இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கு திரும்பிய கிறிஸ் கெய்ஸ்

149
@Hindustan Times
 

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடய 12ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எதிர்பார்த்ததை விட மிக மோசமான பதிவை நிகழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த கிரிக்கெட் தொடரில் தங்களுடைய சொந்த மண்ணில் வைத்து இந்திய அணியை எதிர்த்தாடவுள்ளது.

உலகக்கிண்ண தொடரின் பின்னர் இந்திய அணியும் தங்களுடைய அடுத்த தொடருக்கான ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் மூவகையான தொடர்களிலும் விளையாடவுள்ளது. 

இந்தியாவுடனான டி20 தொடருக்கான குழாமில் மீண்டும் சுனில் நரேன்

நடைபெற்று முடிந்த ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகளில்…

குறித்த சுற்றுப்பயணத்தின் மூவகையான தொடருக்குமான குழாத்தினையும் இந்திய அணி மொத்தமாக அறிவித்துள்ள நிலையில், முதலில் நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் குழாம் கடந்த செவ்வாய்க்கிழமை (23) வெளியானது. 

இந்நிலையில் டி20 தொடரின் பின்னர் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் 14 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உலகக்கிண்ண தொடருக்கான குழாமிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன்படி இவ்வருட ஆரம்பத்தில் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியினுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான 25 வயதுடைய இளம் வீரர் ஜோன் கேம்பல் மீண்டும் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளார். அத்துடன் உலகக்கிண்ண குழாமில் தவறவிடப்பட்ட சகலதுறை வீரரான ரொஸ்டன் சேஸூம் ஒருநாள் குழாமுக்கு திரும்பியுள்ளார். 

மேலும் கடந்த வருடம் மார்ச் மாதம் ஒருநாள் அறிமுகம் பெற்ற 21 வயதுடைய இளம் சகலதுறை வீரர் கிமோ போல் இந்திய A அணியுடன் தற்சமயம் நடைபெற்றுவரும் தொடரில் மேற்கிந்திய தீவுகள் A அணிக்காக பிரகாசித்துவருவதன் காரணமாக தற்போது நேரடியாக இந்திய அணியுடனான ஒருநாள் குழாமில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

டோனியை முழுமையாக இழந்து மேற்கிந்திய தீவுகள் செல்லவுள்ள இந்திய அணி

ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் அரையிறுதியுடன்..

அண்மையில் நிறைவுக்குவந்த உலகக்கிண்ண தொடருடன் ஒருநாள் அரங்கை விட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் ஓய்வு தொடர்பான அறிவிப்பை நீட்டிக்கொண்ட அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் டி20 குழாமில் இடம்பெறாமலிருந்தாலும், தற்போது ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளார். 

ஓய்வு செய்தியை நீடிக்கும் போது, இந்திய அணியுடனான தொடரில் தான் விளையாட தயாராக உள்ளேன் என கிறிஸ் கெய்ல் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான நிலையில் அடுத்து நடைபெறவுள்ள இந்திய அணியுடனான ஒருநாள் தொடர் கிறிஸ் கெய்லுக்கு இறுதி ஒருநாள் தொடராக அமையுமா என்பதை பெறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இதுவரையில் 298 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 10,393 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் இந்திய அணியுடனான தொடரின் போது கிறிஸ் கெய்ல் 13 ஓட்டங்களை கடக்கும் போது அதிகூடிய ஒருநாள் ஓட்டங்களை கடந்தவர்கள் வரிசையில் அதே மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் அணித்தலைவர் பிரேன் லாராவை பின்தள்ளி 12ஆவது இடத்திற்கு முன்னேறுவார்.

இதேவேளை கடந்த உலகக்கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய துடுப்பாட்ட வீரர்களான டெரென் பிராவோ, சுனில் அம்பிரிஸ், வேகப்பந்துவீச்சாளரான செனொன் கேப்ரியல் மற்றும் சகலதுறை வீரர் அஷ்லி நேர்ஸ் ஆகியோர் இந்திய அணியுடனான தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர். 

T20 தலைவராக செயற்படுமாறு மாலிங்கவிடம் கோரிய கிரிக்கெட் சபை

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச…

இரண்டு விக்கெட் காப்பாளர்களுடன் சேர்த்து ஐந்து துடுப்பாட்ட வீரர்களும், ஆறு சகலதுறை வீரர்களும் மற்றும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் குறித்த 14 பேர் கொண்ட குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம்

ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), ஜோன் கெம்பல், எவின் லுவிஸ், சிம்ரென் ஹிட்மெயர், நிக்கொலஸ் பூரண், ரொஸ்டன் சேஸ், பெபியன் எலென், கார்லஸ் பிரெத்வெயிட், கிமோ போல், கிறிஸ் கெய்ல், சில்டொன் கொட்ரெல், ஒசேன் தோமஸ், ஷை ஹோப், கிமா ரோச்

ஒருநாள் தொடர் போட்டி அட்டவணை. (அனைத்து போட்டிகளும் இலங்கை நேரப்படி மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும்.)

  • 8 ஆகஸ்ட் – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – கயானா
  • 11 ஆகஸ்ட் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ட்ரினிடாட்
  • 14 ஆகஸ்ட் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ட்ரினிடாட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<