ஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை

1445

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் உட்பட அனைத்து பயிற்சியாளர்களையும் பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் பின்னர் தத்தமது பதவிகளில் இருந்து விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார். 

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மஹேலவும் விண்ணப்பிப்பாரா?

இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன……

குறித்த விடயம் தொடர்பிலான விசேட கடிதமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு நேற்று (17) அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இதன்படி, பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பிறகு அவர்களது ஒப்பந்த உடன்படிக்கை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இரண்டு கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கனவை சுமந்தவாறு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்ற திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி, ஏமாற்றத்துடன் உலகக் கிண்ண தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறியது

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இம்முறை உலகக் கிண்ண தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, 3 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் 2 கைவிடப்பட்ட போட்டிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி 6ஆவது இடத்தைப் பெற்று ஆறுதல் அடைந்தது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளாத நிலையில், உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அணி முதல்தடவையாக லீக் சுற்றுடன் வெளியேறிய முதல் சந்தர்ப்பமாக இது பதிவாகியது

இதன்படி, இலங்கை அணி உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியதையடுத்து, பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், சந்திக்க ஹத்துருசிங்கவின் பதவிக்காலம் நீடிப்பது கடினம் என்று செய்திகள் வெளியாகி இருந்தன

இந்த நிலையில், இலங்கை அணிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஒருவரையும், துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்களையும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

எனினும், உலகக் கிண்ண தோல்வியைத் தொடர்ந்து நாடு திரும்பிய இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க, தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 16 மாதங்கள் இருப்பதாகவும் அதுவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்

மூன்று மாற்றங்களுடன் இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ……….

இதுஇவ்வாறிருக்க, சந்திக்க ஹத்துருசிங்க பதவி விலகாவிட்டால், அவரை இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமித்துவிட்டு அவருடைய இடத்துக்கு வேறு ஒரு பயிற்சியாளரை நியமிக்க தான் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் பின்னணியில் தான் இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<