ரவின் செயரின் சகலதுறை ஆட்டத்தால் ஹட்டன் நெஷனல் வங்கிக்கு வெற்றி

33

யுனிலிவரின் முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி மென் (Fair & Lovely Men) அனுசரணையில் நடைபெற்று வரும், வர்த்தக நிறுவனங்களுக்கான பிரிவு B (Tier – B) கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மூன்று போட்டிகளில் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB), கான்ரிச் பினான்ஸ் மற்றும் எக்ஸ்போ லங்கா அணிகள் வெற்றிகளை தக்கவைத்துள்ளன.

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற சிட்டிஸன் டிவலப்மண்ட் வங்கி (CDB) அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹட்டன் நெஷனல் வங்கி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றைய இரண்டு போட்டிகளில் சிங்கர் ஸ்ரீலங்கா அணியை எதிர்கொண்ட கான்ரிச் பினான்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதுடன், கொமர்ஷல் கிரடிட் அணிக்கு எதிரான போட்டியில் எக்ஸ்போ லங்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.

மொஹமட் இக்ரமின் அசத்தல் பந்து வீச்சால் ஹட்டன் நெஷனல் வங்கி இலகு வெற்றி

சிட்டிஸன் டெவலப்மண்ட் வங்கி (CDB) எதிர் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB)

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற CDB அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய அந்த ஆணி ஷிஹான் டிலக்ஷிரியின் தனிப்பட்ட போராட்டத்துடன் 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

CDB அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க, டிலக்ஷிரி மாத்திரம் அரைச்சதம கடந்து 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் நவீன் குணவர்தன 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லஹிரு விக்ரமசிங்க 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும வீழ்த்தினர்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய HNB அணி அணி 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 128 ஓட்டங்களை பெற்று, வெற்றிபெற்றது.  HNB அணி சார்பில் மாதவ வர்ணபுர 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மொஹமட் இம்ரான் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

சிட்டிஸன் டிவலப்மண்ட் வங்கி – 125 (37.5) – ஷிஹான் டிலக்ஷிரி 66, நவீன் குணவர்தன 29/4

ஹட்டன் நெஷனல் வங்கி – 128/5 (38.5) மாதவ வர்ணபுர 55, மொஹமட் இம்ரான் 19/2

போட்டி முடிவு –  ஹட்டன் நெஷனல் வங்கி 5 விக்கெட்டுகள் வித்தியாதத்தில் வெற்றி


சிங்கர் ஸ்ரீலங்கா எதிர் கான்ரிச் பினான்ஸ்

மொரட்டுவ விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில், ரவின் செயர் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்த 40 ஓட்டங்களின் உதவியுடன் கான்ரிச் பினான்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் திரில் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிங்கர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 9 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் முதல் போட்டியிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் ஜேகொப் 41 ஓட்டங்களையும், சரித் கீர்த்திசிங்க ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ரவின் செயார் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கான்ரிச் அணி ரவின் செயர் பெற்றுக்கொடுத்த 40 ஓட்டங்களின் உதவியுடன் 49.4 ஓவர்களில் வெற்றியை பெற்றுக்கொண்டது. ரவின் செயருக்கு அடுத்தப்படியாக தரூஷன் இத்தமல்கொட 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் சரித் கீர்த்திசிங்க 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

சிங்கர் ஸ்ரீலங்கா – 172/9 (50) – சச்சின் ஜேகொப் 41, சரித் கீர்த்திசிங்க 26, ரவின் செயார் 27/6

கான்ரிச் பினான்ஸ் – 173/8 (49.4) ரவின் செயர் 40*, தரூஷன் இத்தமல்கொட 34, சரித் கீர்த்திசிங்க 26/3

போட்டி முடிவு – கான்ரிச் பினான்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி


கொமர்ஷல் கிரடிட் எதிர் எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ்

MCA மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டிலான் ஜயலத் மற்றும் விஷ்வ சதுரங்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன், எக்ஸ்போ லங்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எல்.பி. பினான்ஸ் அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த தனன்ஞய டி சில்வா

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற எக்ஸ்போ லங்கா அணி, கொமர்ஷல் கிரடிட் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய கொமர்ஷல் கிரடிட் அணி வெறும் 161 ஓட்டங்களுக்கு சுருண்டது.

கொமர்ஷல் கிரடிட் அணி சார்பில் அதிகபட்சமாக நிலூஷ உத்தமதாஸ 37 ஓட்டங்களையும், சம்மிக ருவான் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் மதுர லக்மால் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எக்ஸ்போ லங்கா அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. டிலான் ஜயலத் 68 ஓட்டங்களையும், விஷ்வ சதுரங்க 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இதன்படி வெற்றி இலக்கை 27.5 ஓவர்களில் அடைந்த எக்ஸ்போ லங்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் சுருக்கம்

கொமர்ஷல் கிரடிட் – 161 (47.2) – நிலூஷ உத்தமதாஸ 37, சம்மிக ருவான் 25, மதுர லக்மால் 24/3

எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் – 163/3 (27.5) – டிலான் ஜயலத் 68, விஷ்வ சதுரங்க 42

போட்டி முடிவு எக்ஸ்போ லங்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<