சோண்டர்ஸை வீழ்த்தி தொடர்ந்து 3ஆவது முறை ஏப்.ஏ கிண்ண சம்பியனான இராணுவப்படை

713
Fa Cup Champions 2018

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற மிகவும் விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தை 4-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய நடப்புச் சம்பியன் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் வான்டேஜ் எப்.ஏ கிண்ணத் தொடரில் சம்பியனாகத் தெரிவாகியுள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இராணுவப்படை விளையாட்டுக் கழகம், இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழக அணியை வீழ்த்தியும், சோண்டர்ஸ் வீரர்கள் கொழும்பு கால்பந்துக் கழகத்தை வீழ்த்தியும் இன்றைய இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர்.

பொலிஸை வீழ்த்திய நடப்புச் சம்பியன் இராணுவ அணி எப்.ஏ கிண்ண இறுதி மோதலில்

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரில் விறுவிறுப்பாக இடம்பெற்ற அரையிறுதி…..

போட்டி ஆரம்பமாகி முதல் நிமிடத்தில் சோண்டர்ஸ் இளம் வீரர் சுந்தராஜ் நிரேஷ் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்து கோலின் வலது பக்க கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்குள் வந்தது.

ஆட்டத்தில் 12 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் பெனால்டி எல்லையின் ஒரு திசையில் இருந்து சுராஜ் பேனார்ட் பந்தை பரிமாற்றம் செய்தார். இஸ்ஸடீன் அதனைப் பெற்று, பின்கள வீரரிடமிருந்து தன்னை தனிமைப்படுத்தி பெனால்டி பெட்டியில் இருந்து பந்தை கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

தொடர்ந்து மிகவும் வேகமாக பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்ட சோண்டர்ஸ் வீரர்கள், அடுத்தடுத்து எதிரணியின் கோல் நோக்கி முயற்சிகளை எடுத்தனர்.

இன்ந்ரீவ உதார மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தை, கோல் கம்பங்களுக்கு மத்தியில் இருந்த லுத்பி, இடது புறத்திற்கு பாய்ந்து அதனைப் பற்றிக்கொண்டார்.   

முதல் கோல் பெறப்பட்டு 10 நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்ற சுராஜ் பேனார்ட், கோல் எல்லைவரை வந்து, சோண்டர்ஸ் கோல் காப்பாளர் அசங்க விராஜ் இல்லாத திசையினூடாக பந்தை கோலுக்குள் செலுத்தி இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

போட்டியின் 34ஆவது நிமிடத்தில் இராணுவப்படை அணித் தலைவர் ரொஷான் அப்புஹாமி தமது அணியின் பெனால்டி எல்லையில் எதிரணி வீரர் உதாரவை வீழ்த்த, சோண்டர்ஸ் அணிக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை சுந்தராஜ் நிரேஷ் கோலாக்கினார்.

தொடர்ந்து முதல் பாதியில் இரு அணியினரும் வாய்ப்புக்களைப் பெற்ற போதும் அவை கோலுக்கான நிறைவின்றிப் போக, இராணுவப்படையின் முன்னிலையோடு முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்தது.

முதல் பாதி: இராணுவப்படை வி.க 2 – 1 சோண்டர்ஸ் வி.க

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களில் எதிரணியின் கோல் பரப்பில் இருந்து உள்ளனுப்பிய பந்தை மதுஷான் டி சில்வா கோலுக்கு அண்மையில் இருந்த சுராஜ் பேனார்டுக்கு வழங்க, அவர் அதனை கோல் நோக்கி உதைந்தார். எனினும், சோண்டர்ஸ் பின்கள வீரர்கள் கோல் எல்லையில் இருந்து பந்தைத் தடுத்து அங்கிருந்து வெளியேற்றினர்.

ஏற்கனவே, முதல் பாதியின் இறுதியில் மாற்று வீரராக மைதானத்திற்குள் நுழைந்த இராணுவப்படை வீரர் சஜித் குமார, போட்டியின் 55ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் வீரர் சனோஸ் சமீரவை முறையற்ற விதத்தில் வீழ்த்த, அவர் இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்றமையினால், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

DCL சம்பியன் கொழும்பு அணியை வீழ்த்திய சோண்டர்ஸ் எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டியில்

சுகததாஸ அரங்கை அலங்கரித்த வான்டேஜ் எப்.ஏ கிண்ணத்தின் கொழும்பு கால்பந்து கழகம்….

