முதற்பாதியில் நஸீம் பெற்ற அசத்தலான ஹட்ரிக் கோலின் உதவியோடு இளம் ஒடிடாஸ் விளையாட்டுக் கழகத்தை 9-1 என்ற கோல்கள் அடிப்படையில் அபாரமாக வெற்றி கொண்ட லிவர்பூல் விளையாட்டுக் கழகம் ட்ரகன்ஸ் லீக் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தினைப் பெற்றது.

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் நடாத்திக்கொண்டிருக்கின்ற ‘ட்ரகன்ஸ் லீக் -2017’ தொடரின் 21வது லீக் ஆட்டம் புத்தளப் பிரதேசத்தின் அனுபவமிக்க மற்றும் அதிக ஆதரவாளர்களைக் கொண்ட அணியான லிவர்பூல் கழகத்திற்கும் வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்ட ஒடிடாஸ் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பந்து லிவர்பூல் வீரர்களின் கால்களிலேயே காணப்பட்டது. அவர்கள் ஒடிடாசின் பகுதியை ஆக்கிரமித்தே ஆடத் தொடங்கினர்.

நியு ஸ்டாரின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது விம்பில்டன்

புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற

போட்டியின் 8வது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கிடைத்த கோணர் உதையினை அப்ரார் அடிக்க, உயரமாக வந்த பந்தை நப்ரி தலையால் முட்டினார். பந்து நஸீமின் தலைக்கே செல்ல நஸீமும் பந்தை தலையால் முட்டி கோல் காப்பாளர் இல்லாத பகுதியூடாக கம்பங்களுக்குள் அனுப்ப முதல் கோலைப் பதித்தது லிவர்பூல் கழகம்.

அடுத்த இரண்டு நிமிடங்கள் கழிந்த நிலையில் (11வது நிமிடத்தில்) லிபர்பூல் கழகத்தின் ரவ்சான் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற நஸீம் கம்பம் நோக்கி வேகமாக அடித்தார். அதனை கோல் காப்பாளர் முபாசிக் பிடிக்க முனைகையில் பந்து கம்பத்திற்குள் சரணடைய நஸீமின் கோல் கணக்கும் லிவர்பூலின் கோல் கணக்கும் இரட்டிப்பானது.

தொடரான இரண்டு கோல்களால் ஆட்டம் கண்டிருந்த ஒடிடாஸ் அணிக்கு மீண்டும் 13வது நிமிடத்தில் கோல் அதிர்ச்சி காத்திருந்தது. அனுபவ வீரர் அலி கொடுத்த அற்புதமான பந்துப் பரிமாற்றத்தை நுஸ்ரி பெற்று இலகுவாக கம்பத்திற்குள் அனுப்ப லிவர்பூலின் கோல் கணக்கு மூன்றாக உயர்ந்தது.

போட்டியின் 15வது நிமிடத்தில் லிவர்பூலின் ரவ்ஸான் பந்தினை ஒடிடாசின் பெனால்ட்டி பகுதிக்குள் கொண்டு செல்கையில் ஒடிடாசின் தடுப்பு வீரர் தாஸிம் முறையற்ற விதத்தில் முட்டித் தள்ள நடுவர் லிவல்பூல் கழகத்திற்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார்.

முசாக்கிர் பெனால்டி உதையை வலப்பக்கமாக அடிக்க, முபாசிக் இடப்பக்கமாக பாய பந்து எந்தத் தடங்களும் இன்றி கம்பத்தினுள் சென்றது.

ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் ஒடிடாஸிற்குக் கிடைத்த முதல் ப்ரீ கிக் வாய்ப்பினை அஹ்ஸாப் அடிக்க அதை இலகுவாகப் பிடித்துக்கொண்டார் கோல் காப்பாளர் ஹுஸைர்.

அடுத்த நிமிடமே (25) லிவர்பூலின் ஹுசைன் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற நஸீம் துள்ளியமான முறையில் பந்தினைக் கம்பத்திற்குள் செலுத்தினார். முபாசிக் பாய்ந்து தடுக்க முட்படுமுன் பந்து கம்பத்திற்குள் சென்று கோலாக மாற நஸீம் தனது ஹட்ரிக் கோலினை பதிவு செய்ததுடன் அணி தன் கோல் கணக்கை 5 ஆக உயர்த்தியது.

ஆட்டம் முழுவதையும் லிவர்பூல் தன் பக்கம் சுருட்டிக்கொள்ள ஒடிடாஸ் கழகம் செயல் இழந்து போனது. ஒரு பந்துப் பரிமாற்றத்தைக் கூட ஒடிடாஸ் கழகத்தால் நேர்த்தியாக மேற்கொள்ள முடியாமல் காணப்பட்டது.

முதல் போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) 15 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து

போட்டியின் 37வது நிமிடத்தில் மீண்டும் கோல் அதிர்ச்சி கொடுத்தது லிவர்பூல். அலி கொடுத்த சிறப்பான கோலுக்குறிய பந்துப் பரிமாற்றத்தை அப்ரார் பெற்று நேர்த்தியாக கம்பத்திற்குள் நிறைவு செய்தார்.

ஒரு பக்கம் கோல் குவிக்கப்பட மறுபக்கம் லிவர்பூலின் கோல் கம்பம் வெறுமையாக இருந்தது.

முதற் பாதியின் இறுதி முயற்சியாக லிவர்பூலின ஹுசைன் கொடுத்த பந்தினைப் பெற்ற அலி ஒடிடாசின் மூன்று தடுப்பு வீரர்களையும் தாண்டி கம்பம் நோக்கி அடிக்க அதை முபாசிக் கையால் குத்தி விட்டார்.

