இங்கிலாந்துடனான T20 போட்டியிலிருந்து விலகும் அகில தனன்ஜய, குசல் பெரேரா

1914

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையே நாளை (27) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள T20 போட்டியிலிருந்து இலங்கை அணியின் வீரர்களான குசல் ஜனித் பெரேரா, அகில தனன்ஜய ஆகியோர் விலகியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இங்கிலாந்துக்கு வழங்கிய மோசமான தோல்வியின் நம்பிக்கையுடன் T20 யில் களமிறங்கும் இலங்கை.

இவர்களில் இலங்கை அணியின் இளம் சுழல் வீரரான அகில தனன்ய இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்று முடிந்த ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் தொடை உபாதைக்கு ஆளாகியிருந்த காரணத்தினாலேயே நாளைய T20 போட்டியில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகின்றது.

இதேநேரம், இங்கிலாந்து அணியுடனான T20 போட்டிக்கு பெயரிடப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவும் அகிலவுக்கு ஏற்பட்ட அதே மாதிரியான தொடை உபாதையினால் போதிய உடற்தகுதியை நிரூபிக்கத் தவறியே நாளைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்

இரண்டு வீரர்களும் இங்கிலாந்து அணியுடனான நாளைய T20 போட்டியில் பங்கெடுக்காமல் போவதனை இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரான சரித் சேனநாயக்க ThePapare.com இற்கு உறுதி செய்திருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (23) இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி டக்வெத் லூவிஸ் முறையில் 219 ஓட்டங்களால் அபார வெற்றி ஒன்றினை பதிவு செய்திருந்தது.

ஏன் குசல் மென்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது?; விளக்கும் சந்திமால்

இலங்கை கிரிக்கெட்…

இந்த வெற்றிக்காக அகில தனன்ய வெறும் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, நாளைய போட்டியில் அகில இல்லாதது இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாகும்.  

மறுமுனையில் இலங்கை அணிக்காக இந்த ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முன்னணியில் திகழும் குசல் ஜனித் பெரேரா இதே தொடை உபாதை காரணமாக இங்கிலாந்து அணியுடனான மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஏற்கனவே விளையாடாது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு வீரர்களின் இடத்தினையும் நாளைய இங்கிலாந்து அணியுடனான நாளைய T20 போட்டியில் பிரதியீடு செய்ய இடதுகை சுழல் வீரரான அமில அபொன்சோ மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்பட்டுள்ளனர்.  

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க