கின்னஸ் சாதனை முயற்சியில் களமிறங்கியுள்ள தேசிய வேகநடை வீரர்

5

கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்யும் நோக்குடன் 500 கிலோ மீற்றருக்கான வேகநடைப் போட்டியை நான்கு தினங்களில் நிறைவு செய்யும் முயற்சியை கடற்படை வீரர் மஞ்சுள குமார ரணவீர நேற்று (22) ஆரம்பித்துள்ளார்.

பொலன்னறுவை கிரித்தலே மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான இப்போட்டியானது மொத்தமாக 64 மணித்தியாலங்களைக் கொண்டதாகவும் இடம்பெறவுள்ளது.

இராணுவ மெய்வல்லுனரில் பிரகாசித்த மலையக மற்றும் கிழக்கு வீரர்கள்

55ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட …

கிரித்தலேகமவிலிருந்து பொலன்னறுவை, மின்னேரியா மீண்டும் பொலன்னறுவை, மீண்டும் கிரித்தலேகம, ஹபரணை மீண்டும் கிரித்தலேகம ஆகிய பாதைகளினூடாக மஞ்சுள குமார ஒவ்வொரு நாளும் 125 கிலோ மீற்றர் வேகநடை போட்டியை முன்னெடுக்கவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதி 500 கிலோ மீற்றர் தூரத்தை அவர் நிறைவு செய்யவுள்ளார்.

அத்துடன், தினமும் காலை 7.30 மணிக்கு மஞ்சுளவின் வேகநடைப் போட்டி ஆரம்பமாகவுள்ளதுடன், அரை மணித்தியாலய ஓய்வுக்குப் பின்னர் உணவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

இவரது இந்த சாதனையை நேரில் கண்காணிக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் ஐந்து அதிகாரிகள் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்படுள்ளனர்.

2018 IAAF சிறந்த மெய்வல்லுனர் வீரர் விருது – ஆடவர் இறுதிப் பட்டியல்

2018 ஆம் ஆண்டில் திறமையை வெளிப்படுத்திய ….

இதேநேரம், மஞ்சுள குமாரவின் இந்த வேகநடை கின்னஸ் சாதனை முயற்சியை வீடியோவின் பதிவுசெய்து கின்னஸ் மன்றத்துக்கு மத்தியஸ்தர்களின் அறிக்கையுடன் அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மஞ்சுளவின் இந்த முயற்சியை கின்னஸ் மன்ற அதிகாரிகளினால் பரிசோதனை செய்த பிறகு கின்னஸ் சாதனையா? இல்லையா? என்பது அறிவிக்கப்படும்.

மகாவலி விளையாட்டு விழாவில் வேகநடைப் போட்டியின் நடப்புச் சம்பியனான மஞ்சுள குமார, 2016ஆம் ஆண்டு ஒரே நாளில் 100 கிலோ மீற்றர் தூர வேகநடைப் போட்டியில் பங்குபற்றி இலங்கை சாதனையும் படைத்தார்.

அத்துடன், 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான வேகநடைப் போட்டியில் 2ஆவது இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<