க்ரேத் பேல் அடித்த அபார கோல்கள் மற்றும் பென்சமாவின் அதிஷ்ட கோல் மூலம் லிவர்பூல் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ரியெல் மெட்ரிட் அணி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றது.

நூலிழையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரியெல் மெட்ரிட்

பயென் முனிச் அணியுடனான பரபரப்பான…

லிவர்பூல் அணி தனது நட்சத்திர வீரரான முஹமது சலாஹ்வை காயம் காரணமாக முதல் பாதியிலேயே இழந்த நிலையில், அதன் இளம் கோல் காப்பளர் லொரிஸ் கரியஸ் செய்த இரண்டு தவறுகள் எதிரணி கோல்பெறுவதை இலகுவாக்கியது.

எனினும், மேலதிக வீரராக வந்த மூன்று நிமிடங்களுக்குள் க்ரேத் பேல் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் பெறப்பட்ட மிகச்சிறந்த கோல் ஒன்றை புகுத்தியது ரியெல் மெட்ரிட் அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதன்படி 1976இல் பயெர்ன் முனிச் அணி தொடர்ச்சியாக மூன்று சம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்ற பின் அவ்வாறான ஒரு சாதனையை ரியெல் மெட்ரிட் அணி முதல் முறை நிலைநாட்டியுள்ளது. எனினும் ஸ்பெயினின் ரியெல் மெட்ரிட் ஐரோப்பிய கிண்ணத்தை வெல்வது இது 13 ஆவது தடவையாகும்.  

2005 ஆம் அண்டு தொடரில் .சி. மிலான் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியன்ஸ் லீக் பட்டத்தை கைப்பற்றிய லிவர்பூல் அணி இம்முறை சோபிக்கத் தவறி ஆறாவது முறை ஐரோப்பிய கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.  

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தினால் நடத்தப்படும் ஐரோப்பிய சம்பியன் கழகங்களுக்கு இடையிலான 63ஆவது ஐரோப்பிய கிண்ண தொடரின் இரண்டு கட்ட அரையிறுதிச் சுற்றில் ஜெர்மனியின் பயெர்ன் முனிச் அணியை 4-3 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி ரியெல் மெட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. லிவர்பூல், தனது இரண்டு கட்ட அரையிறுதிகளிலும் இத்தாலியின் ரோமா அணியை 7-6 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ரியெல் மெட்ரிட்டுடனான இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதி

இத்தாலியின் ரோமா கழகத்திடம்…

இதன்படி, உக்ரைன் தலைநகர் கீவில் இலங்கை நேரப்படி இன்று (27) அதிகாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரியெல் மெட்ரிட் மற்றும் லிவர்பூல் அணிகள் முதல் பாதியில் கடும் போட்டியில் ஈடுபட்டன. 70 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்ப விசில் ஊதப்பட்டது தொடக்கம் உக்கிர மோதல் இடம்பெற்றது. இரு அணிகளும் எதிரணியின் கோல் கம்பத்தை மாறி மாறி ஆக்கிரமித்தன.

எனினும், மெட்ரிட் அணித்தலைவர் செர்ஜியோ ராமொசுடன் மோதிக்கொண்டதால் போட்டியின் 30 நிமிடங்கள் கடப்பதற்குள்ளேயே எகிப்தின் இளம் வீரர் முஹமது சலாஹ்வுக்கு தோள் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐரோப்பிய கழக மட்ட போட்டிகளில் இந்த பருவத்தில் சோபித்து வந்த அவர் மைதானத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறினார். இது லிவர்பூல் அணிக்கு பெரும் இழப்பாக மாறியது.

இந்நிலையில், 7 நிமிடங்களின் பின் ரியெல் மெட்ரிட் வீரர் டானியல் கர்வஜாலும் இதே சோகத்திற்கு முகம்கொடுத்து மைதானத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. இதனால் கடும் போட்டி நிலவிய முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்றது.

முதல் பாதி: ரியெல் மெட்ரிட் 0 – 0 லிவர்பூல்

ரியெல் மெட்ரிட்டின் இஸ்கோ அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறிய அதிர்ச்சியோடு ஆரம்பித்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 51 ஆவது நிமிடத்தில் ரியெல் மெட்ரிட் எதிர்பாராத கோல் ஒன்றை புகுத்தி போட்டியில் முன்னிலை பெற்றது.

