“வடக்கின் கில்லாடி யார்?” தொடரின் காலிறுதியில் பாடும்மீன், கலைமதி, இருதயராசா அணிகள்

320

இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும்வடக்கின் கில்லாடி யார்?உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இடண்டாவது சுற்றின் மூன்று ஆட்டங்கள்  நேற்றைய தினம் (23) அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றிருந்தன.

வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் எதிர் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம்  

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமாகிய யாழ் மாவட்டத்தின் இரு முன்னணி அணிகளுக்கிடையிலான மோதலாக அமைந்திருந்த இப்போட்டியில், கலைமதி அணியினர் முதற் பாதியில் ஒரு கோலினைப் போட்டு அணியினை முன்னிலைப்படுத்தினர்.  

“வடக்கின் கில்லாடி யார் ?” தொடரின் காலிறுதியில் அச்செளு வளர்மதி மற்றும் யங்ஹென்றீசியன்ஸ்

Thepapare.com இன் ஊடக அனுசரணையில்…

அதனைத்  தொடர்ந்து இரு அணியினரும் அடுத்த கோலிற்கு முயற்சி செய்த போதும் கோல் காப்பாளர்கள் லாவகமாகப் பந்தைத் தடுத்தனர்.  

தொடர்ந்து ஆரம்பமாகிய இரண்டாவது பாதியாட்டத்தின் போதும் மேலும் ஒரு கோலினைப் பதிவு செய்த கலைமதி, போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முழு நேரம் : ஐயனார் வி.க 00 – 02 கலைமதி வி.க

  • ஆட்டநாயகன் சந்துரு (கலைமதி வி.க)

கோல் பெற்றவர்கள்

நவிண்டில் கலைமதி வி.க – பாணுப்பிரியன், விஜேன்சன்


குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் எதிர் இரணைமாதா நகர் சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம்

தொடரின் நடப்புச் சம்பியன்களான பாடும்மீன் அணியினை எதிர்த்து இரணைமாத நகர் மேரிஸ் அணியினர் மோதியிருந்தனர்.  

நடப்புச் சம்பியன்கள், பத்திரிசியார் கல்லூரி வீரர் சாந்தன் மூலமாக கோல் கணக்கினை ஆரம்பித்தனர். கீதன் மேலும் ஒரு கோலினைப் பதிவு செய்ய முதற் பாதியாட்டத்தின் நிறைவின் போது இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றிருந்தது பாடும்மீன் அணி.

Photos: Vadakkin Killadi Yaar??? Football Tournament | Day 06 Matches

Photos: Vadakkin Killadi Yaar??? Football Tournament | Day 06 Matches

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தினை தொடர்ந்த பாடும்மீன் அணிக்கு பத்திரிசியார் கல்லூரியின் மற்றொரு வீரரான ஹெயின்ஸ் ஒரு கோலினைப் பெற்றார்.

ஐசன் மூலமாக மேலுமொரு கோலினைப் பதிவு செய்த பாடும்மீன் அணியினர் தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியிலும் நான்கு கோல்கள் வித்தியாசத்தில்  வெற்றிபெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முழு நேரம் : பாடும்மீன் வி.க 04 – 00 சென். மேரிஸ் வி.க

  • ஆட்டநாயகன் – கீதன் (பாடும்மீன் வி.க)

கோல் பெற்றவர்

பாடும்மீன் வி.க – சாந்தன், கீதன், ஹெயின்ஸ், ஐசன்


மெலிஞ்சிமுனை இருதயராசா விளையாட்டுக் கழகம் எதிர் ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம்

மன்னாரின் பலம் வாய்ந்த அணியான ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணியினை எதிர்த்து தீவகத்தின் முன்னணி அணியான மெலிஞ்சிமுனை இருதயராசா அணி மோதியது.  

போட்டியின் 8ஆவது நிமிடத்தில் தரன் மூலமாக முதல் கோலினைப் போட்டு மன்னார் வீரர்களிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது இருதயராசா அணி.

முதற் பாதியாட்டத்தின் பிற்பகுதியில் மேலும் ஒரு கோலினை பதிவு செய்த இருதயராசா அணியினர், முதற்பாதியாட்டத்தின் நிறைவில் இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றிருந்தனர்.

Photos: Vadakkin Killadi Yaar??? Football Tournament | Day 02 Evening Matches

ThePapare.com | Murugaiah Saravanan | 17/09/2018 Editing and re-using images without permission of ThePapare.com will…

இரண்டாவது பாதியாட்டத்தின் போது தமது முதலாவது கோலினைப் பெறுவதற்காக ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய அணியினர் அடுத்தடுத்த முயற்சிகளினை மேற்கொண்ட போதும் அவற்றை மெலிஞ்சிமுனை அணியினர் இலகுவாகத் தடுத்தனர்.

கோல்களேதுமின்றி இரண்டாவது பாதியாட்டம் நிறைவிற்கு வர, போட்டியில் வெற்றி பெற்ற இருதயராசா அணியினர் தீவகத்தின் ஒரே அணியாக காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முழு நேரம் : இருதயராசா வி.க 02 – 00 ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய வி.க

  • ஆட்டநாயகன் – அருள்ராஜ் (இருதயராசா வி.க)

கோல் பெற்றவர்கள்  

இருதயராசா வி.க – தரன் 8′ அருள்ராஜ் 20′

வடக்கின் கில்லாடி யார்?” தொடரின் போட்டி முடிவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் புகைப்படங்களிற்கு ThePapare.com உடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

>>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<<