கோல் மழை பொழிந்த யாழ் மத்திய கல்லூரி பிரிவு IIIஇன் அரையிறுதியில்

240

18 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான பிரிவு II மற்றும் பிரிவு III அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டித்தொடரின் இறுதிக்கட்ட போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

பிரிவு III இன் காலிறுதிப் போட்டியொன்றில் நேற்று முன்தினம் (24) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மாத்தளை ஸாஹிரா கல்லூரி அணிகள் மத்திய கல்லூரி மைதானத்தில் மோதியிருந்தன.

ThePapare சம்பியன்ஷிப் மூன்றாம் இடத்தைப் பெற்றது புனித பத்திரிசியார் அணி

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற ….

மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமான முதல் பாதியாட்டத்தின், ஆரம்ப 15 நிமிடங்களில் இரு அணியினரும் தமக்கான முதலாவது கோல் பெறும் முயற்சியில் களமிறங்கிய போதும், பின்கள வீரர்களினை கடந்து பந்தினை எடுத்துச் செல்ல முடியவில்லை.  

அடுத்த 10 நிமிடங்களிற்கு பந்தினை முழுமையாக தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த யாழ் வீரர்களிற்கு, போட்டியின் 26ஆவது நிமிடத்தில் விக்னேஷிடமிருந்து பந்தினை பெற்ற ஜூட் டெவின்சன் முதலாவது கோலினைப்போட்டு அணியினை முன்னிலைப்படுத்தினார்.

மைதானத்தின் இடது புறமாக, மத்திய கோட்டிற்கருகில் மத்திய கல்லூரி வீரர் வீழ்த்தப்பட, கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக்கினை ஜூட் நிஷாந்த் வலது பக்கத்திலிருந்த விக்னேஷினை நோக்கி செலுத்த, அதனை விக்னேஷ் இலகுவாக வலையினுள் செலுத்தினார்.   

மத்திய கல்லூரி அணியினரது முதலாவது கோலுடன், தடுமாறிய மாத்தளை தரப்பினரால் அடுத்தடுத்த முயற்சிகளினை தடுக்க இயலவில்லை.

போட்டியின் 35ஆவது நிமிடத்தில் ரசிந்தன் இடது பக்கத்திலிருந்து உள்ளனுப்பிய பந்தினை நேர்த்தியாக கோலாக்கிய விக்னேஷ், அடுத்த நிமிடத்திலேயே ஹெட்றிக் கோலினையும் பதிவு செய்தார்.

முதல் பாதி: யாழ் மத்திய கல்லூரி 04 – 00 மாத்தளை ஸாஹிரா கல்லூரி

இரண்டாவது பாதியாட்டத்தின் நான்காவது நிமிடத்தில் விக்னேஷ் மேலும் ஒரு கோலினை பதிவு செய்தார்.

கொக்குவில் இந்துவை இன்னிங்ஸால் வீழ்த்தியது யாழ். மத்தி

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு எதிராக….

உதைபந்தாட்டத்தில் பெரிதளவு அனுபவத்தினைக் கொண்டிராத ஸாஹிரா கல்லூரியின் இளைய வீரர்களால், கழக அணிகளுக்காக பிரகாசித்து வரும் மத்திய கல்லூரி அணியினரின் தாக்குதல் ஆட்டத்தினை எதிர்த்தாடுவதற்கு தடுமாறினர்.

இரண்டாவது பாதியின் 7ஆவது நிமிடத்தில் விக்னேசிடமிருந்து பந்தினை பெற்ற ஜெரின்சன் தனது முதலாவது கோலினை பதிவு செய்தார்.

ஸாஹிராவின் ஆதீல், முஜீப் இணை தமது அணிக்கான முதல் கோலினை போடுவதற்காக தொடர்ச்சியாக முயற்சி செய்த போதும் பந்தினை வலையினுள் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் எதனையும் அவர்களால் உருவாக்க முடியவில்லை.

மத்திய களத்திலிருந்து பந்தினை வேகமாக முன்களத்திற்கு எடுத்துச்சென்ற விக்னேஷ்  மைதானத்தின் இடது பக்கத்திலிருந்து உள்ளனுப்பிய பந்தினை நேர்த்தியாக கோலாக்கினார் ஜெரின்சன்.

ஜெரின்சன் மூலமாக மேலும் இரண்டு முறை பந்தினை கோலினுள் செலுத்திய மத்திய கல்லூரி அணியினர். மிக இலகுவான வெற்றியொன்றுடன் தொடரின் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

போட்டி முடிவு: யாழ் மத்திய கல்லூரி 09 – 00 மாத்தளை ஸாஹிரா கல்லூரி

ThePapare.comஇன் ஆட்டநாயகன்விக்னேஷ் (யாழ் மத்திய கல்லூரி)

கோல் பெற்றவர்கள்

யாழ். மத்திய கல்லூரிஜூட் டெவின்சன் 26’, விக்னேஷ் 32’, 35’, 36’ & 49’, ஜெரின்சன் 52’, 59’, 68’ & 73’

அதேவேளை, உதைபந்தாட்டத்திற்கு புகழ்பூத்த மற்றொரு பாடசாலை அணியான இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பிரிவு IIஇன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.  

பிரிவு II மற்றும் IIIஇன் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஜனவரி மாதமளவில் நடாத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<