Home Tamil உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த பங்களாதேஷ்

உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த பங்களாதேஷ்

139

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியை பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டங்களில் ஒன்றாக அமைந்த இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (2) நடைபெற்றது.

உலகக் கிண்ணத்தில் சிறந்த ஆரம்பத்தை பெறத் தவறியிருக்கும் இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இம்முறைக்கான உலகக்…

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணித் தலைவர் பாப் டு பிளேசிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பங்களாதேஷ் வீரர்களுக்காக வழங்கினார்.

உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 104 ஓட்டங்களால் தோல்வியினை தழுவிய தென்னாபிரிக்க அணி, தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் இப்போட்டியில் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

அந்தவகையில் இங்கிலாந்து அணியுடனான முதல் போட்டியில் விளையாடிய ஹஷிம் அம்லா, ட்வைன் ப்ரெடோரியஸ் ஆகியோருக்கு பதிலாக டேவிட் மில்லர் மற்றும் கிறிஸ் மொரிஸ் ஆகியோர் தென்னாபிரிக்க அணியில் இணைந்திருந்தனர்.

தென்னாபிரிக்க அணி – குயின்டன் டி கொக், எய்டன் மார்க்ரம், பாப் டு பிளேசிஸ் (அணித் தலைவர்), ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன், JP டுமினி, டேவிட் மில்லர், அன்டைல் பெஹ்லூக்வேயோ, கிறிஸ் மொரிஸ், ககிஸோ றபாடா, லுன்கி ன்கிடி, இம்ரான் தாஹிர்

இதேநேரம், மஷ்ரபி மொர்தஸா தலைமையிலான பங்களாதேஷ் அணியில் அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் உபாதையில் இருந்து மீண்டும் உள்வாங்கப்பட்டிருந்தார்.

பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால், செளம்யா சர்க்கார், சகீப் அல் ஹஸன், முஸ்பிகுர் ரஹீம், மொஹமட் மிதுன், மஹ்மதுல்லாஹ், மொசாதீக் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின், மெஹிதி ஹஸன், மஷ்ரபி மொர்தஸா (அணித் தலைவர்), முஸ்தபிசுர் ரஹ்மான்

இதனை அடுத்து துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளத்தில் பங்களாதேஷ் அணி, நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.

பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் இலங்கையை வீழ்த்தினோம் – வில்லியம்சன்

இலங்கை அணியை வீழ்த்துவதற்கு பந்துவீச்சில் யுக்திகளைக்…

பங்களாதேஷ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்த தமிம் இக்பால் மற்றும் செளம்யா சர்கார் ஜோடி நல்ல ஆரம்பத்தை கொடுத்தது. இரு துடுப்பாட்ட வீரர்களும் முதல் விக்கெட்டுக்காக 60 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில் பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டாக தமிம் இக்பால் 16 ஓட்டங்களுடன் அன்டைல் பெஹ்லூக்வேயோவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து குறுகிய ஓட்ட இடைவெளியில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான செளம்யா சர்காரின் விக்கெட்டும் பறிபோனது. கிறிஸ் மொரிஸின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக்கிடம் பிடிகொடுத்த செளம்யா சர்கார் 30 பந்துகளில் 9 பெளண்டரிகள் உடன் 42 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதனை அடுத்து பங்களாதேஷ் அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக சகீப் அல் ஹஸன் மற்றும் முஸ்பிகுர் ரஹீம் ஜோடி பலமான இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கியது. இந்த இணைப்பாட்டத்தின் மூலம் 142 ஓட்டங்கள் மூன்றாம் விக்கெட்டுக்காக பகிரப்பட்டதோடு பங்களாதேஷ் அணியும் ஓட்ட ரீதியில் நல்ல நிலையை அடைந்தது.

இதேநேரம் இந்த இணைப்பாட்டத்திற்கு உதவிய சகீப் அல் ஹஸன் ஒரு நாள் போட்டிகளில் தனது 43 ஆவது அரைச் சதத்தை பூர்த்தி செய்ததோடு, முஸ்பிகுர் ரஹீம் 34 ஆவது ஒரு நாள் அரைச் சதத்தை பதிவு செய்தார்.

