மலிந்த புஷ்பகுமாரவின் அதிரடி பந்து வீச்சால் கொழும்பு அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

187

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஏற்பாட்டில் பிரிவு A கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆறு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (09) நிறைவடைந்தன. இதில் ஐந்து போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றதோடு கொழும்பு கோல்ட்ஸ் அணியுடனான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டிகளின் விபரம் வருமாறு,

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

மலிந்த புஷ்பகுமார பந்துவீச்சிலும் அஷான் பிரியன்ஜன் துடுப்பாடத்திலும் சோபிக்க கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துடனான போட்டியை கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 19 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

தொடர்ச்சியாக இரண்டாவது வாரமும் பந்துவீச்சில் அசத்தும் மொஹமட் ஷிராஷ்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஏற்பாட்டில் பிரிவு A கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின்…

அஷான் பிரியன்ஜன் ஆட்டமிழக்காது பெற்ற 161 ஓட்டங்கள் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் 142 ஓட்டங்கள் முன்னிலை பெற, தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி 123 ஓட்டங்களுக்கே சுருண்டு தோல்வியை சந்தித்தது. இதன்போது அனுபவ சுழற்பந்து வீச்சாளர் புஷ்பகுமார இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 11 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.  

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 225 (87.3) – விஷாட் ரன்திக்க 68, நிசல தாரக்க 26, தனஞ்சய லக்ஷான் 24, அகில தனன்ஜய 23*, ஹஷான் துமிந்த 23, மலிந்த புஷ்பகுமார 6/85, அஷான் பிரியன்ஜன் 2/25

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 367 (87) – அஷான் பிரியன்ஜன் 161*, வனிந்து ஹசரங்க 56, மினோத் பானுக்க 33, மாதவ வர்ணபுர 28, கவிஷ்க அஞ்சுல 3/28,  நிசல தாரக்க 2/57

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 123 (43) – சங்கீத் குரே 37, கவிஷ்க அஞ்சுல 21, மலிந்த புஷ்பகுமார 5/53, அஷான் பியன்ஜன் 3/17

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 19 ஓட்டங்களால் வெற்றி  

Photos: Tamil Union C & AC v NCC | Major League Tier A Tournament 2018/19

ThePapare.com | Waruna Lakmal | 08/12/2018 | Editing and re-using images without permission of ThePapare.com will be…

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

இரண்டாவது இன்னிங்ஸுக்கு பலோ ஓன் செய்த இலங்கை துறைமுக அதிகாரசபை அணி பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி போட்டியை சமன் செய்து.

பாணந்துறை இராணுவ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 329 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த துறைமுக அதிகாரசபை அணி ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மாத்தரம் இழந்து 279 ஓட்டங்களை பெற்றிருந்தது.   

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 462/9 d (127.2) – துஷான் விமுக்தி 178, சீக்குகே பிரசன்ன 89, லக்ஷான் எதிரிசிங்க 81, டில்ஷான் டி சொய்சா 46, சஞ்சிக்க ரித்மா 37, சமிந்த பண்டார 4/112, சானக்க கோமசரு 3/132

இலங்கை துறைமுக அதிகாரசபை (முதல் இன்னிங்ஸ்) – 133 (53) – பிரமோஷ் பெரேரா 28, பிரஷான் விக்ரமசிங்க 26, ஜனித் சில்வா 4/34, துஷான் விமுக்தி 4/18, சீகுகே பிரசன்ன 2/41

இலங்கை துறைமுக அதிகாரசபை (இரண்டாவது இன்னிங்ஸ்) – F/O 279/4 (84) – பிரமோஷ் பெரேரா 93, ரமேஷ் நிமன்த 76, அதீஷ நாணயக்கார 62*, துஷான் விமுதி 3/59

முடிவு – போட்டி சமநிலையில் முடிந்ததுளு  

தனுஷ்க குணதிலக்கவின் அதிரடியுடன் இலங்கை முன்னேற்றம்

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை அணி மற்றும் நியூசிலாந்து பதினொருவர் அணிகளுக்கு…

BRC எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

BRC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் துடுப்பாட்டம் பந்துவீச்சில் சோபித்த நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு 240 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 142 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 221 (72.4) – ஹஷேன் ராமநாயக்க 66, டேஜான் டயஸ் 42, ரமிந்த விஜேசூரிய 30, துவிந்து திலகரத்ன 20*, ஷிஹான் ஜயசூரிய 4/56, உபுல் இன்திரசிறி 3/49

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 258 (86.4) – லசித் குரூஸ்புள்ளே 79, செஹான் ஜயசூரிய 47*, செஹான் ஆரச்சிகே 37, உபுல் இன்திரசிறி 28, மொஹமட் ஷிராஸ் 6/89, டீ.என். சம்பத் 3/50

