உலகில் எப்படியான கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுகின்றன?

98
Getty Images

உலகில் மாற்றத்துக்கு உள்ளாகாத விடயங்கள் எதுவுமே இல்லை. கிரிக்கெட் விளையாட்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அன்று டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பித்த கிரிக்கெட் இன்று அணிக்கு பத்து ஓவர்கள் கொண்ட T10, அணிக்கு 100 பந்துகள் கொண்ட ”தி ஹன்ரட்” என பல்வேறு வடிவங்களுக்கு பரிணாமம் அடைந்திருக்கின்றன.     

கொரோனவினால் சம்பள இழப்பை சந்திக்கவுள்ள அமெரிக்க கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்க கிரிக்கெட் சபை தமது நாட்டு…

கிரிக்கெட் போட்டிகளின் பரிணாமம் ஒரு பக்கம் இருக்க, கிரிக்கெட் போட்டிகள் பல வடிவங்களில் உலகில் விளையாடப்படுவதும் உண்மையே. இவ்வாறு, உலகில் எவ்வகையான கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுகின்றன என்பது பற்றி ஒரு தடவை பார்ப்போம். 

உலகில் இன்று விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகள் மூன்று பிரதான பிரிவுகளுக்குள் வருகின்றன. அவை கீழ் வருமாறு

  • தொழில்முறை கிரிக்கெட் போட்டிகள் 
  • தொழில்முறை அல்லாத கிரிக்கெட் போட்டிகள்  
  • பந்தோ அல்லது மைதானமோ சம்பந்தப்படாத கிரிக்கெட்டை ஒத்த போட்டிகள் 

தொழில்முறை கிரிக்கெட் போட்டிகள்

தொழில்முறை கிரிக்கெட் போட்டிகள் என்னும் பெரும் பிரிவுக்குள் நாம் அறிந்து வைத்திருக்கும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் என்பவை இடம்பெறுகின்றன. இந்த தொழில்முறை கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டின் மிகவும் உயர்ந்த தரத்தில் இருக்கும் போட்டிகளாகவும் சர்வதேச அளவில் விளையாடப்படும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த போட்டிகளாகவும் இருந்து வருகின்றன.   

அதேநேரம், கழக அளவில் விளையாடப்படும் மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட முதல்தரக் கிரிக்கெட் போட்டிகள், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட லிஸ்ட் A போன்ற கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கழக அளவிலான T20, T10 போட்டிகள், த ஹன்ரட் என்பனவும் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளுக்குள் அடங்குகின்றன. 

தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளின் சிறப்பம்சம் என்னவெனில், பொதுவாக இப்போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதனையே தங்களது முழுநேர தொழிலாக வைத்திருப்பர். அதோடு, தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்காக பணத்தினையும் பெற்றுக்கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

தொழில்முறை அல்லாத கிரிக்கெட் போட்டிகள் 

மேலே குறிப்பிட்ட தொழில்முறை கிரிக்கெட் போட்டிகள் அல்லாது உலகில் விளையாடப்படும் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளும் தொழில்முறை அல்லாத கிரிக்கெட் போட்டிகளுக்குள் இடம்பெறுகின்றன. தொழில்முறை அல்லாத  கிரிக்கெட் போட்டிகள் சில பணத்துடன் தொடர்புபட்டதாக இருக்கின்ற போதிலும், பெரும்பாலனவை பொழுது போக்கிற்காக விளையாடப்படுபவையாகவே இருக்கின்றன. 

உலகில் விளையாடப்படும் தொழில்முறை அல்லாத கிரிக்கெட் போட்டிகள் சிலவற்றை நோக்குவோம்.  

1. உள்ளக அரங்கு கிரிக்கெட் 

வெளி மைதானங்களில் அல்லாமல் உள்ளக அரங்குகளில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகள் உள்ளக அரங்கு கிரிக்கெட் போட்டிகள் என அழைக்கப்படுகின்றன.  

உள்ளக அரங்கு கிரிக்கெட் போட்டிகள் காலநிலை பிரச்சினைகளால் பாதிக்கப்படாதவை என்பதோடு, கடினபந்து, மென்பந்து ஆகிய இரண்டினையும் கொண்டு விளையாடப்படுகின்றன. உள்ளக அரங்கு கிரிக்கெட் போட்டிகள் பொதுவாக அணிக்கு ஆறு பேர் கொண்டதாகவும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்டதாகவும் இடம்பெறுகின்றன.  

