சம்பியன்ஸ் லீக் கனவுக்காக மோதும் 6 அணிகள்

373

2017 பருவகாலத்திற்கான பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்காக ஆறு அணிகள் தெரிவாகியுள்ளன. 

டிவிஷன் 1 தொடரில் 18 அணிகள் பங்கேற்கும் நிலையில், இம்முறை போட்டித் தொடருக்காக அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தன. குழுநிலை போட்டிகளின் நிறைவில் இரண்டு குழுக்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட அணிகள்சூப்பர் சிக்ஸ்சுற்றுக்கு தகுதி பெற்றன. இதேவேளை இரு குழுக்களிலும் இறுதி இடத்தை பெற்றுக் கொண்ட அணிகள், அடுத்த பருவகாலத்தில் தரமிறக்கம் செய்யப்படும்.

DCL சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டித் தினத்தில் மாற்றம்

டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) கால்பந்து தொடரின் சம்பியன்..

சூப்பர் 6 சுற்றில் தெரிவாகியுள்ள ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் தலா ஒரு முறை என ஐந்து போட்டிகளில் விளையாடுவதுடன், அப்போட்டிகளின் முடிவுகளை கொண்டு புதிய புள்ளிப்பட்டியல் தயாரிக்கப்படும். சுற்றின் நிறைவில் முதலிடத்தை பெற்றுக் கொள்ளும் அணியானது சம்பியன் பட்டத்தை வெல்லும் அதேவேளை, முதலிரண்டு இடங்களை பெறும் அணிகள் அடுத்த பருவகாலத்தின் போது சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும்.

குழு A

திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம், கொம்ரெட்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் மற்றும் ரெட் சன் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகள் குழு A யிலிருந்து சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

Team

P

W

D

L

GF

GA

GD

Pts

Thihariya Youth

8

6

1

1

26

8

18

19

Comrades SC

8

6

0

2

19

7

12

18

Red Sun SC

8

5

2

1

20

8

12

17

Cooray SC

8

4

1

3

10

14

-4

13

Gelioya FC

8

3

2

3

16

18

-2

11

New Star SC

8

3

2

3

14

13

1

11

Green Field SC

8

1

2

5

10

24

-14

5

Old Bens SC

8

0

3

5

5

16

-11

3

Jupiter SC

8

0

3

5

3

15

-12

3

திஹாரிய யூத் அணியானது 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் தலா ஒவ்வொரு போட்டிகளில் மாத்திரமே தோல்வி மற்றும் சமநிலையான முடிவுகளை பதிவு செய்துள்ளது. அவ்வணி கொம்ரெட்ஸ் அணியுடனான போட்டியிலேயே தோல்வியை தழுவியது. அப்போட்டியின் போது அவ்வணியின் பல வீரர்கள் பார்வையாளர்களினால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எகிப்து கால்பந்து நட்சத்திரம் சலாஹ்வுக்கு மற்றுமொரு விருது

லிவர்பூல் அணிக்காக விளையாடி வரும் எகிப்தின்..

சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளில் திஹாரிய அணியே அதிக கோல்களைப் (26) பெற்றுள்ளது. அத்துடன் வெறும் 8 கோல்களை மாத்திரம் எதிரணிக்கு வழங்கியுள்ள அவ்வணி சிறப்பான தடுப்பாட்டத்தையும் வெளிக்காட்டியுள்ளது.

பதுளை பிரதேசத்தை சார்ந்த கொம்ரெட்ஸ் விளையாட்டுக் கழகம் 6 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளுடன் 18 புள்ளிகளை பெற்றிருந்தது. 8 போட்டிகளில் 7 கோல்களை மாத்திரம் வழங்கியுள்ள அவ்வணி மிகச்சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

குழு A யின் மூன்றாவது இடத்தை கம்பளை ரெட் சன் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது. மொத்தமாக 17 புள்ளிகளை பதிவு செய்துள்ள அவ்வணி, ஏனைய இரண்டு அணிகளைப் போன்றே தாக்குதல் ஆட்டம் மற்றும் தடுப்பாட்டம் என இரண்டிலும் சிறப்பாக செயற்பட்டிருந்தது.

இதேவேளை குழு A யில் இறுதி இடத்திற்கு தள்ளப்பட்ட ஜூபிடர் விளையாட்டுக் கழகம் டிவிஷன் 2 தொடரிற்கு தரமிறக்கம் செய்யப்படவுள்ளது. ஒரு காலத்தில் பலமிக்க சம்பியன்ஸ் லீக் அணியாக காணப்பட்ட ஜூபிடர் அணி, தொடர்ச்சியான மோசமான ஆட்டத்தின் காரணமாக தரமிறக்கத்தை எதிர்நோக்கியுள்ளது.  