இவர்களோடு மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராக வந்த மஹமதுல்லாஹ் பங்களாதேஷ் அணிக்கு அதிரடியான துடுப்பாட்டம் மூலம் வலுச்சேர்த்தார். இதனால், பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

அதேநேரம் பங்களாதேஷ் அணியினர் இப்போட்டியில் பெற்ற 330 ஓட்டங்கள் ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் அவர்கள் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கையாகவும் மாறியிருந்தது.

சகலதுறை மிரட்டலால் இலங்கையை இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது ….

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட சகீப் அல் ஹஸன் 8 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 84 பந்துகளில் 75 ஓட்டங்கள் குவிக்க, முஸ்பிகுர் ரஹீம் 80 பந்துகளில் 8 பெளண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேவேளை மஹ்மதுல்லாஹ் 33 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் அன்டைல் பெஹ்லூக்வேயோ, கிறிஸ் மொரிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் நிறைந்த 331 ஓட்டங்களை அடைய தென்னாபிரிக்க அணி பதிலுக்கு துடுப்பாட தொடங்கியது.

தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த குயின்டன் டி கொக் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சற்று ஏமாற்றம் தந்திருந்தார்.

எனினும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எய்டன் மார்க்ரம் மற்றும் பாப் டு பிளேசிஸ் ஆகியோர் தென்னாபிரிக்க அணியின் வெற்றி இலக்கினை எட்டும் பயணத்தில் நம்பிக்கை தந்தனர்.

இதில் எய்டன் மார்க்ரம் 56 பந்துகளில் 4 பெளண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் குவிக்க, பாப் டு பிளேசிஸ் ஒருநாள் போட்டிகளில் தனது 33 ஆவது அரைச் சதத்தோடு 53 பந்துகளில் 5 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 62 ஓட்டங்களை குவித்தார்.

இவர்களின் விக்கெட்டுக்களின் பின்னர் டேவிட் மில்லர் மற்றும் ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் ஆகியோர் தென்னாபிரிக்க அணியின் ஓட்டங்களை தொடர்ந்தும் உயர்த்தினர். இதில் ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் 41 ஓட்டங்களை குவிக்க, டேவிட் மில்லர் 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணியுடனான போட்டியில் பதிலடி கொடுப்போம் – குல்படீன் நம்பிக்கை

அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் அபாரமாக…

எனினும், டேவிட் மில்லர் மற்றும் ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் ஆகியோரின் விக்கெட்டுக்களை அடுத்து, தென்னாபிரிக்க அணி சற்று தடுமாற்றம் காட்டத் தொடங்கியது.

பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த தென்னாபிரிக்க அணி JP டுமினி மூலம் போட்டியின் வெற்றி இலக்கினை அடைய முயற்சி செய்த போதிலும் அது முடியாமல் போனது.

இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த தென்னாபிரிக்க அணி 309 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் 21 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்காக போராடிய JP. டுமினி 37 பந்துகளில் 4 பெளண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேநேரம் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அதன் பந்துவீச்சில் முஸ்தபிசுர் ரஹ்மான் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் சயீபுத்தின் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

இவ்வெற்றியுடன் இம்முறைக்கான தமது உலகக் கிண்ணத் தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் பங்களாதேஷ் அணி, இந்த உலகக் கிண்ணத் தொடரில் வெற்றியை பதிவு செய்த முதல் ஆசிய அணியாகவும் மாறியிருக்கின்றது.

போட்டியின் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணியின் சகீப் அல் ஹஸன் தெரிவாகினார்.

 

இலகு வெற்றியுடன் உலகக் கிண்ண பயணத்தை தொடங்கியிருக்கும் அவுஸ்திரேலியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் லீக் மோதல்களில் ஒன்றாக…

பங்களாதேஷ் அணி தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் புதன்கிழமை (5) நியூசிலாந்து அணியினை இதே லண்டன் ஓவல் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றது.

