கோஹ்லிக்கு எதிராக புகார் அளித்த கிரிக்கெட் நிர்வாகி

395

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இரட்டை ஆதாயம் பெறுகின்ற வகையில் இரண்டு பதவிகளை வகித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பில் மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் சஞ்சய் குப்தா புகார் அளிக்க, பிசிசிஐ நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் இது குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்

இந்தியாவில் நடந்த போலியான இலங்கை கிரிக்கெட் தொடர் பற்றி விசாரணை

இந்திய அணியின் தலைவராக இருக்கும் விராட் கோஹ்லி கிரிக்கெட்டில் சம்பாதிக்கும் பணம் மட்டுமின்றி பல்வேறு விளம்பரங்களிலும், பல்வேறு நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் தனி வருமானத்தை ஈட்டி வருகிறார்

மேலும் விராட் கோஹ்லி கார்னர் ஸ்டோன் வென்சர்ஸ் (CORNERSTONE VENTURE PARTNERS LLP) என்ற நிறுவனத்திற்கும், விராட் கோஹ்லி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்

அத்துடன், விராட் கோஹ்லியுடன் அமித் அருண் சஜ்தே, பினாய் பாரத் ஆகியோர் கார்னர் ஸ்டோன் ஸ்போட்ஸ் அண்ட் என்டர்டெய்மெண்ட் (CORNERSTONE SPORTS AND ENTERTAINMENT PRIVATE LIMITED) நிறுவனத்தில் இயக்குனர்களாக செயற்பட்டு வருகிறார்கள். ஆனால் கோலிக்கு கார்னர் ஸ்டோன் நிறுவனத்தில் எந்த பங்கும் இல்லை.  

இருப்பினும், இந்த நிறுவனம்தான் கோஹ்லி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோரது வணிக நலன்களை கவனித்து வருகின்றது

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 121

லோதா குழுவின் பரிந்துரைப்படி இதனை குறிப்பிட்டுள்ள சஞ்சய் குப்தா கோஹ்லியின் மீது இரட்டை ஆதாயம் தரும் பதவிகளை நிர்வகித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளதுடன் அதனை விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

இதுதொடர்பில் மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராக உள்ள சஞ்சீவ் குப்தா கருத்து தெரிவிக்கையில்,   

விராட் கோஹ்லி, இந்திய அணியின் தலைவராகவும், ஒரு தனியார் நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த நிறுவனத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் சம்பந்தமும் உள்ளது. இது இரட்டை ஆதாயம் அடையும் வகையில் உள்ளது எனக் குற்றம் சுமத்தியுள்ளார்

இதுகுறித்து பிசிசிஐ இன் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் கருத்து தெரிவிக்கையில்

விராட் கோஹ்லியின் இரட்டை ஆதாயம் குறித்து என்னிடம் புகார் வந்துள்ளது. அது குறித்து விசாரணை செய்து, புகாரில் உண்மை உள்ளதா என்பதைக் கண்டறிவேன். புகாரில் ஏதேனும் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அம்சம் இருந்தால், அது குறித்து விளக்கம் அளிக்க விராட் கோஹ்லிக்கு வாய்ப்புக் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்

இதன்படி பிசிசிஐ விதிமுறை 38 (4) என்ற விதிமுறையை விராட் கோஹ்லி மீறியுள்ளார். அதாவது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்பதுதான் புகார்தாரர் சஞ்சய் குப்தாவின் வாதமாக உள்ளது

இந்திய அணியின் தலைவராக இருக்கும் ஒருவர் இயக்குனராக இருக்கும் நிறுவனமொன்றில் பிற வீரர்களின் வணிக ஒப்பந்தங்கள் கையாளுதல் என்பது பிசிசிஐ விதிமுறைகளின் படி சிக்கலான ஒரு விடயம் ஆகும்.

ஏனெனில், இந்த வணிக ஒப்பந்தங்கள் நிர்வகித்தல் மூலமாக இந்திய அணியின் தேர்வில் குளறுபடிகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியிருந்தனர்.  

இந்திய கிரிக்கெட் அணியை சீண்டும் சஹீட் அப்ரிடி

எனினும், தனிப்பட்ட வியாபார தொடர்புகளுக்கு இந்த குற்றச்சாட்டு பொருந்தாது என பிசிசிஐ தரப்பில் விராத் கோஹ்லிக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், இந்த வழக்கினை எடுத்து விசாரிக்க நன்னடத்தை அதிகாரி டி.கே ஜெயின் தனிக் குழுவை அமைத்து விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் இந்திய அணியின் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் பற்றி இதைப் போன்ற புகார்களை குப்தா முன்வைத்திருந்தார். ஆனால், அவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இதற்கு முன்னர் ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண், கபில் தேவ் உள்ளிட்டோர் மீது அவர் புகார் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…