T20 உலகக் கிண்ணத்தில் விராட் கோலிக்கு ஓய்வா?

59

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான விராட் கோலி இந்த ஆண்டு (2024) நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடுவது சந்தேகம் என சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

LPL, லங்கா T10 தொடர்களுக்கான புதிய அணிகள் அறிமுகம்!

ஒன்பதாவது முறையாக T20 உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறவிருக்கின்றது.    

இந்த உலகக் கிண்ணத் தொடருக்கான எதிர்பார்க்கை அணிகளை மே மாத ஆரம்பத்தில் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ICC) அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் சில ஊடக அறிக்கைகள், T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் அதன் நட்சத்திர துடுப்பாட்டவீரரான விராட் கோலி இடம்பெறுவது சந்தேகம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

T20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியின் தலைவராக ரோஹிட் சர்மா செயற்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து, ICC இன் தொடர்கள் எதனையும் வெற்றி கொள்ளாத இந்திய அணி புதிதாக செயற்படுத்தவிருக்கும் விஷேட திட்டம் ஒன்றுக்கு அமயவே விராட் கோலிக்கு T20 உலகக் கிண்ணத்தில் ஓய்வு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன 

அதேவேளை விராட் கோலிக்குப் பதிலாக இளம் வீரர் ஒருவர் இந்திய T20 உலகக் கிண்ண அணியில் உள்வாங்கப்பட முடியும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. எனினும் இது தொடர்பிலான இறுதி முடிவு அஜித் அகார்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களே எடுப்பார்கள் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.   

செய்தி மூலம் – Times of India 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<