உள்ளக கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து போன்ற நாடுகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தவையாக இருப்பதோடு இப்போட்டிக்காக அங்கே பெரிய தொடர்களும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.  

வளர்ச்சி கண்டுள்ள இந்த உள்ளக கிரிக்கெட்டின் வடிவம் தற்பொழுது தொழில்முறைக்கும் மாற்றம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

2. குறும் கிரிக்கெட் போட்டிகள் 

இவ்வகை கிரிக்கெட் போட்டிகள் குறிப்பிட்ட நேர இடைவெளி ஒன்றுடன் விளையாடப்படுவதோடு, T20 கிரிக்கெட் போட்டிகளினை ஒத்தவிதத்தில் அதிக ஓட்டவேகம் கொண்ட கிரிக்கெட் போட்டிகளாகவும் காணப்படும். 

இந்த குறும் கிரிக்கெட் போட்டிகள் மூலம் குறிப்பிட்ட நாள் ஒன்றில் முழுமையான தொடர் ஒன்றும் நடாத்தி முடிக்கப்படுகின்றது. இவ்வகை போட்டிகள் பொதுவாக மென்பந்தினைக் கொண்டு விளையாடப்படுவதோடு, போட்டிகள் அணிக்கு 6, 7, 9 அல்லது 11 பேர் கொண்டதாக பரவலாக நடைபெறும். 

குறும் கிரிக்கெட் போட்டிகள் தெற்காசிய நாடுகளில் மிகவும் பிரசித்தம் வாய்ந்தவையாக இருக்கின்றன. 

3. கிவிக் கிரிக்கெட் போட்டிகள் 

பொதுவாக சிறுவர்கள் பிளாஸ்டிக் கிரிக்கெட் உபகரணங்களை கொண்டு விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் கிவிக் கிரிக்கெட் போட்டிகள் என அழைக்கப்படுகின்றன. 

சிறுவர்களின் பொழுதுபோக்காக இருக்கும் இவ்வகை கிரிக்கெட் போட்டிகள் மிகவும் குறுகிய மைதான எல்லைக்குள் விளையாடப்படுவதோடு, விதிமுறைகள் அற்றவையாகவும் இருக்கின்றன.  

ஐ.பி.எல் விளையாட கோஹ்லியை ஸ்லெட்ஜிங் செய்ய அஞ்சும் ஆஸி வீரர்கள்

ஐ.பி.எல் ஒப்பந்தங்களை பாதுகாத்து அந்தத் தொடரில் விளையாடுவதற்காக விராத்…

4. பொழுதுபோக்கு கிரிக்கெட் போட்டிகள் 

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வீதிகள், கடற்கரை, வீட்டின் பின் புறங்களில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகள் பொழுதுபோக்கு கிரிக்கெட் போட்டிகளாக அமைகின்றன. மென்பந்து கொண்டு விளையாடப்படும் இவ்வகைப் போட்டிகளில் பல்வேறு விதிமுறைகள் பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

5. பிரன்ச் கிரிக்கெட் போட்டிகள்

கிவிக் கிரிக்கெட் போட்டிகள் போன்று பிரன்ச் கிரிக்கெட் போட்டிகளும் சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாகும். 

பிரன்ச் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட்டாக துடுப்பாட்ட வீரர்களின் கால்கள் பயன்படும். இதில் பங்கெடுக்கும் துடுப்பாட்டவீரர் தனது கால்களை ஒடுக்கி வைத்து துடுப்பாட்டத்தை தொடர வேண்டும். பந்துவீச்சாளர் வீசும் பந்து துடுப்பாட்டவீரரின் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியில் படும் எனில், துடுப்பாட்டவீரர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படுவார். இதுவே, பிரன்ச் கிரிக்கெட்டின் பொது விதியாகும். 

இதோடு, இன்னும் பல விதிகளும் பிரன்ச் கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுகின்றன. பிரன்ச் கிரிக்கெட் போட்டிகள் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பிரபல்யமாக இருப்பதோடு, போட்டிகளுக்காக மென்பந்து மாத்திரம் பயன்படுத்தப்படும்.

