ஐ.சி.சி யின் 2019 உலகக் கிண்ண அணி வீரர்கள் இவர்கள்தான்

2261
SKY Sports

ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (14) நிறைவுக்கு வந்தது. கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் வித்தியாசமாக நடைபெற்ற ஒரு இறுதிப் போட்டி என்றால் நேற்றைய போட்டியை யாராலும் நிராகரிக்க முடியாது. 44 ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி தங்களது சொந்த நாட்டிலேயே வைத்து கன்னி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருக்கிறது.  

போராட்டத்தின் மத்தியில் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் லோர்ட்ஸ்….

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14ஆம் (நேற்று) திகதி வரையில் ஒன்றரை மாதம் நடைபெற்ற இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நாம் கைப்பற்ற வேண்டும் என்ற கனவுடன் ஒவ்வொரு அணிகளும் களமிறங்கின. இவ்வுலகக் கிண்ண தொடரில், இந்த உலகிற்கு கிரிக்கெட் எனும் விளையாட்டை அறிமுகம் செய்த ஆங்கிலேயேர்களுக்கு (இங்கிலாந்து) குறித்த கனவு பலித்திருக்கிறது. இருந்தாலும் துரதிஸ்டவசமாக நியூசிலாந்து அணி இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

இந்நிலையில் ஒவ்வொரு உலகக் கிண்ண தொடர் நிறைவு நிலையிலும் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது குறித்த ஆண்டு உலகக் கிண்ண தொடரில் பங்குபற்றிய அணிகளின் மொத்த வீரர்களையும் உள்ளடக்கி அதில் மிக பெறுமதியான வீரர்களை இனங்கண்டு .சி.சி உலகக் கிண்ண அணி என்ற பெயரில் ஒரு அணியை பெயரிட்டு வருகிறது

அந்த வகையில் 2019 ஆண்டுக்கான .சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறித்த 11 பேர் கொண்ட அணியை இன்று (15) அறிவித்துள்ளது. இந்த அணியில் நான்கு இங்கிலாந்து வீரர்கள், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இந்திய அணிகளிலிருந்து தலா இரண்டு வீரர்கள் வீதமும், பங்களாதேஷ் அணியிலிருந்து ஒரு வீரரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (14) லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர்களில் ஆறு வீரர்கள் .சி.சி யினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்

நான்கு வருட கடின உழைப்புக்கு கிடைத்த பரிசே உலகக் கிண்ணம்: மோர்கன்

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில், அதுவும்….

வெளியிடப்பட்டுள்ள .சி.சி 2019 உலகக் கிண்ண அணியின் அடிப்படையில், தொடர் நாயகன் விருதை வென்றவரும், மௌனத்தால் அனைத்து இரசிகர்கள் மனதையும் வென்றவருமாகிய நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் அணியின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். மேலும் அணியின் 12ஆவது வீரராக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் பெயரிடப்பட்டுள்ளார்.

.சி.சி 2019 உலகக்கிண்ண அணி வீரர்கள் விபரம்.

இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜெசன் ரோய் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் அளப்பெரிய பங்கு ஆற்றியவர். உபாதை காரணமாக ரோய்க்கு மூன்று போட்டிகளை இழக்க நேரிட்டது. ஏழு இன்னிங்ஸ்களில் விளையாடிய ரோய் மொத்தமாக 443 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்

9 இன்னிங்களில் மொத்தமாக 648 ஓட்டங்களை குவித்து 2019 உலகக் கிண்ண தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பெற்ற இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா ஜெசன் ரோயின் ஜோடியாக பெயரிடப்பட்டுள்ளார்.

அணித் தலைவராக 9 இன்னிங்ஸ்களில் 578 ஓட்டங்களை குவித்து ஒரு உலகக் கிண்ண தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த அணித்தலைவர் என்ற சாதனையை படைத்த நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக பெயரிடப்பட்டுள்ளார்

மஹேலவின் சாதனையை முறியடித்த வில்லியம்சன்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மாபெரும்….

உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணி சார்பாக இரண்டு சதங்களையும், மூன்று அரைச்சதங்களையும் விளாசி மொத்தமாக 556 ஓட்டங்களை குவித்து அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களை குவித்தவர்கள் வரிசையில் முதலிடம் பெற்ற ஜோ ரூட் அணியில் நான்காமிலக்க துடுப்பாட்ட வீரராக பெயரிடப்பட்டுள்ளார் 

பங்களாதேஷ் அணிக்காக மூன்றாமிலக்கத்தில் களமிறங்கி தனி மனிதனாக நின்று 606 ஓட்டங்கள், 11 விக்கெட்டுகள் கைப்பற்றி சகலதுறையில் புதிய சாதனை படைத்த சகீப் அல் ஹசன் ஒரு சகலதுறை வீரராக ஐந்தாமிடத்தில் பெயரிடப்பட்டுள்ளார்

இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு இறுதிப் போட்டியில் கதாநாயகனான திகழ்ந்தவரும், தொடரில் 465 ஓட்டங்களையும், 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆறாமிலக்க சகலதுறை வீரராக பெயரிடப்பட்டுள்ளார்

அவுஸ்திரேலிய அணிக்காக 9 இன்னிங்ஸ்களில் 375 ஓட்டங்களை குவித்து அணி சார்பாக அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் நான்காமிடத்தை பெற்றவரும், ஒரு விக்கெட் காப்பாளராக அணிக்காக 20 ஆட்டமிழப்புக்களுக்கு உறுதுணையாக திகழ்தவருமான அலெக்ஸ் கெரி விக்கெட் காப்பாளராக ஏழாமிடத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்த ஸ்டாக்

12 ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது…

உலகக் கிண்ண தொடரில் 10 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு உலகக் கிண்ண தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் எனும் புதிய சாதனையை படைத்த அவுஸ்திரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டாக் எட்டாமிடத்தில் பந்துவீச்சாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் வெளியிட்ட உலகக் கிண்ண தொடருக்கான குழாமில் இடம்பெறாமல், பின்னர் மீண்டும் வெளியிடப்பட்ட புதிய குழாமில் இடம்பெற்று 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுக்களை வீழத்தியவர்கள் வரிசையில் முதலிடம் பெற்று, சுப்பர் ஓவரில் இங்கிலாந்து அணிக்கு உலகக் கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த ஜோப்ரா ஆர்ச்சர் ஒன்பதாமிலக்க வீரராக பெயரிடப்பட்டுள்ளார்

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒட்டுமொத்த தொடரில் 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரும், மொத்தத்தில் இரண்டாமிடத்தை பெற்றவருமான லுக்கி போர்கசன் பத்தாவது வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

.சி.சி யினுடைய ஒருநாள் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் காணப்படுபவரும், உலகக் கிண்ண தொடரில் மொத்தமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அணி சார்பாக அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தவருமான இந்திய அணியின் நம்பிக்கை வேகப் பந்துவீச்சாளர் ஜெஸ்பிரிட் பும்ரா இறுதி வீரராக .சி.சி யினுடைய உலகக் கிண்ண அணியில் பெயரிடப்பட்டுள்ளார்.  

வெற்றி தீர்மானிக்கப்பட்ட விதம் ஏமாற்றமளிக்கிறது: வில்லியம்சன்

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து….

.சி.சி உலகக்கிண்ண அணி

 1. ஜெசன் ரோய் (இங்கிலாந்து)
 2. ரோஹிட் சர்மா (இந்தியா)
 3. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) – அணித்தலைவர்
 4. ஜோ ரூட் (இங்கிலாந்து)
 5. சகீப் அல் ஹசன் (பங்களாதேஷ்)
 6. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
 7. அலெக்ஸ் கெரி (அவுஸ்திரேலியா)
 8. மிட்செல் ஸ்டாக் (அவுஸ்திரேலியா)
 9. ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)
 10. லுக்கி போர்கசன் (நியூசிலாந்து
 11. ஜெஸ்பிரிட் பும்ரா (இந்தியா)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<