நான்கு வருட கடின உழைப்புக்கு கிடைத்த பரிசே உலகக் கிண்ணம்: மோர்கன்

362
©Getty

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில், அதுவும் முதல்தடவையாகக் கைப்பற்றுவதென்பது இலகுவான காரியமல்ல என தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் இயென் மோர்கன், கடந்த நான்கு வருடங்களாக செய்த முயற்சியின் பலனாகவே நியூசிலாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வெல்ல முடிந்ததாக தெரிவித்தார். 

லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (14) நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல்முறையாக கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் உலகக் கிண்ணத்iதைக் கைப்பற்றிய 6ஆவது அணியாகவும் இங்கிலாந்து வரலாற்றில் இடம்பெற்றது

போராட்டத்தின் மத்தியில் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின்……..

இம்முறை உலகக் கிண்ணம் வரலாற்றிலேயே சிறந்த போட்டியாக மாறியது இங்கிலாந்துநியூசிலாந்து மோதிய உலகக் கிண்ண இறுதிப் போட்டி. இரு அணிகளும் சரி சமமாக மோதின

போட்டி சமநிலை ஆனது. அடுத்து சுப்பர் ஓவரும் சமநிலை ஆனது. இதனால், பெரும் பரபரப்பு நிலவியது. இதயத் துடிப்பு எகிறியது. விதிப்படி இங்கிலாந்து அணி உலகக் கிண்ண சம்பியன் பட்டம் வென்றது

இந்த நிலையில் நியூசிலாந்து அணியுடனான இந்த வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் தலைவர் இயென் மோர்கன் கருத்து தெரிவிக்கையில்,

”இந்த வெற்றி முற்றிலும் நம்பமுடியாதது. என்னால் இன்னும் அதை நம்ப முடியவில்லை. கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழந்து வெளியேறியதும் எமது வெற்றி முடிவுக்கு வந்துவிட்டது என்று நான் நினைத்தேன். ஆனால், பின்னர் லியெம் பிளங்கெட் எங்களை மீண்டும் விளையாட்டிற்குள் கொண்டுவந்தார்.

பென் ஸ்டோக்ஸ் ஓடுகின்ற போது எல்லைக் கோட்டை தாண்டி தூக்கியெறியப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது மட்டையில் பந்துபட்டு பௌண்டரிக்குச் சென்றது. வர்ணனையில் நீங்கள் அதை எவ்வாறு விவரித்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை

சுப்பர் ஓவரில், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லருடன் ஒரு சிறந்த நாளைத் தொடர்ந்தார். உண்மையில் இது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு நாள். அதேபோல இந்தப் போட்டியும் கிரிக்கெட் அரங்கில் மறக்க முடியாத நாளாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்

மஹேலவின் சாதனையை முறியடித்த வில்லியம்சன்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின்………

இந்தப் போட்டிக்கான ஆடுகளம் மற்றும் தமது அணியின் செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்த மோர்கன், 

”இந்தப் போட்டிக்காக வழங்கப்பட்ட ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தது. நியூசிலாந்து அணி 10ல் இருந்து 20 ஓட்டங்கள் குறைவாக எடுத்திருந்தாலும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இது சவாலான இலக்கு தான்

எங்கள் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர், பந்துவீச்சாளர் தங்களது சிறப்பான செயல்பாடு மூலம் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்

இந்த நான்கு வருடங்களில் கடந்து வந்த அனைத்து கடினமான முயற்சிகளுக்கும் பிறகு இங்குதான் நாங்கள் இருக்க விரும்பினோம். இதுபோன்ற ஒரு விளையாட்டைப் ஆடுவதற்கு, கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற இன்னுமொரு போட்டியொன்று மீண்டும் கிடைக்குமா என்று நான் நினைக்கவில்லை.

இது ஒரு நான்கு வருட பயணமாகும். உண்மையில் இதுவொரு மறக்க முடியாத பயணமாகும். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் நிறைய முன்னேற்றம் கண்டிருக்கிறோம். எமது வீரர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடா முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று சொல்லாம். நியூசிலாந்து அணிக்கும் எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்

இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக் கிண்ணத்தில் ஆரம்ப வீரர்கள் சிறந்த பங்கை வகித்தனர். எனினும், அவர்கள் சிறப்பிக்க தவறும் சந்தர்ப்பங்களில் மத்திய வரிசை வீரர்கள் முழுமையாக துடுப்பாட்டத்தில் வலுச் சேர்த்தனர். அது போன்றே, நேற்றைய இறுதிப் போட்டியிலும் மத்திய வரிசை வீரர்கள் அணிக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கினர். இது குறித்தும் மோர்கன் கருத்து தெரிவி

”இன்று நாங்கள் அந்த எல்லையை மீறுவது என்பது உலகம் நமக்கு தான் என்பது அர்த்தம். மத்திய வரிசையில் உள்ள வீரர்கள் எங்களை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் விளையாடும் விதம், அனுபவம் என்பன கடந்த காலங்களில் எமக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தது” 

இவ்வாறானதெரு கடினமான ஆடுகளத்தில் எல்லோரும் ஓட்டங்களைக் குவிப்பது மிகவும் கடினமாக இருந்தது. எனினும், ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் உறுதியான இணைப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். அது எங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நினைத்தேன், இறுதியில் அது நடந்தது. உண்மையில் இது நான்கு வருடகால பயணமாகும். இந்தக் காலப்பகுதியில் இதுபோன்ற ஆடுகளங்களை நாங்கள் நிறைய பார்த்திருக்கிறோம்.

முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை வளர்ந்துவரும் அணி

முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க ……..

தமது எதிரணி குறித்து கருத்து தெரிவித்த மோர்கன், “நான் கேன் வில்லியம்சன் மற்றும் அவரது அணியைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். அவர் அணியை வழிநடத்தும் விதம் எம் அனைவருக்கும் முன் உதாரணமக உள்ளது. எனவே அவருக்கும் அவரது அணிக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

இறுதியில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோரது அபார ஆட்டம் தான் இங்கிலாந்துக்கு இவ்வாறானதொரு த்ரில் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில் குறித்த வீரர்களது பங்களிப்பு குறித்து மோர்கன் கருத்து வெளியிடுகையில்

“அவர் (ஸ்டோக்ஸ்) போட்டியின் இறுதிவரை களத்தில் இருந்து விளையாடாமல் இருந்தால் நிச்சயமாக நாங்கள் சுப்பர் ஓவருக்கு சென்றிருக்க மாட்டோம். எனவே, இந்த வெற்றியின் அனைத்து கௌரவங்களும் ஸ்டோக்ஸையும், ஆர்ச்சரையும் சென்றடைய வேண்டும். அவர் விளையாடும் ஒவ்வொரு முறையும் அவர் மேம்படுகிறார். இந்த நேரத்தில் உலகம் உண்மையில் அவரது காலடியில் உள்ளது” என்றார்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<