2020 இலிருந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை நீக்க தீர்மானம்

120
All foreign Coaches

நேபாளத்தில் நிறைவுக்கு வந்த 10ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) பங்கேற்ற இலங்கை வீரர்கள் பெரும்பாலான போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியதையடுத்து எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் என்பன தீர்மானித்துள்ளது. 

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால இலக்கு என்பவை குறித்து தெளிவுபடுத்துகின்ற விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (24) விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

இதன்போதே குறித்த அறிவிப்பை விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக்க முத்துகல தெரிவித்தார்

SAGஇல் பதக்கம் வென்றவர்களுக்கு 400 இலட்சம் ரூபா பணப்பரிசு

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் டிசம்பர் மாதம்..

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவினை இலக்காகக் கொண்டு கரப்பந்தாட்டப் போட்டிகளுக்காக கியூபா நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். எனினும், இலங்கை அணியால் வெண்கலப் பதக்கத்தினை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடிந்தது

இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

இதன்படி, கியூபா நாட்டைச் சேர்ந்த குறித்த பயிற்சியாளரின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

இதுஇவ்வாறிருக்க, அடுத்த வருடத்திலிருந்து சுமார் 20 தேசிய மட்ட பயிற்சியாளர்களை நியமித்து அவர்களுக்கு அனுபவமிக்க வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்களிடமிருந்து பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க விளையாட்டுத்துறை அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது

ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் ஏழு இலங்கை வீரர்கள்

நேபாளத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த தெற்காசிய..

இதேநேரம், 2021இல் நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 100 தங்கப் பதக்கங்களை வென்றெடுக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு விளையாட்டுக்காகவும் விசேட பயிற்சிக் குழாங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர், இதற்காக திறைசேரியிடமிருந்து 50 மில்லியன் ரூபா பணத்தை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்

அடுத்த தெற்காசிய விளையாட்டு விழா 2021இல் பாகிஸ்தானில் அல்லது இலங்கையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதுதொடர்பிலான இறுதி அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை

இதன் பின்னணியில் தான் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணந்து 100 தங்கப் பதக்கங்களை இலக்கு வைத்து விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் ஒவ்வொரு அணிகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் 35 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, வீரர்கள் வென்ற தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் உள்ளிட்ட பதக்கப் பெறுமதியிலிருந்து 25 சதவீதத்தை அவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<