இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் குழாத்தில் 4 மாற்றங்கள்

136
 

இங்கிலாந்து – இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிகள் இடையில் நடைபெறவுள்ள இளையோர் ஒருநாள் தொடருக்கான இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த இளையோர் ஒருநாள் தொடருக்கான இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியில், கடைசியாக இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி பங்களாதேஷிற்கு எதிராக விளையாடியிருந்த ஒருநாள் தொடரில் ஆடிய நான்கு வீரர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

>>இளையோர் உலகக் கிண்ணம் 2022: சவாலான குழுவில் இலங்கை

இதன்படி, இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியில் இருந்த துடுப்பாட்ட வீரர்களான ஹரிந்து ஜயசேகர, றயன் பெர்னாண்டோ, லஹிரு தெவட்டகே மற்றும் ஜீவக்க சஷீன் ஆகியோரே தற்போது குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி வீரரான அபிஷேக் லியனராச்சி, கண்டி திரித்துவ கல்லூரியின் ரணுத சோமரட்ன, கண்டி புனித அந்தோனியர் கல்லூரியின் அஞ்சல பண்டார மற்றும் லும்பினி கல்லூரியின் சக்குன லியனகே ஆகியோர் இந்த வீரர்களுக்குப் பதிலாக புதிய குழாத்தில் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர்.

அதேநேரம், இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிரான தொடரிலும், இலங்கை குழாத்தினை துனித் வெல்லால்கே வழிநடாத்த அணிக்கு சகலதுறை வீரராகவும், பிரதி தலைவராகவும் ரவின் டி சில்வா பங்களிப்பு வழங்கவிருக்கின்றார்.

இதேநேரம், இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்துறைக்கு அபிஷேக் லியனாரச்சி, ரணுத சோமரட்ன, சகுன லியனகே மற்றும் அஞ்சன பண்டார ஆகியோர் பலம் வழங்குகின்றனர்.

>>SSC முதல் வெற்றி; தமிழ் யூனியனுக்கு மற்றொரு வெற்றி

அதேநேரம், இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடர், நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, இத்தொடரில் பங்கெடுக்கும் இங்கிலாந்து அணி இலங்கை வந்து ஏற்கனவே பயிற்சிகளை ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட குழாம்

 1. துனித் வெல்லாலகே (அணித் தலைவர் – மருதானை புனித ஜோசப் கல்லூரி)
 2. ரவீன் டி சில்வா (கொழும்பு நாலந்தா கல்லூரி)
 3. சதீஷ ராஜபக்ஷ (கொழும்பு றோயல் கல்லூரி)
 4. பவன் பத்திராஜ (கண்டி திரித்துவக் கல்லூரி)
 5. சதீஷ ஜயவர்தன (மருதானை புனித ஜோசப் கல்லூரி)
 6. சமிந்து விக்ரமசிங்க (கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரி)
 7. வினுஜ ரன்புல் (கொழும்பு நாலந்தா கல்லூரி)
 8. ஷெவோன் டேனியல் (மருதானை புனித ஜோசப் கல்லூரி)
 9. சசங்க நிர்மால் (ரத்கம தேவபத்திராஜ கல்லூரி)
 10. மல்ஷ தருபதி (அம்பாலங்கொட மாதம்பே மத்திய கல்லூரி)
 11. வனுஜ சஹன் (பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி)
 12. தனால் ஹேமானந்த (பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி)
 13. ட்ரவின் மெத்திவ்ஸ் (கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரி)
 14. யசிரு ரொட்றிகோ (கல்கிஸ்ஸை புனித தோமையர் கல்லூரி)
 15. மதீஷ பத்திரன (கண்டி திரித்துவக் கல்லூரி)
 16. லஹிரு அபேசிங்க (கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரி)
 17. அபிஷேக் லியனராச்சி (டி.எஸ். சேனநாயக்க கல்லூரி),
 18. ரணுத சோமரட்ன (கண்டி திரித்துவ கல்லூரி)
 19. அஞ்சல பண்டார (கண்டி அந்தோனியர் கல்லூரி)
 20. சக்குன லியனகே (லும்பினி கல்லூரி)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<