இயற்கை எய்தினார் இலங்கை கிரிக்கெட்டின் மூத்த வீரர் பேர்டி விஜேசிங்க

2898
Bertie-Wijesinghe

இலங்கையின் பழம்பெரும் கிரிக்கெட் வீரரான பேர்ட்டி விஜேசிங்க கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 8ஆம் திகதி) தனது 96ஆவது வயதில் இயற்கை எய்தினார். அன்னாரின் நல்லடக்கம் நாளை (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பலராலும் அறியப்பட்ட முன்னாள் வீரரான இவர், 1930ஆம் ஆண்டு பிற்பகுதியில் புனித தோமியர் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்திய அதேவேளை, SSC கழகத்துக்காகவும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.

பிரவீன் ஜயவிக்ரம மற்றும் கமிந்து மென்டிஸ்சின் இறுதி நேர அதிரடியால் போட்டி சமநிலையில்

அவுஸ்திரேலியா ஹோபர்ட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட…

அதேநேரம், பயிற்சியாளராக வருவதற்கு முன்னர் 1940ஆம் ஆண்டுகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். பல தசாப்த காலமாக பயிற்சியாளராக கடமையாற்றிய அவரிடம் இருந்து பல தலைமுறைகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் உரிய பலனை அறுவடை செய்திருந்தனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வெத்தமுனி சகோதரர்களான சித்தத் வெத்தமுனி மற்றும் சுனில் வெத்தமுனி ஆகியோர் இவரிடம் பயிற்சி பெற்றவர்களாவர். அத்துடன் முன்னாள் அணித் தலைவரான அனுர தென்னகோன் மற்றும் கண்டி, புனித திரித்துவ கல்லூரியை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார ஆகியோருக்கும் பேர்ட்டி விஜேசிங்க பயிற்றுவித்துள்ளார்.

இவரது உயிரிழப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான குமார் சங்கக்கார, திரு. பேர்ட்டி விஜேசிங்கவின் மறைவு மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மிகவும் அரியதொரு பொக்கிஷத்தை இழந்து விட்டோம். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பயிற்சியாளராக அவர் பெரும் பங்காற்றியிருந்தார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்று தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருந்தார்.   

கிரிக்கெட் வலைத்தளமான கிரிக்பிஸ்சுக்கு கருத்து தெரிவித்த சந்திரா சப்ட்டர்,  பேர்டி விஜேசிங்க ஒரு தலைசிறந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ஆவார். அவர் எனக்கு 9 வருடங்களால் மூத்தவர். 1930களின் பிற்பகுதியில், புனித தோமியர் கல்லூரிக்காக கிரிக்கெட் விளையாடினார். அக்காலப் பகுதியில், அவர் ஒரு சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராவார். ஒரு பயிற்சியாளராக மற்றவர்களுக்கு முதுகெலும்பாக விளங்கினார்.  குறிப்பாக அவர் புனித தோமியர் கல்லூரியில் எனக்கு கிரிக்கெட் பயிற்சிகளை அளித்தார்.

சொந்த மண்ணில் வெற்றியை ருசித்த ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ்

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ள பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல்…

மேலும், அவர் 1949ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக விளையாடினார். தலைசிறந்த பயிற்சியாளரான அவர், கிரிக்கெட் வீரர்களுக்கு எதனை செய்ய வேண்டுமென்பதை இலகுவான முறையில் விளங்கப்படுத்தக்கூடியவர். மைதானத்திலும், வெளியிலும் அவர் ஒரு கண்ணியமான மனிதர்” என்று 87 வயதான சந்திரா சப்ட்டர் மேலும் குறிப்பிட்டார்.