முதல் பாதி: லிவர்பூல் விளையாட்டுக் கழகம் 6-0 ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம்

முதல் பாதியில் பெற்ற கோல்களை விட இரண்டாம் பாதியில் அதிகமாக கோல்கள் பெற வேண்டும் என்ற நோக்கோடு லிவர்பூல் களம் காண, அதை எவ்வாறாயினும் தடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் களம் கண்டனர் இளம் ஒடிடாஸ் வீரர்கள்.

இரண்டாம் பாதி தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் (47) லிவர்பூலின் இம்ராஸ் கொடுத்த பந்தினை நஸ்ரி கம்பம் நோக்கி அடிக்க வேகமாக வந்த பந்தினை முபாசிக் கையால் குத்திவிட்டார். பந்து மீண்டும் லிவர்பூலின் முஸாக்கிரின் கால்களுக்கு வர அதை இலகுவாக கம்பத்திற்குள் செலுத்தி தன் கோல் கணக்கினை இரட்டிப்பாக்கி அணியின் கணக்கை ஏழாக உயர்த்தினார்.

தொடர்ந்து 49வது நிமிடத்தில் லிவர்பூல் அணித் தலைவர் ஹுசைன் நீண்ட தூரத்திலிருந்து பந்தினை கம்பம் நோக்கி கொண்டுவந்து வேகமாக கம்பத்திற்குள் அடிக்க அதை முபாசிக் பாய்ந்து தடுக்கையில் பந்து கைகளில் பட்டவாரே கம்பம் புக லிவர்பூல் 8வது கோலையும் புகுத்தியது.

லிவர்பூலின் தடுப்பு வீரர்களும் ஒடிடாஸின் பகுதிக்குள் நுழைய ஒடிடாஸால் நிலைத்து நிற்க முடியாமல் இருந்தது.

போட்டியின் 57வது நிமிடத்தில் நஸ்ரி கொடுத்த பந்தினை முஸாக்கிர் கம்பம் நோக்கி உதைக்க பந்து கம்பத்தின் மேல் பகுதியில் பட்டு வெளியேறியது.

இரண்டாம் பாதியின் ஒடிடாஸின் முதல் முயற்சியாக மஸ்லான் பந்தினை லிவர்பூலின் பெனால்டி பகுதிக்குள் கொண்டு சென்று அடிக்க பந்து லிவர்பூலின் தடுப்பு வீரர் நப்ரியின் கைகளில் பட்டது. எனவே, நடுவர் பெனால்டி உதையினை ஒடிடாஸ் கழகத்திற்கு வழங்கினார்.

2019 உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதிபெற இலங்கைக்கு இறுதி வாய்ப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 5 போட்டிகள்

பெனால்டி உதையை அஹ்சாப் அடிக்க எந்தத் தடையும் இன்றி பந்து கம்பத்தினுள் சரணடைய பலமிக்க லிவர்பூல் கழகத்திற்கு எதிராக தனது கோல் கணக்கினை ஆரம்பித்தது ஒடிடாஸ்.

போட்டியில் முழுப் போக்கினையும் லிவர்பூல் கைப்பற்றிக்கொள்ள ஆட்டம் விறுவிறுப்பினை இழந்தது.

ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் அனுபவமிக்க அலி கொடுத்த சிறந்த பந்தினைப் பெற்ற பின் கள வீரர் நப்ரி கம்பத்திற்குள் இலகுவாக அடிக்க 9வது கோலையும் பதிவு செய்தது லிவர்பூல் கழகம்.

மேலும், தொடர்ச்சியாக லிவர்பூல் கழகத்திற்கு கிடைத்த இலகுவான சில கோல் வாய்ப்புக்களை முன்கள வீரர்கள் வீணடிக்க ரசிகர்கள் சலித்துக் கொண்டனர்.

ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் நப்ரி கொடுத்த பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற ரவ்சான் இலகுவாக கோலாக்க வேண்டிய பந்தினை முபாசிக்கின் கைகளுக்கே தாரை வார்க்க போட்டியின் இறுதி முயற்சி தோல்வியில் முடிந்தது.

போட்டி நிறைவு பெற்றதாய் நடுவர் அறிவிக்க வளர்ந்து வரும் இளம் ஒடிடாஸ் கழகத்தினை, அனுபவம் மற்றும் பலம் கொண்ட லிவர்பூல் கழகம் 9-1 என்ற கோல்கள் அடிப்படையில் அபாரமாக வெற்றி கொண்டது. எனவே அவ்வணி 12 புள்ளிகளோடு முதலிடத்தினைப் பிடித்துக்கொண்டது.

முதல் பாதி: லிவர்பூல் விளையாட்டுக் கழகம் 9-1 ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

லிவர்பூல் விளையாட்டுக் கழகம் – நஸீம் 8’, 11,’ 25’, நஸ்ரி 13’, முஸாக்கிர் 15&47’, அப்ரார் 37’, ஹுசைன் 49’, நப்ரி 75’

ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம் – அஹ்ஸாப் 60’

மஞ்சள் அட்டை

லிவர்பூல் விளையாட்டுக் கழகம் – நஸீம் 51’

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க

கால்பந்து

உலகின் அதிவேக வீரரும், கடந்த வாரம் சர்வதேச மெய்வல்லுனர் அரங்கிலிருந்து ஓய்வு ..