இலங்கை வீரர்களின் உடற்தகுதி பேணப்படுகிறதா?

உலகளாவிய ரீதியில் தீவிரம் காட்டிவரும் கொவிட்-19 (கொரோனா வைரஸ்…

6. டென்னிஸ் பந்து கிரிக்கெட்  

கடினத்தன்மை சற்று அதிகமாக இருக்கும் டென்னிஸ் பந்து பயன்படும் கிரிக்கெட் போட்டிகள் டென்னிஸ் பந்து கிரிக்கெட் என அழைக்கப்படுகின்றது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெரும்பாலாக விளையாடப்படும் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள் பொதுவாக அணிக்கு 6 தொடக்கம் 25 ஓவர்கள் வரை கொண்டதாக இடம்பெறுகின்றது. இப்போட்டிகளில் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் பயன்படுத்துவது போன்று பாதுகாப்பு கவசங்களும் பயன்படுத்தப்படுகின்றது. 

இப்போட்டிகள் வெவ்வேறு எண்ணிக்கையான வீரர்களோடு பேஸ்போல் விளையாடும் மைதானங்களில் அதிகம் விளையாடப்படுவது குறிப்பிடத்தக்கது.   

7. டேப் பந்து கிரிக்கெட் 

டேப் பந்து கிரிக்கெட் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மிகவும் பிரபல்யமாக இருக்கும் தொழில்முறை அல்லாத கிரிக்கெட் போட்டிகளாகும். இப்போட்டியில் டேப் சுற்றப்பட்ட மென்பந்து பயன்படுவதோடு அணிக்கு 4 தொடக்கம் 12 ஓவர்கள் வரையில் கொண்டதாக போட்டிகள் இடம்பெறுகின்றன.  டேப் பந்து போட்டிகளில் பந்தின் மீது டேப் சுற்றப்படுவதால் பந்தின் பாரம் சற்று அதிகரிக்கின்றது. இதனால், வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பந்தினை ஸ்விங் செய்யும் வாய்ப்பு கிடைப்பதோடு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பந்தினை இலகுவாக சுழற்றும் வாய்ப்பும் கிடைக்கும். 

பந்தோ அல்லது மைதானமோ பயன்படாத கிரிக்கெட்டை ஒத்த போட்டிகள்

கிரிக்கெட் பந்தினையோ அல்லது மைதானத்தினையோ பயன்படுத்தாமல், கிரிக்கெட் போட்டிகளின் சில விதிமுறைகளை மாத்திரம் பயன்படுத்தி  கிரிக்கெட்டை ஒத்த சில போட்டிகளும் விளையாடப்படுகின்றன. இவை முற்றாக பொழுது போக்கிற்காக மாத்திரம் விளையாடப்படுபவையாகும்.

இலங்கை T20I அணிக்கான எதிர்கால திட்டத்தை கூறும் மிக்கி ஆர்தர்!

T20I அணியை பொருத்தவரை, தங்களுடைய அணியின் பலத்தைக் கொண்டு…

இதில் புத்தக கிரிக்கெட் மிகவும் பிரபல்யமானது. புத்தக கிரிக்கெட் போட்டிகள் புத்தகங்களின் பக்க இலக்கங்களை கொண்டு பல்வேறு விதிமுறைகளுடன் விளையாடப்படுகின்றது. பொதுவாக, புத்தகப் பக்க இலக்கங்கள் ஓட்டங்கள், விக்கெட்டுக்கள் அனைத்தினையும் குறிக்கப் பயன்படுகின்றது.

புத்தக கிரிக்கெட் போட்டிகள் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பாடசாலை மாணவர்களிடையே விளையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

புத்தக கிரிக்கெட்டோடு கணிப்பானில் (Calculator) வரும் வெவ்வேறு இலக்கங்களைக் கொண்டு விளையாடப்படும் கணிப்பான் கிரிக்கெட்டும்  பந்தோ அல்லது மைதானமோ பயன்படாத கிரிக்கெட்டை ஒத்த போட்டிகளுக்கு மற்றுமொரு பிரபல்யமான உதாரணமாக காணப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<