Home Tamil மகளிர் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் சம்பியனான இந்தியா

மகளிர் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் சம்பியனான இந்தியா

125

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) முதல் தடவையாக ஏற்பாடு செய்த, வளர்ந்துவரும் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய வளர்ந்துவரும் மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கை வளர்ந்துவரும் மகளிர் கிரிக்கெட் அணியினை 15 ஓட்டங்களால் டக்வத் லூவிஸ் முறையில் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது. 

நான்கு நாடுகள் பங்குபற்றிய வளர்ந்துவரும் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (29) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய வளர்ந்துவரும் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி, தேவிக்கா வைத்யா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செய்தார். 

பாடசாலைகளுக்கு பந்துவீசும் இயந்திரங்களை அன்பளிப்புச் செய்த SLC

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 2018/19ஆம்…..

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய வளர்ந்துவரும் மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. 

இந்தியத் தரப்பின் துடுப்பாட்டம் சார்பில் தனுஷிரி சர்கார் 4 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களை குவித்து தனது தரப்பில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீராங்கனையாக மாறினார். அதேநேரம், சிம்ரன் பஹதூர் 34 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை வளர்ந்துவரும் மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் கவீஷா டில்ஹாரி 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற, சச்சினி நிஸன்சலா 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். 

பின்னர் மழையின் காரணமாக போட்டியின் வெற்றி இலக்கானது டக்வத் லூவிஸ் முறையில், இலங்கை மகளிருக்கு 35 ஓவர்களுக்கு 150 ஓட்டங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது. 

Photos: India vs Sri Lanka | Women’s Emerging Teams Asia Cup 2019 – Finals

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை வளர்ந்துவரும் மகளிர் கிரிக்கெட் அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து, 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

இலங்கை வளர்ந்துவரும் மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவி ஹர்சிதா சமரவிக்ரம 39 ஓட்டங்கள் பெற்று போராட்டத்தினை காட்டியிருக்க, ஏனைய அனைவரும் மோசமான துடுப்பாட்டத்துடன் வெளியேறியிருந்தனர். 

மறுமுனையில் இந்திய வளர்ந்துவரும் மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் தனுஜா கன்வார் மற்றும் அணித்தலைவி தேவிகா வைத்யா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்ததோடு, இந்திய அணி சம்பியனாகவும் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

ஸ்கோர் விபரம்

Result


Srilanka Emerging Women Team
135/10 (34.3)

India Emerging Women Team
175/9 (50)

Batsmen R B 4s 6s SR
Yastika Bhatia st Nilakshan Sandamini b Kavisha Dilhari 18 55 1 1 32.73
Prativa Rana run out (Lihini Apsara) 6 8 1 0 75.00
Nuzhat Parween lbw b Madushika Methtananda 6 24 1 0 25.00
Devika Vaidya c Imalka Mendis b Kavisha Dilhari 6 22 0 0 27.27
Tejal Hasabnis c Hasini Perera b Kavisha Dilhari 5 6 1 0 83.33
Minnu Mani c Nilakshan Sandamini b Sachini Nisansala 2 18 0 0 11.11
Tanusree Sarkar c Hasini Perera b Umesha Thimashini 47 75 4 0 62.67
Sushree Dibyadarshani lbw b Sachini Nisansala 14 26 2 0 53.85
Simarn Bahadur c Kavisha Dilhari b Sathya Sandeepani 34 51 3 1 66.67
Manali Dakshini not out 18 17 1 0 105.88
Tanuja Kanwar not out 0 0 0 0 0.00


Extras 19 (b 5 , lb 6 , nb 2, w 6, pen 0)
Total 175/9 (50 Overs, RR: 3.5)
Fall of Wickets 1-14 (4.2) Prativa Rana, 2-33 (11.6) Nuzhat Parween, 3-47 (16.2) Yastika Bhatia, 4-54 (18.5) Devika Vaidya, 5-54 (18.6) Tejal Hasabnis, 6-63 (24.4) Minnu Mani, 7-90 (30.6) Sushree Dibyadarshani, 8-140 (44.4) Tanusree Sarkar, 9-173 (49.5) Simarn Bahadur,

Bowling O M R W Econ
Tharika Sewwandi 6 1 26 0 4.33
Madushika Methtananda 9 2 18 1 2.00
Kavisha Dilhari 10 2 27 3 2.70
Sathya Sandeepani 9 2 36 1 4.00
Sachini Nisansala 9 0 26 2 2.89
Umesha Thimashini 7 0 31 1 4.43


Batsmen R B 4s 6s SR
Hasini Perera run out (Simarn Bahadur) 1 8 0 0 12.50
Imalka Mendis lbw b Tanuja Kanwar 11 9 2 0 122.22
Harshitha Madavi lbw b Devika Vaidya 39 64 3 0 60.94
Sathya Sandeepani lbw b Tanuja Kanwar 4 11 0 0 36.36
Umesha Thimashini b Devika Vaidya 3 15 0 0 20.00
Kavisha Dilhari st Nuzhat Parween b Devika Vaidya 6 13 1 0 46.15
Lihini Apsara c Nuzhat Parween b Devika Vaidya 22 40 2 0 55.00
Madushika Methtananda b Tanuja Kanwar 25 29 3 0 86.21
Nilakshan Sandamini lbw b Tanuja Kanwar 2 5 0 0 40.00
Tharika Sewwandi st Nuzhat Parween b Sushree Dibyadarshani 6 9 0 0 66.67
Sachini Nisansala not out 3 3 0 0 100.00


Extras 13 (b 2 , lb 2 , nb 0, w 9, pen 0)
Total 135/10 (34.3 Overs, RR: 3.91)
Fall of Wickets 1-5 (1.4) Hasini Perera, 2-22 (3.1) Imalka Mendis, 3-28 (5.5) Sathya Sandeepani, 4-34 (9.5) Umesha Thimashini, 5-43 (13.2) Kavisha Dilhari, 6-91 (24.4) Lihini Apsara, 7-113 (30.2) Harshitha Madavi, 8-120 (31.5) Nilakshan Sandamini, 9-127 (33.1) Madushika Methtananda, 10-135 (34.3) Tharika Sewwandi,

Bowling O M R W Econ
Manali Dakshini 6 0 25 0 4.17
Tanusree Sarkar 7 0 26 0 3.71
Tanuja Kanwar 7 1 15 4 2.14
Devika Vaidya 7 0 29 4 4.14
Sushree Dibyadarshani 6.3 0 25 1 3.97
Simarn Bahadur 1 0 11 0 11.00



முடிவு – இந்திய வளர்ந்துவரும் மகளிர் கிரிக்கெட் அணி 15 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறையில்) 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<