மேற்கிந்திய தீவுகள் ஒருநாள், டி20 அணித்தலைவராக கிரோன் பொல்லார்ட் 

Image Courtesy - Getty Images

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளுக்காக அணியின் தலைவராக சகலதுறை வீரர் கிரோன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் ரிக்கி ஸ்கேரிட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் டெஸ்ட் அணியின் தலைமைத்துவம் முதல் முறையாக இளவயதுடைய சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டருக்கு வழங்கப்பட்டது. அன்று ஹோல்டர் தனது 23 வயது 72 நாட்களில் அணித்தலைவராக பொறுப்பேற்று மேற்கிந்திய தீவுகளின் இரண்டாவது இளம் அணித்தலைவராக உருவானார்.

முக்கிய வீரர்கள் இன்றி பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி

இம்மாத கடைசில் இடம்பெறவுள்ள இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து…

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 11 ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலும் ஜேசன் ஹோல்டர் அணித்தலைவராக கடமையாற்றினார். அண்மையில் நிறைவுக்குவந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி மிக மோசமான பின்னடைவை சந்தித்தது. ஒன்பது போட்டிகளில் விளையாடிய அவ்வணி லீக் தொடரின் முதல் போட்டி மற்றும் இறுதி போட்டி ஆகிய இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று ஒன்பதாமிடத்தை பெற்றது.

இந்நிலையில் தோல்விகளுக்கு மத்தியில் மீண்டெழும் முயற்சியில் உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் இந்திய அணியுடன் தங்களது சொந்த மண்ணில் விளையாடியது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களையும் இழந்தது.

மேலும் இந்திய அணிக்கு எதிராக ஒரு தொடரில் கூட ஒரு வெற்றிபெற முடியாத அவல நிலை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டது. இந்திய அணியுடனான தொடரின் போது டி20 அணித்தலைவராக கார்லஸ் ப்ரெத்வெயிட்டும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவராக ஜேசன் ஹோல்டரும் செயற்பட்டிருந்தனர்.

பங்களாதேஷை வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு சரித்திர வெற்றி

பங்களாதேஷுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்…

இவ்வாறான நிலையில் இந்திய தொடருக்கு பின்னர் அணித்தலைவர் பதவியில் அதிரடி மாற்றம் ஏற்படக்கூடும் என்ற செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. அதன் அடிப்படையிலேயே இன்று (09) நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையினுடைய நிர்வாக கூட்டத்தில் புதிய அணித்தலைவராக கிரோன் பொல்லார்ட் பெயரிடப்பட்டுள்ளார்.

வெள்ளை பந்து தொடருக்காக, அதாவது ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் அணித்தலைவராக கிரோன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்தும் ஜேசன் ஹோல்டர் செயற்படுவார் எனவும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

1987 மே 12 ஆம் திகதி ட்ரினிடாட்டில் பிறந்த கிரோன் பொல்லார்ட், ஒரு சகலதுறை வீரராக கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒருநாள் போட்டி மூலமாக சர்வதேச உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு டி20 சர்வதேச போட்டியிலும் அறிமுகம் பெற்றுக்கொண்டார். இதுவரையில் 101 ஒருநாள் மற்றும் 62 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளைவிட டி20 போட்டிகளில் கிரோன் பொல்லார்ட் அதிகமாக விளையாடியுள்ளார். அதிலும் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியதை விட வெளிநாட்டு லீக் தொடர்களில் அதிகமாக விளையாடியுள்ளார். இந்நிலையில் தற்போது அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கிரோன் பொல்லார்ட் இறுதியாக 2016 ஆம் ஆண்டே ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளமை கவனிக்கத்தக்கது.

இளையோர் ஆசியக் கிண்ணத்தில் தோல்வி காணாத அணியாக இந்தியா

இலங்கையில் இடம்பெற்று வரும் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (9) குழு A அணிகளின் முதற்சுற்றுப் போட்டிகள்…

இவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடாத கிரோன் பொல்லார்ட்டுக்கு அணித்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமை, இலங்கையின் திமுத் கருணாரத்னவுக்கு அணித்தலைவர் பதவி வழங்கப்பட்டதை நினைவுபடுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அடுத்ததாக எதிர்வரும் நவம்பரில்  மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் ஒற்றை டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது. புதிய அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொல்லார்ட்டுக்கு இதுவே முதல் தொடராக அமையவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க