சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி

113
Getty Images

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், துடுப்பாட்ட ஜாம்பவனுமான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவிரைவாக 23,000 ஓட்டங்களை கடந்த வீரராக புதிய சாதனையினை நிலைநாட்டியிருக்கின்றார். 

இலங்கையுடனான தொடரிலிருந்து டெம்பா பவுவா விலகல்

இந்திய – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த தொடரின் நான்காவது போட்டியின் முதல் நாளில் நேற்று (02) தன்னுடைய 490ஆவது இன்னிங்ஸினை ஆடிய விராட் கோலி குறித்த இன்னிங்ஸின் போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 23,000 ஓட்டங்களை கடந்தே, இந்த மைல்கல்லை அதிவிரைவாக எட்டிய வீரராக புதிய சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் 522 இன்னிங்ஸ்களில் 23,000 ஓட்டங்களை கடந்ததே, கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவிரைவாக 23,000 ஓட்டங்களை கடந்த சாதனையாக கருதப்பட்டிருந்தது. இந்நிலையில், விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையினை தகர்த்தே இந்த புதிய சாதனையினை நிலைநாட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இறுதிவரை போராடிய இலங்கைக்கு திரில் வெற்றி

கடந்த 2019ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி சதங்கள் எதனையும் பதிவு செய்யாத போதும், 55 இற்கு கிட்டவான துடுப்பாட்ட சராசரியுடன் தற்போது அதிவிரைவாக 23,000 ஓட்டங்களை பெற்று தனது திறமையினை மீண்டும் நிரூபித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<>