மெஸ்ஸியின் பெனால்டி மூலம் தோல்வியை தவிர்த்த ஆர்ஜன்டீனா

410
AFP

கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்து தொடரில் மீண்டும் ஒருமுறை தடுமாற்றம் கண்ட ஆர்ஜன்டீன அணி பரகுவே அணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்ததோடு, கட்டாருக்கு எதிரான போட்டியில் கொலம்பியா 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

கோல்கள் மறுக்கப்பட்டதால் வெற்றிபெறத் தவறிய பிரேசில்

கோப்பா அமெரிக்கா கால்பந்து கிண்ணத் ……….

ஆர்ஜன்டீனா எதிர் பரகுவே

இருமுறை உலக சம்பியனான ஆர்ஜன்டீனா, கோப்பா அமெரிக்கா தொடரில் பரகுவேயுடனான போட்டியிலும் தடுமாற்றம் கண்ட நிலையில் லியோனல் மெஸ்ஸியின் பொனால்டி உதை மூலம் B குழுவுக்கான அந்தப் போட்டியை 1-1 என சமன் செய்தது.

போட்டி ஆரம்பித்து 37 ஆவது நிமிடத்தில் பந்தை நேர்த்தியாகக் கடத்திச் சென்ற பரகுவே, ரியார்ட் சான்சஸ் மூலம் கோல் புகுத்தியது. ஆர்ஜன்டீனா பதில் கோல் திருப்ப போராடிய நிலையில் பரகுவே அணி முதல் பாதியில் முன்னிலை பெற்றது.

எனினும், மார்டினஸ் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறுவதற்கு முன் பரகுவே வீரர் இவான் பீரிஸின் கையில் பட்டது வீடியோ உதவி நடுவர் மூலம் கண்டறியப்பட்டதை அடுத்து ஆர்ஜன்டீன அணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.  

கொலம்பியாவிடம் வீழ்ந்தது மெஸ்ஸியின் ஆர்ஜன்டீனா

கோப்பா அமெரிக்கா கால்பந்து கிண்ணத் ………

இதனைக் கொண்டு பந்தை வலைக்குள் செலுத்தி போட்டியை சமநிலைக்குக் கொண்டுவர உலகின் முன்னணி வீரர் மெஸ்ஸியால் முடிந்தது.

ஏற்கனவே தனது முதல் போட்டியில் கொலம்பியாவிடம் 2-0 என தோல்வியை சந்தித்த ஆர்ஜன்டீனா B குழுவில் ஒரு புள்ளியை பெற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அணிக்கு இன்னும் ஒரு போட்டியே எஞ்சியிருக்கும் நிலையில் காலிறுதிக்கு முன்னேற போராட வேண்டியுள்ளது.

கோல் பெற்றவர்கள்

பரகுவே ரியார்ட் சான்சஸ் 37′

ஆர்ஜன்டீனா லியோனல் மெஸ்ஸி 57′ (பெனால்டி)

கட்டார் எதிர் கொலம்பியா  

தனது முதல் போட்டியில் ஆர்ஜன்டீனாவை வீழ்த்திய கொலம்பியா வரவேற்பு அணியான ஆசிய சம்பியன் கட்டாரையும் தோற்கடித்து கோப்பா அமெரிக்க தொடரில் முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

இலங்கை வர மறுத்ததை எதிர்த்து கேலிக்கையாக கால்பந்து ஆடிய மக்காவு வீரர்கள்

இலங்கையில் நடைபெறவிருந்த பிஃபா……

எனினும், கடும் போட்டி கொடுத்த கட்டார் தனது தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு ஒரு கோலையே விட்டுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.  

போட்டியின் 85 ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் புகுத்தாத நிலையில் கொலம்பிய அணிக்காக டுவான் சபடா அபார கோல் ஒன்றை பெற்றார்.

கோல் பெற்றவர்

கொலம்பியா டுவான் சபடா 86′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<