எனினும், 10 வீரர்களுடன் ஆடிய இராணுவப்படை வீரர்கள், தொடர்ந்து அடுத்த கோலுக்கான முயற்சிக்காக போராடினர்.

62ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தை லுத்பி பாய்ந்து வெளியே தட்டி விட்டார். இதன்போது கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை இராணுவப்படை வீரர்கள் தடுக்க, மீண்டும் நிரேஷ் கோல் நோக்கி உதைந்த பந்து இடது பக்க கம்பங்களை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

தொடர்ந்து ரொஷான் கோல் திசைக்குள் செலுத்திய பந்தை அசங்க விராஜ் பாய்ந்து பிடித்தார்.

மீண்டும் 75 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து மதுஷான் டி சில்வா முன்னோக்கி எடுத்து வந்த பந்தை கோல் எல்லையில் வைத்து பரிமாற்றம் செய்யும்போது அசங்க விராஜ் வேகமாக வந்து பந்தைத் தடுத்தார்.

78ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை நிரேஷ் பெற்றார். மத்திய களத்தில் இருந்து உதைந்த பந்து கோலின் மேல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

83 ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் வீரர் பிரியதர்ஷன முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கும் போட்டியின் இரண்டாவது மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. எனவே, போட்டியின் இரண்டாவது சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்ட வீரராக அவரும் மைதானத்தை விட்டு வெளியேற, இரண்டு அணிகளும் தலா 10 பேருக்கு குறைக்கப்பட்டன.

இதன்போது கிடைத்த ப்ரீ கிக்கின் போது உள்ளனுப்பப்பட்ட பந்தை சோண்டர்ஸ் வீரர்கள் தடுக்க, மீண்டும் பந்தைப் பெற்ற இஸ்ஸடீன் கோலின் ஒரு திசையினூடாக கோலுக்குள் செலுத்தி தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

ஆட்டத்தின் 89ஆவது நிமிடத்தில் எதிரணி வீரரைத் தாக்கிய சுந்தராஜ் நிரேஷ் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

போட்டியின் உபாதையீடு நேரத்தில் சோண்டர்ஸ் வீரர்களுக்கு எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து கிடைத்த ப்ரீ கிக்கின் போது உள்ளனுப்பப்பட்ட பந்தை சமோதி டில்ஷான் கோலுக்குள் செலுத்தி சோண்டரஸ் அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றார்.

தொடர்ந்து ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் இராணுவப்படை அணிக்கு மாற்று வீரராக வந்த கசுன் பிரதீப் ஒரு கோலைப் பெற, போட்டியின் முடிவில் நடப்புச் சம்பியன் இலங்கை இராணுவப்படை வீரர்கள் தொடர்ந்து 3ஆவது முறையாக எப். ஏ கிண்ணத்தின் சம்பியன்களாகத் தெரிவாகினர்.

முழு நேரம்: இராணுவப்படை வி.க 4 – 2 சோண்டர்ஸ் வி.க

கோல் பெற்றவர்கள்

இராணுவப்படை வி.க – மொஹமட் இஸ்ஸடீன் 17’ & 84’, சுராஜ் பேனார்ட் 27’, கசுன் பிரதீப் 90+3’

சோண்டர்ஸ் வி.க – சுந்தராஸ் நிரேஷ் 34’, ஷமோத் டில்ஷான் 90+3’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்  

இராணுவப்படை வி.க – சஜித் குமார 47’ & 55’, அசிகுர் ரஹ்மான் 53’

சோண்டர்ஸ் வி.க – கசுன் ஜயசூரிய 30’, ஷானுக எரங்க 37’, S.பிரியதர்ஷன 65’ & 83’

அப் கண்ட்ரி லயன்ஸ் அணியுடனான போட்டியை போராடி வென்ற சுபர்சன்

பேருவளை சுபர்சன் மற்றும் நாவலப்பிடிய அப் கண்ட்ரி லயன்ஸ் ஆகிய அணிகளுக்கு…..

சிவப்பு அட்டை பெற்றவர்கள்  

இராணுவப்படை வி.க – சஜித் குமார 55’

சோண்டர்ஸ் வி.க – S.பிரியதர்ஷன 83’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<