அமரர் வைத்தியலிங்கம் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணம் கலையரசி அணிக்கு

256

வடமாகாண கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் முதல் முறையாக நடத்திய அமரர் வைத்தியலிங்கம் ஞாபகார்த்த கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆவரங்கால் மத்திய அணியை 2-1 என வீழ்த்திய கெருடாவில் கலையரசி அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

இதன்மூலம், சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர் அமரர் நடராசா வைத்தியலிங்கம் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்த கெருடாவில் கலையரசி ஜோடி 8,000 ரூபாய் பணப்பரிசையும் வென்றது.

Photos: Vaithyappa Memorial Beach Volleyball Championship (2018) | Northern Province

Photos of Vaithyappa Memorial Beach Volleyball Championship | Northern Province

வல்வட்டித்துறை, ரேவடி சைனிங்ஸ் உள்ளாச கடற்கரையில் 32 அணிகளின் பங்கேற்புடன் கடந்த சனிக்கிழமை (18) ஆரம்பமான இந்த கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஞாயிறன்று (19) இடம்பெற்றன.

இதில் திறமையை வெளிக்காட்டிய கலையரசி அணி இறுதிப் போட்டியில் ஆவரங்கால் மத்திய அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் ஆடியதை பார்க்கமுடிந்தது.

இதன் முதல் செட்டை கெருடாவில் கலையரசி அணி 21-18 என கடும் போட்டிக்குப் பின் வெற்றி கொண்டது. எனினும் இரண்டாவது செட்டில் ஆவரங்கால் மத்திய அணி பதிலடி கொடுத்து அந்த செட்டை 21-18 என கைப்பற்ற, போட்டி முடிவை தீர்மானிக்கும் கடைசி செட்டுக்கு சென்றது.

எனினும், முன்றாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய கலையரசி ஜோடி 15-06 என இலகுவாகக் கைப்பற்றி சம்பியனானது. இறுதிப் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட கலையரசி அணியின் ஜெயராசா டிலக்ஷன் ஆட்ட நாயகனாக தெரிவானார். இவருடன் கந்தசாமி கவிசன் அந்த அணிக்காக ஆடினார்.

இந்த போட்டித் தொடரில் சோபித்த ஆவரங்கால் மத்திய அணியின் சிவகுமார் சுஜீவன் தொடர் நாயகன் விருதை வென்றார். ஆவரங்கால் மத்திய அணிக்காக ஆடிய மற்றைய வீரர் சிவகுமார் சுஜீவன் ஆவார்.

தென் கொரியாவை இலகுவாக வீழ்த்திய இலங்கை கடற்கரை கரப்பந்து ஜோடி

இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை ஆடவர் கடற்கரை கரப்பந்தாட்ட ஜோடி தென்……

முன்னதாக கலையரசி அணி தனது அரையிறுதியில் ஆவரங்கால் இந்து இளைஞன் அணியை 2-1 என வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆவரங்கால் மத்திய அணி தனது அரையிறுதிப் போட்டியில் கலையரசி B அணியை 2-0 என நேர் செட்களில் வென்றது.  

இதன்படி மூன்றாவது இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் கலையரசி B அணியை 21-18, 19-21 மற்றும் 15-13 என்ற செட்களில் ஆவரங்கால் இந்து இளைஞன் அணி வீழ்த்தியது. தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்த அணிக்கு 3,000 ரூபாய் பணப்பரிசுடன் அதற்கான கிண்ணம் வழங்கப்பட்டதோடு இரண்டாவது இடத்தை பெற்ற ஆவரங்கால் மத்திய அணிக்கு 5,000 ரூபாய் பணப்பரிசு கிடைத்தது.  

கடற்கரை கரப்பந்தாட்டத்தில் வட மாகாண வீரர்கள் சோபிப்பதற்கு இவ்வாறான போட்டித் தொடர்கள் பெரும் உந்துதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<