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 276/4d (53.5) – டினேஷ் டயஸ் 119, லசித் லக்ஷான் 61, ருமேஷ் புத்திக்க 45, டீ.என். சம்பத் 36, சஹான் அதீஷ 2/63

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 142/2 (37) – லசித் குரூஸ்புள்ளே 85, டிலசிறி லொக்குபண்டார 39, ஹஷேன் ராமநாயக்க 2/33

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு  

NCC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

கொழும்பு, சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் NCC அணி நிர்ணயித்த சவாலான வெற்றி இலக்கை தவிர்த்து தமிழ் யூனியன் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது. 334 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தமிழ் யூனியன் வீரர்கள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை பெற்றனர்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 296 (83.2) – அஞ்சலோ பெரேரா 124, லஹிரு உதார 38, உபுல் தரங்க 37, மாலிங்க அமரசிங்க 37, மஹேல உடவத்த 21, சச்சித்ர சேரசிங்க 3/64, லஹிரு மிலன்த 2/17, சதீஷ் பத்திரணகே 2/54

தமிழ் யூனியன் (முதல் இன்னிங்ஸ்) – 184 (68.5) – லஹிரு மிலன்த 35, தரங்க பரணவிதான 32, இசுரு உதான 24, சச்சின்த பீரிஸ் 5/74, சரங்க ராஜகுரு சத்துரங்க டி சில்வா 2/28

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 221/3d (54) – உபுல் தரங்க 59*, சதுரங்க டி சில்வா 56, லஹிரு உதார 53, மஹேல உடவத்த 39, சச்சித்ர சேரசிங்க 1/34

தமிழ் யூனியன் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 219/4 (47) – லஹிரு மிலன்த 76, சிதார கிம்ஹான 54, மனோஜ் சரத்சந்திர 33, கித்ருவன் விதானகே 26*, சரங்க ராஜகுரு 2/64

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு  

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் வீரர்கள் நிர்ணயித்த 403 என்ற இமாலய ஓட்ட வெற்றி இலக்கை தவர்த்து ராகம கிரிக்கெட் கழகம் போட்டியை வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடித்துக் கொண்டது.

Photos: Negombo CC Vs. BRC | Major League Tier A Tournament 2018/19

ThePapare.com | Viraj Kothalawala | 08/12/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be…

கட்டுநாயக்க, MCG மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ராகம கிரிக்கெட் கழகம் கடைசி நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றிருந்தது. சஞ்சய சத்துரங்க ஒரு ஓட்டத்தால் சதத்தை தவறவிட்டர்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் (முதல் இன்னிங்ஸ்) – 281 (60.2) – ஓஷத பெர்னாண்டோ 100, ஹர்ஷ குரே 95, யசோத லங்கா 25, அமில அபொன்சோ 5/86, சஹன் நாணயக்கார 4/45

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 256 (79.1) – சம்மு பெர்னாண்டோ 42, அக்ஷு பெர்னாண்டோ 40, ஜனித் லியனகே 31, சஹன் நாணயக்கார 28, சஞ்சய சத்துரங்க27, நிமேஷ் விமுக்தி 6/76, சத்துர ரன்துனு 4/98

சிலாபம் மேரியன்ஸ் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 377 (86.3) – திக்ஷில டி சில்வா 85, நிமேஷ் விமுக்தி 74, ரய்பி கோமஸ் 50*, குரே 37, யசோத லங்கா 34, புலின தரங்க 32, அமில அபொன்சோ 8/148   

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 172/4 (39) – சஞ்சய சத்துரங்க 99, சுபேஷல ஜயதிலக்க 29*, நிமேஷ் விமுக்தி 2/44

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு  

த்ரில்லர் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது குழு நிலைப் போட்டியில் இலங்கை வளர்ந்து வரும்…

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் SSC

தனது சொந்த மைதானத்தில் SSC அணி துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்த சரசென்ஸ் அணியுடனான போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது. கௌஷால் சில்வாவில்  (127) சதத்தின் மூலம் SSC அணி முதல் இன்னிங்ஸில் 419 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 293 (88.1) – கமிந்து கனிஷ்க 95, சாலிய சமன் 81, மிலந்த சிறிவர்தன 24, நிபுன் கருனநாயக்க 23, தரிந்து ரத்னாயக்க 3/57, சச்சித்ர சேனநாயக்க 2/48, கசுன் மதுஷங்க 2/53

SSC (முதல் இன்னிங்ஸ்) – 419/8d (125.2) – கௌஷால் சில்வா 127, கவிந்து குலசேகர 56, சாமர கப்புகெதர 84, கிரிஷான் ஆரச்சிகே 38, சச்சித்ர சேனநாயக்க 35, சாமிக்கர எதிரிசிங்க 4/119

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 169/6 (52.4) – அஷேன் பண்டார 48, நவிந்து விதானகே 29, மிலிந்த சிறிவர்தன 24, ஆகேஷ் செபாராத்ன 2/50, தரிந்து ரத்னாயக்க 2/46

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<