இப்போட்டியுடன் உலகக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது தோல்வியை தழுவியுள்ள தென்னாபிரிக்க அணி தமது அடுத்த போட்டியில் புதன்கிழமை (5) இந்திய அணியை செளதெம்ப்டன் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.

ஸ்கோர் விபரம்

Result


South Africa
309/8 (50)

Bangladesh
330/6 (50)

Batsmen R B 4s 6s SR
Tamim Iqbal c Quinton de Kock b Andile Phehlukwayo 16 29 2 0 55.17
Soumya Sarkar c Quinton de Kock b Chris Morris 42 30 9 0 140.00
Shakib Al Hasan (vc) b Imran Tahir 75 84 8 1 89.29
Mushfiqur Rahim c Rassie van der Dussen b Andile Phehlukwayo 78 80 8 0 97.50
Mohammad Mithun b Imran Tahir 21 21 2 1 100.00
Mahmudullah not out 46 33 3 1 139.39
Mosaddek Hossain c Andile Phehlukwayo b Chris Morris 26 30 4 0 86.67
Mehidy Hasan Miraz not out 5 3 1 0 166.67


Extras 21 (b 0 , lb 9 , nb 0, w 12, pen 0)
Total 330/6 (50 Overs, RR: 6.6)
Fall of Wickets 1-60 (8.2) Tamim Iqbal, 2-242 (39.4) Mohammad Mithun, 3-250 (42.1) Mushfiqur Rahim, 4-316 (48.6) Mosaddek Hossain, 5-11 (75) Soumya Sarkar, 6-35 (217) Shakib Al Hasan (vc),

Bowling O M R W Econ
Lungi Ngidi 4 0 34 0 8.50
Kagiso Rabada 10 0 57 0 5.70
Andile Phehlukwayo 10 1 52 2 5.20
Chris Morris 10 0 73 2 7.30
Aiden Markram 5 0 38 0 7.60
Imran Tahir 10 0 57 2 5.70
JP Duminy 1 0 10 0 10.00


Batsmen R B 4s 6s SR
Quinton de Kock run out () 23 32 4 0 71.88
Aiden Markram b Shakib Al Hasan (vc) 45 56 4 0 80.36
Faf du Plessis b Mehidy Hasan Miraz 62 53 5 1 116.98
David Miller c Mehidy Hasan Miraz b Mustafizur Rahman 38 43 2 0 88.37
Rassie van der Dussen b Mohammad Saifuddin 41 38 2 1 107.89
JP Duminy b Mustafizur Rahman 45 36 4 0 125.00
Andile Phehlukwayo c Shakib Al Hasan (vc) b Mohammad Saifuddin 8 13 1 0 61.54
Chris Morris c Soumya Sarkar b Mustafizur Rahman 10 10 1 0 100.00
Kagiso Rabada not out 13 9 0 1 144.44
Imran Tahir not out 10 10 0 0 100.00


Extras 14 (b 4 , lb 0 , nb 1, w 9, pen 0)
Total 309/8 (50 Overs, RR: 6.18)
Fall of Wickets 1-49 (9.4) Quinton de Kock, 2-102 (19.4) Aiden Markram, 3-147 (26.4) Faf du Plessis, 4-202 (35.2) David Miller, 5-228 (39.1) Rassie van der Dussen, 6-252 (42.5) Andile Phehlukwayo, 7-275 (45.5) Chris Morris, 8-287 (47.1) JP Duminy,

Bowling O M R W Econ
Mushfiqur Rahim 10 0 67 3 6.70
Mehidy Hasan Miraz 10 0 44 1 4.40
Mohammad Saifuddin 8 1 57 2 7.12
Mehidy Hasan Miraz 10 0 50 1 5.00
Mashrafe Mortaza 6 0 49 0 8.17
Mosaddek Hossain 6 0 38 0 6.33




 

முடிவு – பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

[/vc_column_text][/vc_column][/vc_row]