மைலோ அனுசரணையில் நடைபெற்ற 19 வயதுக்குப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஹொக்கி சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், ஆடவர் பிரிவில் கொழும்பு நாலந்த கல்லூரி அணியும் மகளிர் பிரிவில் கோட்டை ஜனாதிபதி மகளிர் கல்லூரி அணியும் வெற்றி பெற்று  சம்பியன் கிண்ணங்களை சுவீகரித்துள்ளன. 

வருடாந்த ஹொக்கி மோதலில் புனித தோமியர் கல்லூரி ஆதிக்கம்

புனித பேதுரு கல்லூரி பம்பலபிடிய, மற்றும் புனித தோமியர் கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளையும் சேர்ந்த பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து….

கொழும்பு நாலந்த கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி

ஆடவர் பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதிகொண்ட போதிலும், போட்டி நிறைவின் போது 1-0 என்ற கோல் அடிப்படையில் நாலந்த கல்லூரி  வெற்றியீட்டியது.

போட்டியின் முதல் பாதி நேரத்தில் இவ்விரு அணிகளுக்கும் கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. அத்துடன் இரு அணிகளினதும் பின்கள வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரணியின் முயற்சிகளை முறியடித்தனர். அந்த வகையில் முதல் பாதி நேரம் எவ்விதமான கோல்களும் இன்றி நிறைவடைந்தது.

இரண்டாம் பாதி நேரம் ஆரம்பித்து சில நிமிடங்களில் ஸ்ட்ரோக்ஸ் மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட  முன்கள வீரர் புத்திக்க டயஸ், அதனை கோலாக மாற்றி நாலந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அதன் பின்னர் ஆனந்த கல்லூரி போட்டியை சமனிலைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நாலந்த கல்லூரியினால் முறியடிக்கப்பட்டன. அந்த வகையில் போட்டி நிறைவின் போது டயசின் கோலுடன் நாலந்த கல்லூரி வெற்றி பெற்று கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.02

ஜனாதிபதி மகளிர் கல்லூரி  எதிர் மியுசியஸ் கல்லூரி

இவ்விரு அணிகளுக்கிடையிலான ஆட்டம் ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்திலேயே கிடைக்கப்பெற்ற வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட மியுசியஸ் கல்லூரி வீராங்கனை சமனி முதல் கோலினை பதிவு செய்து அணியை முன்னிலைப் படுத்தினார். எனினும் அதன் பின்னர் முதல் பாதி நிறைவுறும் வரை  இரு அணிகளாலும் எவ்விதமான கோல்களையும் பதிவு செய்ய முடியவில்லை.

இரண்டாம் பாதி நேரம் ஆரம்பித்து எட்டாவது நிமிடத்தில் ஜனாதிபதி மகளிர் கல்லூரி சார்பாக மலிந்தி மலீஷா முதல் கோலை பதிவு செய்து போட்டியை சமநிலைப் படுத்தினார். அதன் பின்னர் வலிமைமிக்க முன்கள வீரராங்கனைகளைக் கொண்ட ஜனாதிபதி கல்லூரிக்கு பல வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் துரதிஷ்டவசமாக அவை எதுவும் கோலாக மாற்றப்படவில்லை.

அந்த வகையில் போட்டியின் முழு நேரம் நிறைவு பெற்றதால் சம்பியன் அணியை தீர்மானிக்கும் நோக்கில் இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட மேலதிக நேரத்தில் வேகத்துடன் செயல்பட்ட ஜனாதிபதி மகளிர் கல்லூரி. போட்டி நிறைவுற சில நிமிடங்களே எஞ்சிய நிலையில்  Dயினுள் ரீபவுண்ட் முறையில் கிடைக்கப்பெற்ற வாய்ப்பினை  மலிந்தி மலீஷா கோலாக மாற்றி ஜனாதிபதி மகளிர் கல்லூரி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

FA கிண்ண லீக் வெற்றியாளர்கள் விபரம்

2016/17 ஆம் ஆண்டுக்கான காகில்ஸ் புட் சிடி FA கிண்ணத்தின் லீக் மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று…

மூன்றாம் இடத்திற்கான போட்டி

இந்த போட்டித் தொடரில் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியுற்ற அணிகள் மூன்றாவது இடத்துக்காக மோதிக்கொண்டன. அதில் மகளிர் பிரிவில் பிஷோப்ஸ் கல்லூரி அணிக்கும் ஸ்ரீ சுமங்கள கல்லூரி அணிக்குமிடையிலான போட்டியில் சுமங்கள கல்லூரி அணி 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தது.

அதேநேரம், ஆடவர் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் மூன்றாம் இடத்துக்கு போட்டியிட்டன. போட்டியின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் அடிப்படையில் கொழும்பு றோயல் கல்லூரி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி நேரத்தில் மாரிஸ் ஸ்டெல்லா ஒரு கோலினை அடித்த போதிலும் றோயல் கல்லூரி மேலும் இரண்டு கோல்களை பதிவு செய்து 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியை உறுதி செய்து கொண்டது.