குழு A முடிவுகள்
கட்டம் 1 கட்டம் 2 கட்டம் 3
திஹாரிய யூத் 6 – 1 கிறீன் பீல்ட்

கெலிஓய FC 3 – 3 ரெட் சன் SC

ஓல்ட் பென்ஸ் SC 2 – 2 நிவ் ஸ்டார் SC

ஜூபிடர் SC 0 – 1 குரே SC

கொம்ரெட்ஸ் SC 3 – 0 திஹாரிய யூத்

கிறீன் பீல்ட் 2 – 1 ஓல்ட் பென்ஸ் SC

ரெட் சன் 4 – 0 குரே SC

நிவ் ஸ்டார் SC 2 – 0 ஜூபிடர் SC

கொம்ரெட்ஸ் SC 2 – 0 ஓல்ட் பென்ஸ் SC

கெலிஓய FC 0 – 1 குரே SC

திஹாரிய யூத் 0 – 0 ஜூபிடர் SC

கிறீன் பீல்ட் 1 – 5 ரெட் சன் SC

கட்டம் 4 கட்டம் 5 கட்டம் 6
கொம்ரெட்ஸ் SC 1 – 0 ஜூபிடர் SC

குரே SC 3 – 1 நிவ் ஸ்டார் SC

ஓல்ட் பென்ஸ் SC 0 – 1 ரெட் சன் SC

கெலிஓய FC 2 – 0 கிறீன் பீல்ட்

குரே SC 1 – 4 கொம்ரெட்ஸ் SC

ஜூபிடர் SC 0 – 0 ஓல்ட் பென்ஸ் SC

நிவ் ஸ்டார் SC 2 – 3 கெலிஓய FC

ரெட் சன் SC 2 – 3 திஹாரிய யூத்

ரெட் சன் SC 1 – 0 கொம்ரெட்ஸ் SC

நிவ் ஸ்டார் SC 2 – 1 கிறீன் பீல்ட்

குரே SC 0 – 3 திஹாரிய யூத்

ஓல்ட் பென்ஸ் SC 2 – 2 கெலிஓய FC

கட்டம் 7 கட்டம் 8 கட்டம் 9
கிறீன் பீல்ட் 2 – 5 கொம்ரெட்ஸ் SC

திஹாரிய யூத் 4 – 2 நிவ் ஸ்டார் SC

கெலிஓய FC 6 – 1 ஜூபிடர் SC

குரே SC 2 – 0 ஓல்ட் பென்ஸ் SC

கொம்ரெட்ஸ் SC 4 – 0 கெலிஓய FC

ஓல்ட் பென்ஸ் SC 0 – 5 திஹாரிய யூத்

ஜூபிடர் SC 1 – 1 கிறீன் பீல்ட்

ரெட் சன் SC 0 – 0 நிவ் ஸ்டார் SC

நிவ் ஸ்டார் SC 3 – 0 கொம்ரெட்ஸ் SC

ஜூபிடர் SC 1 – 4 ரெட் சன் SC

கிறீன் பீல்ட் 2 – 2 குரே SC

திஹாரிய யூத் 5 – 0 கெலிஓய FC

அணித் தலைவராகவுள்ள மெதிவ்ஸ் உடற்தகுதி சோதனையில் தேர்வு

ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (07) நடைபெற்ற..

குழு B

ரட்ணம் விளையாட்டுக் கழகம், ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் செரண்டிப் கால்பந்து கழகம் ஆகிய அணிகள் குழு B யிலிருந்து சூப்பர் 6 சுற்றுக்கான வாய்ப்பினை தமதாக்கிக் கொண்டன.

Team

P

W

D

L

GF

GA

GD

Pts

Ratnam SC

8

5

2

1

19

12

7

17

Red Star SC

8

5

2

1

22

13

9

17

Serendib FC

8

5

1

2

16

9

7

16

Badovita United

8

5

0

3

15

8

7

15

Hyline SC

8

2

4

2

10

15

-5

10

SLTB SC

8

3

1

4

8

15

-7

10

St.Mary’s SC

8

3

0

5

14

13

1

9

Old Mazenodians

8

2

2

4

13

19

-6

8

Civil Security SC

8

0

0

8

6

19

-13

0

இறுதி வாரத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியொன்றில் ரெட் ஸ்டார் அணியை 6-5 என வீழ்த்தி அதிரடி வெற்றியீட்டிய ரட்ணம் விளையாட்டுக் கழகம் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுக் கொண்டது. அவ்வணி 5 வெற்றி, 2 சமநிலை மற்றும் 1 தோல்வியுடன் குழு B யில் முதலிடத்தில் உள்ளது.

ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் ரட்ணம் அணியை போன்றே 5 வெற்றி, 2 சமநிலை மற்றும் 1 தோல்வியை பதிவு செய்துள்ளது. அவ்வணியானது சூப்பர் 6 அணிகளை பொறுத்த மட்டில், அதிக கோல்களை பெற்றுள்ள பட்டியலில் இரண்டாவது நிலையிலுள்ளது. எனினும் எதிரணிக்கு தாராளமாக கோல்களை வழங்கியுள்ளமை அவ்வணியின் தடுப்பாட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

செரண்டிப் கால்பந்து கழகத்திற்கும் இலங்கை போக்குவரத்து சபை விளையாட்டுக் கழகத்துடனான (SLTB SC) இறுதிவாரப் போட்டியில் செரண்டிப் அணிக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலை காணப்பட்டது. எனினும் அப்போட்டியில் செரண்டிப் 3-0 என இலகு வெற்றியை பெற்றுக் கொண்டது. செரண்டிப் வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிக்காட்டியுள்ள போதிலும், அவ்வணி மிகக் குறைந்தளவு கோல்களையே பெற்றுக்கொண்டுள்ளது.

குழு B யில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவி, ஒரு புள்ளியேனும் பெறத்தவறிய சிவில் பாதுகாப்பு விளையாட்டு கழகம் (Civil Security SC) டிவிஷன் 2 தொடரிற்கு தரமிறக்கம் செய்யப்படவுள்ளது.

குழு B முடிவுகள்
கட்டம் 1 கட்டம் 2 கட்டம் 3
செரண்டிப் FC 1 – 0 சிவில் பாதுகாப்பு SC

ரட்ணம் SC 1 – 0 சென் மேரிஸ் SC

ரெட் ஸ்டார் SC 2 – 0 SLTB SC

ஓல்ட் மெஸினோடியன்ஸ் 2 – 1 படோவிட யுனைடட்

சிவில் பாதுகாப்பு SC 0 – 1 ஹைலைன் SC

ரெட் ஸ்டார் SC 2 – 2 செரண்டிப் FC

சென் மேரிஸ் 2 – 0 ஓல்ட் மெஸினோடியன்ஸ்

படோவிட யுனைடட் 3 – 0 .போ. SC

ஹைலைன் SC 0 – 0 ரட்ணம் SC

ரெட் ஸ்டார் SC 2 – 1 சிவில் பாதுகாப்பு SC

படோவிட யுனைடட் 2 – 1 செரண்டிப் FC

சென் மேரிஸ் SC 1 – 2 SLTB SC

கட்டம் 4 கட்டம் 5 கட்டம் 6
ஹைலைன் SC 1 – 1 ரெட் ஸ்டார் SC

ஓல்ட் மெஸினோடியன்ஸ் 2 – 2 ரட்ணம் SC

சிவில் பாதுகாப்பு SC 1 – 4 படோவிட யுனைடட்

செரண்டிப் FC 1 – 0 சென் மேரிஸ் SC

ஹைலைன் SC 2 – 2 SLTB SC

படோவிட யுனைடட் 1 – 0 சென் மேரிஸ் SC

செரண்டிப் FC 5 – 3 ஓல்ட் மெஸினோடியன்ஸ்

சிவில் பாதுகாப்பு SC 1 – 4 ரட்ணம் SC

செரண்டிப் FC 2 – 0 ஹைலைன் SC

SLTB SC 2 – 1 சிவில் பாதுகாப்பு SC

ரட்ணம் SC 1 – 3 படோவிட யுனைடட்

ஓல்ட் மெஸினோடியன்ஸ் 1 – 4 ரெட் ஸ்டார் SC

கட்டம் 7 கட்டம் 8 கட்டம் 9
ஓல்ட் மெஸினோடியன்ஸ் 2 – 2 ஹைலைன் SC

படோவிட யுனைடட் 0 – 1 ரெட் ஸ்டார் SC

SLTB SC 0 – 3 ரட்ணம் SC

சென் மேரிஸ் SC 2 – 1 சிவில் பாதுகாப்பு SC

ஹைலைன் SC 2 – 1 படோவிட யுனைடட்

SLTB SC 2 – 0 ஓல்ட் மெஸினோடியன்ஸ்

ரெட் ஸ்டார் SC 5 – 2 சென் மேரிஸ் SC

ரட்ணம் SC 2 – 1 செரண்டிப் FC

சென் மேரிஸ் SC 7 – 2 ஹைலைன் SC

SLTB SC 0 – 3 செரண்டிப் FC

சிவில் பாதுகாப்பு SC 1 – 3 ஓல்ட் மெஸினோடியன்ஸ்

றட்ணம் SC 6 – 5 ரெட் ஸ்டார் SC

ரட்னம், ரெட் ஸ்டார், திஹாரிய அணிகள் சுபர் சிக்ஸ் முதல் வாரத்தில் வெற்றி

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால்..