சந்திமாலின் திறமையை நாம் இன்னும் பார்க்கவில்லை

5623
We are yet to see the best of Chandimal

மதுபோதையில் தள்ளாடுபவர்கள் தெருவிளக்கு கம்பங்களை அது தரும் வெளிச்சத்திற்கு மாறாக நிலையாக நிற்பதற்கு பயன்படுத்துவது போலவே சிலர் புள்ளிவிபரங்களையும் பயன்படுத்துகின்றனர்.

கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த ஜிம்பாப்வேயுக்கு எதிரான இலங்கை ஒரு நாள் குழாமில் இருந்து தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டபோது, அவரது ஓட்ட வேகம் 75 ஆக இருப்பதாகவும் அது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கு போதுமாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஓட்ட சராசரி 35 மற்றும் ஓட்ட வேகம் 75 என்ற அவரது புள்ளி விபரமானது இலங்கையின் சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்தனவை விடவும் சற்றே குறைவாகும். மஹேலவின் ஓட்ட சராசரி 33 என்பதோடு ஓட்ட வேகம் 78 ஆகும்.

முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இதன்படி, 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை..

முக்கியமாக ஒரு முடிவை எடுக்கும்போது எண்கள் மாத்திரம் ஒரே அளவுகோலாக இருக்கக் கூடாது. 2017இல் அவர் டெஸ்ட் போட்டிகளில் 1000க்கும் அதிகமான ஓட்டங்கள் பெற்றுள்ளார். அபூதாபியில் அவர் போட்டியின் வெற்றிக்கு காரணமாக சதம் ஒன்றை பெற்றதோடு டெல்லியில் அணியை காக்கும் துடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தியது மிக முக்கியமான விடயமாகும்.

பெரும்பாலும் நாட்டில் இருந்து வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பியதன் மூலம் சந்திமால் துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் முதல் முறை முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறினார். இந்த ஆண்டில் இலங்கை 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதோடு சந்திமால் பல போட்டிகளை வெல்லத்தான் போகிறார் என்று அவரது ரசிகர்கள் உறுதியாக நட்புகின்றனர்.    

அவரைப் பற்றி ரசிகர்கள் அதிகம் தெரிந்திருந்தால் அவர் மீதான மதிப்பு படிப்படியாக அதிகரிக்கும். ஒரு விசுவாசமான மனிதர் என்ற வகையில் அம்பலங்கொடையில் இருந்து தயக்கத்துடனேயே அவர் கொழும்புக்கு வந்தார். ஆரம்பத்தில் அவர் ஆனந்த கல்லூரியின் கோரிக்கையை நிராகரித்தார். எனினும் தனது லட்சிய நோக்கம் பற்றி அவரது தாயார் நினைவூட்டினார். உண்மையில், தனது மகன் ஒருநாள் இலங்கைக்கு ஆடுவது பற்றி அவர்கள் கனவு கண்டனர்.

ஆனால் கொழும்புக்கு வருவதைக் கொண்டு ஒரு கௌரவமான வேலையை பெற்றுக் கொள்வதன் மூலம் தனது பெரிய குடும்பத்தை ஒருவராக சுமக்கும் தந்தையின் சுமையை சற்று குறைக்கும் சாதாரண நோக்கமே அவரிடம் இருந்தது.

ஆனந்த கல்லூரியில் சந்திமால் சிறந்த எதிர்காலத்திற்கான நற்பெயரை வளர்த்துக் கொண்டார். அவரது கன்னி முதல்தர போட்டியை ஒருபோதும் மறக்க முடியாது. அது கொழும்பு கிரிக்கெட் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஆட்டமல்ல. மாறாக, இலங்கை வந்திருந்த நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கான மூன்று நாள் போட்டி.    

ஹத்துருசிங்கவின் வேண்டுகோளை நிறைவேற்றிய மெதிவ்ஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ..

அந்த போட்டியில் கிறிஸ் மார்டின், டரில் டப்பி, டானியல் விட்டோரி மற்றும் ஜகம் ஓரம் என்ற குறிப்பிடும்படியான சவாலான பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. மூன்றாவது வரிசையில் களமிறங்கிய சந்திமால் முகம்கொடுத்த முதல் பந்தை குறுக்காக விளாசி பௌண்டரி பெற்றார். இதுவே அவர் முதல் தரப் போட்டியில் முகம்கொடுத்த முதல் பந்து. இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொவர் அணியால் முதல் இன்னிங்ஸில் 159 ஓட்டங்களை மாத்திமே பெற முடிந்தது. அதில் சந்திமால் மாத்திரமே அரைச்சதம் ஒன்றைப் பெற்றார். இதன்போது அவர் 11 பௌண்டரிகளுடன் 64 ஓட்டங்களைப் பெற்றார்.  

ஒரு சில மாதங்களுக்குப் பின் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்ட அவர், குமார் சங்கக்காரவின் தலைமையில் தனது கன்னி போட்டியில் ஆடினார். எனினும் பின்னர் அவர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இவ்வாறான ஒரு நிலையில் சந்திக்க ஹத்துருசிங்கவின் மிகுந்த ஈடுபாட்டின் அடிப்படையிலேயே அவர் மீண்டும் ஒரு நாள் குழாமில் தற்பொழுது அழைக்கப்பட்டுள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்துவார் என்று புதிய தலைமைப் பயிற்சியாளர் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்.

