இதுவரை பார்க்கவில்லை. நான் அவர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் வரையில் தாண்டுவார் என எதிர்பார்க்கின்றேன்.“

என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார சந்திமால் பற்றி இறுதியாகக் குறிப்பிட்டிருந்தார்.