சமநிலையில் முடிவடைந்த இந்து மைந்தர்களின் சமர்

860

ஒன்பதாவது தடவையாக நடைபெற்று முடிந்திருக்கும் இந்து மைந்தர்களின் சமர் என அழைக்கப்படும் இந்துக் கல்லூரி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெரும் சமர் கிரிக்கெட் போட்டி (BIG MATCH) இம்முறை சமநிலையில் முடிவுற்றது.

இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டி நேற்றைய தினம் (9) யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் முதல் நாளான நேற்று (9) முதலில் துடுப்பாடியிருந்த கொழும்பு (பம்பலபிட்டி) இந்துக் கல்லூரி அணியானது 165 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் முதல் இன்னிங்சில் பறிகொடுத்திருந்தது.

இதனை அடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடியிருந்த யாழ் இந்துக் கல்லூரி அணியானது முதல் நாள் முடிவில் 212 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையொன்றில் காணப்பட்டிருந்தது. களத்தில் விருஷன் 50 ஓட்டங்களுடனும், கஜநாத் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

இந்து மைந்தர்களின் சமரில் ஆதிக்கம் செலுத்தும் யாழ் இந்துக் கல்லூரி

இந்து மைந்தர்களின் சமர் என அழைக்கப்படும் கொழும்பு (பம்பலபிட்டி) இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக்

போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான இன்றைய நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை எதிரணியினை விட 47 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தொடர்ந்த யாழ் இந்துக் கல்லூரி அணியினர் சிறந்த மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர்களின் துணையோடு 68.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 333 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

யாழ் இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில், அரைச்சதம் தாண்டிய R. கஜநாத் 53 ஓட்டங்களையும் அதிரடி காட்டிய கோமைந்தன் 6 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 39 பந்துகளுக்கு 43 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

கொழும்பு இந்துக் கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக கெனிஷன் 82 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஆகாஷ் 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.

இதனையடுத்து 168 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் கொழும்பு இந்துக் கல்லூரி அணியானது தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

இந்த முறை கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்ட இன்னிங்சில் தினேஷ் மற்றும் அணித் தலைவர் சரோன் ஆகியோர் அரைச்சசதம் தாண்டியிருந்தனர்.

இவர்களின் உதவியோடு யாழ் இந்துக் கல்லூரி அணியின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையை (168) தாண்டிய கொழும்பு வீரர்கள் 74 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களைக் குவித்திருந்த போது இரண்டாம் நாளுக்கான ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதனால் இந்த ஆண்டுக்கான இந்து மைந்தர்களின் சமர் சமநிலை அடைந்தது. 

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி பயணிக்கும் யாழ் மத்திய கல்லூரி

நடைபெற்று வரும் 112ஆவது வடக்கின் பெரும் சமரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்றைய தினம் (09) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில்

கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் இரண்டாவது தடவையாக பெற்ற அரைச்சதத்துடன் தினேஷ் 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேவேளை, S. சரோனினாலும் 56 ஒட்டங்கள் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யாழ் இந்துக் கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக சிவலக்ஷன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு முடிவோடு, இந்து மைந்தர்களின் மாபெரும் கிரிக்கெட் சமர் கடந்த இரண்டு வருடங்களிலும் சமநிலையே அடைந்திருக்கின்றது. 2016ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த தொடரில் கொழும்பு இந்துக் கல்லூரியானது வெற்றியைச் சுவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம்

கொழும்பு இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 165 (45.4) – தினேஷ் 66, ஷேவாக் 24, சிவலுக்ஷன் 49/5,கோபிராம் 17/3, சந்துரு 38/2

யாழ் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 333 (68.5) – U. மிலுக்ஷன் 71, கஜநாத் 53, விருஷன் 50, கோமைந்தன் 43, கெனிஷன் 82/3

கொழும்பு இந்துக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 223/6 (74) – தினேஷ் 80, S. சரோன் 56, சிவலுக்ஷன் 100/3

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

இந்த ஆண்டுக்கான சமரின் விருதுகள்

சிறந்த களத்தடுப்பாளர் – S. சரோன் (இந்துக் கல்லூரி, கொழும்பு)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – U. மிலுக்ஷன் (யாழ் இந்துக் கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர் – L. சிவலுக்ஷன் (யாழ் இந்துக் கல்லூரி)

போட்டியின் ஆட்ட நாயகன் – G. தினேஷ் (இந்துக் கல்லூரி, கொழும்பு)