IPL ஏலத்தில் புது வரலாறு படைத்த கிறிஸ் மொரிஸ்

514

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் வரலாற்றில் அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை தென்னாபிரிக்கா வீரர் கிறிஸ் மொரிஸ் பெற்றுக் கொண்டார். அவரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16.25 கோடிக்கு, அதாவது 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுத்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 14ஆவது .பி.எல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று (18) சென்னையில் நடைபெற்றது

>> IPL ஏலத்தில் விலைபோகாத இலங்கை வீரர்கள்

ஏற்கனவே 8 அணிகளும் ஏலத்தில் பங்கேற்க வசதியாக கடந்த மாதம் 139 வீரர்களை தக்க வைத்தன. மேலும் 57 வீரர்களை விடுவித்தனஎனவே ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த 1,114 வீரர்களில் இருந்து 292 பேரை ஏலம் கேட்க அனுமதிக்கப்பட்டது. இதில் 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்களுடன், மூன்று .சி.சி. உறுப்பு நாடுகளின் வீரர்கள் இடம்பெற்றனர்.

இதன்படி, .பி.எல். ஏலத்தில் விலை போன வீரர்களை 8 அணிகளும் சேர்த்து இந்திய பணப்பெறுமதியில் மொத்தம் ரூ.145 கோடியே 30 இலட்சத்துக்கு வாங்கின. 

இந்த நிலையில், வீரர்களின் அடிப்படை விலையாக குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முதல் வீரராக கருண் நாயர் ஏலம் விடப்பட்டார். அவரை யாரும் ஏலம் கேட்கவில்லை. ஆனால் அடுத்த சுற்றில் அடிப்படை விலைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி விடுவித்த அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்தில் எடுக்க பெங்களூரு, டெல்லி அணிகள் போட்டியிட்டன. அதில் டெல்லி கெபிடல்ஸ் அணி அவரை 2.2 கோடிக்கு (அடிப்படை விலை 2 கோடி ரூபா) ஏலம் எடுத்தது

அதே நேரத்தில் தென்னாபிரிக்கா அணியின் சகலதுறை வீரரான கிறிஸ் மொரிஸை (அடிப்படை விலை 75 இலட்சம்) வாங்குவதில் கடும் போட்டி நிலவியதுமும்பை, பெங்களூரு அணிகள் முதலில் போட்டியிட்டன

>> இலங்கை வீரர்களின் திறமை தொடர்பில் கூறும் முத்தையா முரளிதரன்!  

மும்பை 8.5 கோடிக்கு கேட்டது. அடுத்து பஞ்சாப்பும் களத்தில் இறங்க ஏலத் தொகை அதிகரித்தது. முடிவில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16.25 கோடிக்கு கிறிஸ் மொரிஸை ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம், .பி.எல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வீரராக அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு யுவ்ராஜ் சிங்கை 16 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது

எதுஎவ்வாறாயினும், கடந்த ஆண்டு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இவரை ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அத்துடன், கடந்த முறை 12 விக்கெட்டுகளை எடுத்த கிறிஸ் மொரிஸ் வெறும் 34 ஓட்டங்களையே குவித்தார்

அதற்கு அடுத்தப்படியாக நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். பஞ்சாப், பெங்களூரு அணிகள் இவரை வாங்க மோதின. முடிவில் பெங்களூரு அணி ரூ. 15 கோடிக்கு வாங்கியது. நேற்றைய ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டாவது வீரர் ஆனார் ஜேமிசன்.

அடுத்தபடியாக அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மெக்ஸ்வெல்லை வாங்க (அடிப்படை விலை ரூ. 2 கோடி) மீண்டும் கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த சீசனில் 13 போட்டியில் விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்காத இவரை வாங்க, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு அணிகள் மோதிக் கொண்டன. கடைசியில் ரூ. 14.25 கோடி கொடுத்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிளென் மெக்ஸ்வெல்லை வாங்கியது

>> பெயர் மாற்றம் மேற்கொள்ளும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்

அண்மையில் நிறைவுக்கு வந்த பிக் பாஷ் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. 

அதேபோல், அவுஸ்திரேலியாவின் மற்றுமொரு இளம் வேகப் பந்துவீச்சாளரான ரிலே மெரிடித்தை 8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.

இதனிடையே, சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள் தரவரிசையில்நம்பர்–1′ துடுப்பாட்ட வீரர், இங்கிலாந்தின் டாவிட் மலான் (ரூ. 1.5 கோடி) பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

மேலும், போட்டித் தடைக்குப் பின்னர் மீண்டும் திரும்பியுள்ள பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் சகிப் அல் ஹசனை 3.2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது

இதனிடையே, சென்னை சுப்பர் கிங்ஸ் அதிகபட்சமாக கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானை 5.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் இந்த இருவரும்தான் அதிக விலைக்குப் போனார்கள்

>> ”தி ஹன்ரட்” தொடரின் வீரர்கள் ஏலம் அடுத்த வாரம்

அதேபோல, இங்கிலாந்து வீரர் மொயின் அலியை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ், சென்னை அணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்ட்டது. இறுதியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது

மறுபுறத்தில் இந்திய டெஸ்ட் அணியின் பெருஞ்சுவரான புஜாராவுக்கு அண்மைக்காலமாக .பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை

கடந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர், குறைந்த பந்தில் சதம் விளாசினார். ஆனாலும் கடந்த ஆண்டு அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இப்போது சென்னை அணி அவரை அடிப்படை விலையான 50 இலட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஏலத்தின் கடைசி வீரராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் ஏலம் விடப்பட்டார். அவரை அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 இலட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அத்துடன் ஏலம் முடிவடைந்தது.

Watch – மீண்டும் கிரிக்கெட் களத்தில் Russel, Kulasekara & Dhammika…!

இதேவேளை, இம்முறை .பி.எல் ஏலம் போகாத வீரர்களில் ஆரோன் பிஞ்ச், மார்னஸ் லபுஸ்சேன், மெத்யூ வேட், அலெக்ஸ் கேரி (அவுஸ்திரேலியா), ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து), ஹனுமா விஹாரி (இந்தியா), டேரன் பிராவோ, காட்ரெல் (மேற்கிந்திய தீவுகள்), டிம் சவுதி, கொலின் முன்ரோ, மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) ஆகியோர் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இதுஇவ்வாறிருக்க, இம்முறை .பி.எல் ஏலத்தில் இலங்கை சார்பாக ஒன்பது வீரர்கள் இடம்பெற்றிருந்ததுடன், குசல் பெரேரா, திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகிய மூன்று வீரர்கள் மாத்திரம் தான் .பி.எல் ஏலத்தில் களமிறக்கப்பட்டார்கள்

எனினும், எந்தவொரு அணியும் இலங்கை வீரர்களை வாங்குவதற்கு முன்வரவில்லை.

14 வருடகால .பி.எல் வரலாற்றில் முதல்தடவையாக எந்தவொரு இலங்கை வீரரும் ஏலத்தில் வாங்கப்படாத சந்தர்ப்பமாகவும், முதல்தடவையாக .பி.எல் தொடர் ஒன்றில் இலங்கை சார்பாக எந்தவொரு வீரரும் விளையாடாத ஒரு சீசனாக இது வரலாற்றில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<