ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான ஜிம்பாப்வே ஒருநாள் குழாம் அறிவிப்பு

113

ஐக்கிய அரபு இராச்சிய அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்கான குழாமில் இருந்து அனுபவ வீரர்களான ஹமில்டன் மஸகட்ஸா மற்றும் பிரெண்டன் டைலர் ஆகியோர் விலகியுள்ள அதேவேளை இரண்டு இளம் வீரர்களுக்கு ஒரு நாள் அறிமுகம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியானது ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியுடன் நான்கு ஒரு நாள் சர்வதேச போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விபத்தில் பலி

குறித்த நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்கான ஜிம்பாப்பே அணியின் 16 பேர் கொண்ட குழாம் இன்று (08) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வழமையான அணித் தலைவராக செயற்படுபவர் ஹமில்டன் மஸகட்ஸா ஆவார். இருந்தாலும் கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடும் போது இவருக்கு கை விரலில் உபாதை ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் தற்போது நடைபெறவுள்ள ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அத்துடன் விக்கெட் காப்பாளரான பிரெண்டன் டைலரும் அதே தொடரில் உபாதைக்குள்ளாகியிருந்தார். இதன் காரணமாக இவரும் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். இவர்கள் இருவரும் ஜிம்பாப்வே அணியின் முக்கிய இரு புள்ளிகளாக கருதப்படும் வீரர்களாகும். அனுபவ வீரர்களான இவர்கள் இருவரினுடைய உபாதை ஜிம்பாப்வே அணிக்கு பாரிய இழப்பாக கருதப்படுகின்றது.

வெளியிடப்பட்ட குழாமின் அடிப்படையில் இரண்டு இளம் வீரர்களுக்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒருநாள் அறிமுகத்தை வழங்கவுள்ளது. 23 வயதுடைய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான ஐன்ஸ்லி டுலொவ் மற்றும் 20 வயதுடைய சுழல் பந்து சகலதுறை வீரரான டொனி முன்யொங்கா ஆகியோரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 34 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவத்தை கொண்ட விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரெகிஸ் சகாப்வா உள்ளூர் தொடரில் பிரகாசித்ததன் காரணமாக மூன்றரை வருடங்களின் பின்னர் சர்வதேச அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும் 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை உடைய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான டிமைகென் மருமாவும் உள்ளூர் தொடரில் பிரகாசித்ததன் மூலம் மூன்று வருடங்களின் பின்னர் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அணித்தலைவரான ஹமில்டன் மஸகட்ஸாவின் குறித்த ஓய்வினால் அணியின் தலைவராக 28 வயதுடைய விக்கெட் காப்பாளரான பீட்டர் மூர் செயற்படவுள்ளார்.

முதலிரண்டு போட்டிகளுக்குமான ஜிம்பாப்வே அணியின் குழாம்

பீட்டர் மூர் (அணித் தலைவர்), சொலொமன் மிர், பிரியன் சாரி, ரெகிஸ் சகாப்வா (விக்கெட் காப்பாளர்), சோன் வில்லியம்ஸ், டிமைகென் மருமா, சிக்கந்தர் ராஸா, டொனால்ட் திரிபானோ, கெய்ல் ஜர்விஸ், டென்டாய் சடாரா, கிறிஸ் முப்போ, கிரேக் ஏர்வின், பிரண்டன் மெவுடா, ஐன்ஸ்லி டுலொவ், டொனி முன்யொங்கா, எல்டன் சிக்கன்புரா  

உலகக் கிண்ண வாய்ப்பை இழக்கும் நான்கு இலங்கை வீரர்கள்

ஒருநாள் போட்டி தொடர் அட்டவணை

  • 10 ஏப்ரல் – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஹராரே
  • 12 ஏப்ரல் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஹராரே
  • 14 ஏப்ரல் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஹராரே
  • 16 ஏப்ரல் – நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஹராரே

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க