க்ரைக் ப்ரத்வைட்டின் பந்துவீச்சி விதிமுறைக்கு உட்பட்டது என தீர்ப்பு

63
©ICC

மேற்கிந்திய தீவுகள் அணியின் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர் க்ரைக் ப்ரத்வைட்டின் பந்துவீச்சு ஐசிசியின் விதிமுறைக்கு உட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று (01) அறிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் க்ரைக் ப்ரத்வைட் ஐசிசியின் விதிமுறையை மீறி பந்துவீசுகிறார் என குற்றச்சாட்டப்பட்டிருந்தது. கடந்த மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் க்ரைக் ப்ரத்வைட் பந்துவீசியிருந்தார். 

கிரைக் ப்ரத்வைட் முறையற்ற விதத்தில் பந்துவீசுவதாக குற்றச்சாட்டு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ……..

பகுதிநேர வலதுகை சுழல் பந்துவீச்சாளரான இவர், இந்திய அணிக்கு எதிராக கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பந்துவீசிய போது, இவரது பந்துவீச்சு பாணி ஐசிசியின் விதிமுறைக்கு மீறானது என நடுவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன் காரணமாக பந்துவீச்சு பரிசோதனைக்கு 14 நாட்களுக்குள் முகங்கொடுக்க வேண்டும் என ஐசிசி க்ரைக் ப்ரத்வைட்டுக்கு அறிவுறுத்தியிருந்தது. அதுமாத்திரமின்றி, குறித்த 14 நாட்கள் வரை அவரால் சர்வதேச போட்டிகளில் பந்துவீச முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர், க்ரைக் ப்ரத்வைட் லொஹ்க்பொராகில் உள்ள பந்துவீச்சு ஆய்வுக்கூடத்தில் பரிசோதனைகளை கடந்த 14ம் திகதி மேற்கொண்டார். 

இந்த பரிசோதனைகளின் முடிவுகள் ஐசிசிக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், க்ரைக் ப்ரத்வைட் ஐசிசியின் விதிமுறைக்கு சாதகமாக பந்துவீசுவதாகவும், அவர் இனிவரும் காலங்களில் சர்வதேச போட்டிகளில் பந்துவீச முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, துடுப்பாட்ட வீரரான க்ரைக் ப்ரத்வைட் பகுதிநேர பந்துவீச்சாளராக இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 ஓவர்கள் பந்துவீசி, இசாந் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<