ரசிகர்களுடன் ஆரம்பமாகும் முதல் கிரிக்கெட் தொடர்

525
Reuters

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள நியூசிலாந்து மகளிர் அணி மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரசிகர்கள் போட்டியை மைதானத்திலிருந்து பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொவிட்-19 வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த இந்த தொடர் கைவிடப்பட்டிருந்த நிலையில், இதே தொடர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் ரசிகர்கள் கூடும் முதல் தொடராக அமையவுள்ளது.

IPL கிரிக்கெட்டில் களமிறங்கும் முதல் அமெரிக்க வீரர்

அவுஸ்திரேலியா மகளிர் அணி மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் மோதவுள்ளதுடன், அவுஸ்திரேலிய மகளிர் அணியின் தலைவியாக மெக் லென்னிங் செயற்படவுள்ளதுடன், நியூசிலாந்து மகளிர் அணியின் தலைவியாக  சோபியா டிவைன் செயற்படவுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இதுவரை நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களில் ரசிகர்கள் மைதானத்துக்கு உள்வாங்கப்படாத நிலையில், முதன்முதலாக இந்தப் போட்டித் தொடரில் ரசிகர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். 

இதன்படி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடரில் ரசிகர்கள் இருக்கும் இடங்கள் 6 மண்டலங்களாக வகுக்கப்படவுள்ளன. இதில், ஒரு மண்டலத்திலிருக்கும் ரசிகர்கள் அடுத்த மண்டலத்துக்கு செல்வதற்கு தடைசெய்யப்படும். அதேநேரம், இரண்டு ரசிகர்களுக்கு இடையிலான இடைவெளி, இரண்டு துடுப்பாட்ட மட்டையின் அளவாக கொள்ளப்படும்.

அத்துடன், போட்டி நடைபெறும் மைதானத்தில் ரசிகர்களின் அளவு 50 சதவீதமாக மட்டுப்படுத்தப்படும் என்பதுடன், அரசாங்கத்தின் ஆலோசனைகளுக்கு அமைய மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது, பாடல்கள் பாடுவது மற்றும் சத்தமிடுவது போன்றவற்றை இயன்றளவு குறைத்துக்கொள்ளுமாறும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, போட்டியின் போதும் அல்லது போட்டிக்கு பின்னரும், ரசிகர்கள் ஒருவரையொருவர் தொடுகையின் மூலம் தொடர்புக்கொள்ள கூடாது எனவும், ரசிகர்கள் வீராங்கனைகளுடன் புகைப்படங்கள் மற்றும் கையெழுத்துகளை பெறக்கூடாது என்ற அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Video – தனியாளாக சாதித்துக் காட்டிய Dinesh Chandimal | Cricket Galatta Epi 33

அவுஸ்திரேலியாவில் இறுதியாக மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி, ரசிகர்களுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியாக அமைந்திருந்தது. இந்த தொடரை அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிக்கொண்டது. அதேநேரம் இறுதியாக, நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான தொடரை அவுஸ்திரேலிய மகளிர் அணி 5-0 என வெற்றிக்கொண்டிருந்தது.

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 18 ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்த அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் ரிக்கி பொன்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 2003ம் ஆண்டு பெற்ற 21 தொடர் வெற்றி சாதனையை சமப்படுத்தும் வாய்ப்பை பெறும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…