ஜப்பானிய அணியில் இணையும் பார்சிலோனா ஜாம்பவான் இனியஸ்டா

பார்சிலோனா கால்பந்து கழகத்தின்…

லிவர்பூல் கோல் காப்பாளரான ஜெர்மனியின் 24 வயதுடைய லொரிஸ் கரியஸ் தன்னிடம் வந்த பந்தை வீசி எறிந்தபோது அது அருகில் இருந்த ரியெல் மெட்ரிட் முன்கள வீரர் கரிம் பென்சமாவிடம் வர, அவர் அதை காலை நீட்டி தடுத்தார். இதன்போது பந்து இலகுவாக கம்பங்களுக்குள் சென்றது. இந்த அதிஷ்ட கோலின் மூலம் ரியெல் மெட்ரிட் 1-0 என முன்னிலை பெற்றது.

எனினும் 4 நிமிடங்களுக்குள் லிவர்பூல் அணியால் பதில் கோல் போட்டு போட்டியை சமநிலைக்கு கொண்டுவர முடிந்தது. கோனர் கிக்கை அடுத்து டேஜான் லெவ்ரன் பரிமாற்றிய பந்தை எதிரணி கோல் கம்பத்தின் மிக அருகில் வைத்து பெற்ற செனகல் நாட்டைச் சேர்ந்த சாடியோ மானே அதனை வலைக்குள் புகுத்தினார்.

Reuters

இந்நிலையில் 61 ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த ரியெல் மெட்ரிட்டின் க்ரேத் பேல் இரண்டு நிமிடங்களுக்குள்ளே அபூர்வ கோல் ஒன்றை பெற்றார். மார்செலோ பரிமாற்றிய பந்தை உயரப் பாய்ந்து தனது இடதுகாலால் உதைத்த பேல் அதனை அபார கோலாக மாற்றினார். இதன்மூலம் போட்டியில் முன்னிலை பெற்ற சினேடின் சிடேனின் ரியெல் மெட்ரிட் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.  

இந்த நெருக்கடிக்கு இடையில் லிவர்பூல் கோல்காப்பாளர் கடைசி நேரத்தில் செய்த மற்றொரு தவறு ரியெல் மெட்ரிட்டின் வெற்றியை உறுதி செய்வதாக இருந்தது.

நடுவர் பணியில் இருந்து விலகும் பிரஷான்த் ராஜ்கிறிஷ்னா

இலங்கையில் அதிகமானவர்களால்…

போட்டியின் 83 ஆவது நிமிடத்தில் மீண்டும் மார்செலோ உதவ பேல் பெனால்டி எல்லைக்கு வெளியில் வலது மூலை விளிம்பில் இருந்து தனது இடது காலால் கோலை நோக்கி பந்தை உதைத்தபோது அதனை லிவர்பூல் கோல் காப்பாளர் கரியஸ் கைகளால் தட்டிவிட்டபோதும் அவரை தாண்டி அது கோலாக மாறியது.   

இதன்மூலம் ஐரோப்பிய கிண்ண கழக தொடர்களின் இறுதிப் போட்டிகளில் இங்கிலாந்து கழகங்கள் ஸ்பெயின் கழகங்களிடம் தோல்வியை சந்திப்பது தொடர் கதையாக மாறியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் நான்கு சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிகளிலும் மூன்று யூரோ லீக் இறுதிப் போட்டிகளில் இங்கிலாந்து கழகங்கள் இவ்வாறு தோல்வியடைந்துள்ளன.

குறிப்பாக ரியெல் மெட்ரிட் கடந்த 2016-17 பருவத்தின் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கி மீண்டும் ஒருமுறை கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

முழு நேரம்: ரியெல் மெட்ரிட் 3 – 1 லிவர்பூல்

கோல் பெற்றவர்கள்

ரியெல் மெட்ரிட் கரிம் பென்சமா 51′, க்ரேத் பேல் 64′, 83′

லிவர்பூல் சாடியோ மானே 55′