” இலங்கை அணியுடன் 2010ஆம் ஆண்டு நான் கடைசியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அது இலங்கை அணிக்காக சந்திமாலின் முதல் சுற்றுப் பயணமாகவும் இருந்தது. அது இந்தியாவுக்கு எதிரான போட்டி. சிக்சர் ஒன்றை விளாசி சதம் பெற்றது எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அப்போது பார்த்த அவரது பண்பில் இப்போது குறை ஏற்பட்டுள்ளது. அது எங்கே போனது என்றே நான் கேட்கறேன்? அதற்கான பதிலை நாம் கண்டுபிடிப்போம் என்று சந்திமால் குறித்த தனது பழைய நினைவை ஹதுருசிங்க ஞாபகமூட்டினார்.    

ஹத்துருசிங்கவின் வெளியேற்றம் இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரும் இழப்பாக இருந்தது. அவருக்கு பதில் டிரெவோர் பெய்லிஸ் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றது ஆரம்பத்திலேயே திட்டமிட்டது. அப்போது இந்த அளவு மோசமாக இருக்கவில்லை.

தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள்..

இலங்கை கிரிக்கெட் சபையில் அப்போது இருந்த பெரும்புள்ளிகள் தமக்கு நெருக்கமானவர்களை முக்கியமான பதவிகளுக்கு நியமித்தது எல்லாம் பிழைத்துப்போவதற்கு ஆரம்பமாக இருந்தது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு வீரர் சந்திமால். சந்திமால் பிரமாதமான கீழ் கையால் மட்டையை சுழற்றும் வீரர். ஸ்குவார் (Square) திசையால் பந்தை வேகமாக அடிப்பது மற்றும் புல் செய்வது அவரது இயல்பான ஆட்டப் பாணி. இந்த இயற்கையான திறமையில் தலையீடுகள் ஏற்பட்டன. விளைவு, அவரது முன்னேற்றம் சரிவடைந்தது.  

எனினும் அவரிடம் இன்னும் அந்த தீப்பொறி இருக்கத்தான் செய்கிறது. சிட்னியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கிண்ண குழு நிலை போட்டியில் அவர் அபார அரைச்சதம் ஒன்றை விளாசினார். அப்போது இலங்கை அணிக்கு 377 என்ற நெருங்க கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் சந்திமால் துடுப்பெடுத்தாடியபோதும் இந்த இலக்கை எட்டுவது சாத்தியமாகவே இருந்தது. ஆனால் தசைப்பிடிப்பால் அவரால் தொடர்ந்து துடுப்பெடுத்தாட முடியாமல் போனது.

மிச்சல் ஜோன்சன் மணிக்கு 140 கிலோ மீற்றருக்கு அதிக வேகத்தில் வீசிய பந்துகளை சந்திமால் வெளியே வந்து எக்ஸ்ட்ரா கவர் திசையினூடாக விளாசி பெற்ற பௌண்டரிகள் பந்துவீச்சாளரை தடுமாறச் செய்தது. அந்த பந்துவீச்சாளர் முந்தைய பருவத்தில் குமார் சங்கக்காரவின் பெருவிரலை காயப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

குழப்பத்திற்கு ஆளான அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க் மிட் பீல்ட் (mid-off) களத்தடுப்பாளரை அகலமாக நிறுத்தினார். எனவே சந்திமாலுக்கு எக்ஸ்ட்ரா கவர் திசையால் ஊடுருவி பார்க்க குறைந்த இடைவெளியே இருந்தது. ஓப் திசையில் முட்டுக்கட்டை போடப்பட்டதால் அடுத்த பந்துக்கு சந்திமால் வெளியே வராமல், மிட் ஓப் திசையில் இருக்கும் இடைவெளியால் பந்தை தட்டிவிட்டார்.  

ஓட்ட வேக விவகாரம் ஒரு பக்கம் இருக்க கடந்த ஆண்டு ஜுனில் அவர் அணியில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதற்கு ஏற்ற பல காரணங்கள் இருக்கின்றன. முதலில், 2016இல் அவர் இலங்கையின் சிறந்த ஒரு நாள் துடுப்பாட்ட வீரராக இருந்தார். அநியாயமான காரணத்திற்காக வெளியேற்றப்பட்டதால் அவர் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து பயணமொன்றைத் தொடங்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். சந்திமாலின் அபார திறமையை பாதுகாத்திருந்தால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இப்படியான நிலைமை எற்பட்டிருக்காது.

கடந்த பல ஆண்டுகளாக இலங்கை அணியின் பல தலைவர்களின் செயற்பாடுகளை பார்த்து நாம் பெருமை அடைந்திருக்கிறோம். டெல்லியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்திய ரசிகர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தனர். எனினும் சந்திமால் இந்திய சுற்றுப்பயணத்தில் காட்டிய ஆதரவுக்கு ரசிர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிவிட்டு விராட் கோஹ்லியிடம் சென்று அவரது அணி தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு வாழ்த்து தெரிவித்தார்.  

ஒரு தலைவர் என்ற வகையில் மதிநுட்பம் கொண்டவராக இருந்தால் மாத்திரம் போதாது. முழு நாட்டுக்குமான பிரதிநிதியாகவும் செயற்பட வேண்டும். சந்திமால் மற்றும் அஞ்செலோ மதிவ்ஸ் போன்றவர்கள் அதற்கு சரியாக பொருந்துபவர்கள்.

சந்திமாலின் சிறந்த அம்சங்களை நீங்கள் இன்னும் காணவில்லை. 2018 அவருக்கு ஒரு மைல்கல் ஆண்டாக இருக்கக் கூடும். அவருக்கு இன்னும் 28 வயது தான் ஆகிறது என்பதை மறக்க வேண்டாம்.

சந்திமால் மீண்டும் இலங்கை ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டமை குறித்த உங்களது கருத்தை கீழே பதிவிடுங்கள்..

>> மேலும் பல சுவையான விளையாட்டு செய்திகளைப் படிக்க <<