இரண்டாவது டெஸ்டை வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

150

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 373 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் சார்பாக ஃபகர் சமான் மற்றும் மிர் ஹம்ஸா ஆகியோர் அறிமுக வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.  

பாகிஸ்தானின் வெற்றியை பறித்த உஸ்மான் கவாஜாவின் துடுப்பாட்டம்

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது

தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை தமது முதலாவது விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து ஃபகர் சமான் மற்றும் அஸார் அலி ஆகியோரின் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டம் அரைச்சதம் கடந்த நிலையில், அணி 57 ஓட்டங்களை பெற்றிருந்த போது தமது இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

பாகிஸ்தான் அணி அதே ஓட்ட எண்ணிக்கையில் அடுத்தடுத்து மேலும் மூன்று விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இதன்போது 6 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஃபகர் சமான் மற்றும் அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட் ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டம் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இருவரும் இணைந்து 147 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஃபகர் சமான் தனது அறிமுக போட்டியில் கன்னிச்சதம் பெறும் வாய்ப்பை வெறும் 6 ஓட்டங்களால் தவறவிட, 94 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட்டும் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதம் பெறும் வாய்ப்பை இழந்தார்.  இறுதியாக பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் நதன் லியொன் 4 விக்கெட்டுகளையும் மார்னஸ் லபுஸ்சங்னே 3 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நிறைவில் 20 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 145 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இவ்வோட்ட எண்ணிக்கை பாகிஸ்தான் அணியை விட 137 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையாகும்.  பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சிறப்பாக பந்து வீசிய மொஹமட் அப்பாஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் பிலால் ஆஷிப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

பின்னர் 137 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்றிருந்தது. போட்டியின் மூன்றாம் நாளான நேற்று (18) தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 400 ஓட்டங்கள் பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு 538 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்து தமது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக இரண்டாம் இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாபர் அசாம் டெஸ்ட் போட்டிகளில் தனது கன்னிச்சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டு 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  மேலும், சர்ப்ராஸ் அஹமட் 81 ஓட்டங்கள், ஃபகர் சமான் 66 ஓட்டங்கள் மற்றும் அஸார் அலி 64 ஓட்டங்கள் என பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பங்காற்றியிருந்தனர். லியொன் 4 விக்கெட்டுகளையும் லபுஸ்சங்னே இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.  

மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 538 ஓட்டங்கள் என்ற பாரிய ஓட்ட எண்ணிக்கையை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழந்து 47 ஓட்டங்கள் பெற்றிருந்தது. 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்கின்ற நிலையில் வெற்றி பெறுவதற்கு இன்னும் 491 ஓட்டங்கள் மேலதிகமாக பெற வேண்டிய நிலையில் இன்று (19) நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது போல் மோசமான துடுப்பாட்டத்தின் வெளிப்பாடாக 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.  

அடுத்த ஆட்டத்திலாவது இலங்கைக்கு முதல் வெற்றியை சுவைக்கலாமா?

இலங்கை அணிக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட மூன்று ஒருநாள்

இப்போட்டியில் காயமடைந்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா இரண்டாம் இன்னிங்ஸிற்காக கடைசி வரை துடுப்பெடுத்தாட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தோல்வியானது அவர்களால் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட நான்காவது மோசமான தோல்வியாகும்.

சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அப்பாஸ் 5 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறந்த வீரராகவும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அப்பாஸ் தெரிவு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 24 திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி (முதல் இன்னிங்ஸ்) – 282  ஃபகர் சமான் 94, சர்ப்ராஸ் அஹமட் 94, நதன் லியொன் 78/4,  மார்னஸ் லபுஸ்சங்னே 45/3, மிட்செல் ஸ்டாக் 37/2

அவுஸ்திரேலியா அணி (முதல் இன்னிங்ஸ்) – 145 பின்ஞ்ச் 39, ஸ்டாக் 34, அப்பாஸ் 33/5, ஆஷிப் 23/3

பாகிஸ்தான் அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 400/9dபாபர் அசாம் 99, சர்ப்ராஸ் அஹமட் 81, ஃபகர் சமான் 66, அஸார் அலி 64, லியொன் 135/4,

லபுஸ்சங்னே 78/2

அவுஸ்திரேலியா அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 164லபுஸ்சங்னே 43, ஹெட் 36, அப்பாஸ் 62/5, யாசிர் ஷா 45/3

போட்டி முடிவு : பாகிஸ்தான் அணி 373 ஓட்டங்களால் வெற்றி.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க