ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் அல்சாரி ஜோசப்

692
IPL Twitter

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இடைநடுவில் இணைந்துகொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசப் காயம் காரணமாக எஞ்சிய போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே கடந்த சனிக்கிழமை (13) நடைபெற்ற போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்ட அல்சாரி ஜோசப், பௌண்டரி எல்லையில் வந்த பந்தை தடுப்பதற்கு முயன்ற வேளை தோள்பட்டையில் காயத்திற்கு உள்ளானார்.  

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான, …….

இந்த நிலையில், போட்டியின் பிறகு அல்சாரிக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதுடன், வைத்தியர்களின் அறிவுரைக்கு அமைய எஞ்சிய .பி.எல் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளரான அடெம் மில்னே உபாதைக்குள்ளான காரணத்தால் இம்முறை .பி.எல் தொடரிலிருந்து விலகிக் கொண்டார். இதனையடுத்து அடெம் மில்னேக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் வேகப்பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசப்பை ஒப்பந்தம் செய்ய அந்த அணி நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் அல்சாரி ஜோசப் அறிமுகமானார்.

குறித்த போட்டியில் வெறும் 12 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றினார்.

அத்துடன், .பி.எல் வரலாற்றில் ஒரே போட்டியில் மிக குறைந்த ஓட்டங்களை விட்டுக்கொத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்று புதிய பதிவை எட்டினார்.

பாகிஸ்தான் இளையோர் அணி மே மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம்

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்கு ……..

அதுமாத்திரமின்றி, பாகிஸ்தான் வீரர் சொஹைல் தன்வீரின் (6/14) 11 வருடகால சாதனையையும் அல்சாரி ஜோசப் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் அணியுடன் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் தோல்வியைத் தழுவியிருந்தது. எனினும், இப்போட்டியில் 3 ஓவர்கள் பந்துவீசிய அல்சாரி ஜோசப் 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஏமாற்றம் கொடுத்திருந்தார். எனினும், தொடர்ந்து உபாதையினால் அவதிப்பட்ட அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

இதுஇவ்வாறிருக்க, ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியுடன் நேற்று (15) நடைபெற்ற போட்டியில் அல்சாரி ஜோசப் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விளையாடியிருந்ததுடன், பந்துவீச்சில் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தனது மீள்வருகையை உறுதிப்படுத்தி, போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

இதேவேளை, அல்சாரி ஜோசப்புக்குப் பதிலாக மும்பை அணி இதுவரை மாற்று வீரரை அறிவிக்கவில்லை. அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹன்டிராப், உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளதால், பிரிஸ்பேனில் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்து பதினொருவர் அணியுடனான பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளார்.

எனவே, அவுஸ்திரேலிய அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக ஜேசன் பெஹன்டிராப்பும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இடைநடுவில் விலகிக் கொள்வார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<